நிஸான், மேக்னைட் குரோ ஸ்பெஷல் எடிஷனை வெளியிட்டுள்ளது… மேலும் மேக்னைட் AMT யையும் காட்சிப்படுத்தியது
anonymous ஆல் அக்டோபர் 05, 2023 02:27 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 -க்கான நிஸான் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக மேக்னைட் குரோ எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது
-
மேக்னைட் குரோ உட்புறம் வெளிப்புறம் இரண்டிலும் ஆல் - பிளாக் தீம் உடன் வருகிறது.
-
பிளாக் நிற கிரில், அலாய்கள் மற்றும் டோர் ஹேண்டில்கள், குரோ பேட்ஜிங் மற்றும் ரெட் பிரேக் காலிப்பர்கள் உள்ளன.
-
இந்த எஸ்யூவி -யில் 1 லிட்டர் N/A பெட்ரோல் இன்ஜின் கொண்ட AMT கியர்பாக்ஸை நிஸான் வழங்குகிறது
-
நிஸான் ஏற்கனவே மேக்னைட்டின் 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டுடன் CVT ஆப்ஷனை வழங்குகிறது.
-
AMT கார் வேரியன்ட்கள் மேனுவல் மாடல்களை விட சுமார் ரூ.55,000 கூடுதல் விலையுடன் வரும்.
நிஸான் மேக்னைட் இந்தியாவில் குரோ சிறப்பு பதிப்பில் சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அதன் புதிய AMT எடிஷனும் சிறப்பு எடிஷன் உடன் சேர்த்து வெளியிடப்பட்டது. வரவிருக்கும் ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 -க்காக நிஸான் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இடையேயான ஒத்துழைப்பிலிருந்து குரோ எடிஷன் உருவானது. இரண்டும் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த எஸ்யூவி -யின் ஸ்பெஷல் எடிஷன் பிளாக் ஷேடு, பிளாக் நிற கிரில், அலாய்கள் மற்றும் ரெட் பிரேக் காலிபர்களுடன் வருகிறது. இதில் முன்பக்க ஃபென்டர்களில் குரோ பேட்ஜிங் இடம் பெற்றுள்ளது.
உட்புறமும் ஆல் பிளாக் நிற வடிவமைப்பைப் பெறுகிறது. சீட் கவர்கள், டோர் ஹேண்டில்கள், ஸ்டீயரிங் வீல் மற்றும் AC வென்ட்கள் போன்ற கூறுகளில் பிளாக்-வண்ணம் ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
குரோ எடிஷன், மேக்னைட்டின் ஹை-எண்ட் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது என்பதால், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், 360 டிகிரி கேமரா மற்றும் பின்புற AC வென்ட்கள் போன்ற அம்சங்களுடன் வருகிறது.
இதையும் பாருங்கள்: ஹூண்டாய் நிறுவனம் தனது தயாரிப்புகளிடையே இப்போது 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக வழங்குகிறது.


மேக்னைட் குரோ எடிஷனில் பவர்டிரெயின் ஆப்ஷன்களை நிஸான் வெளியிடவில்லை, ஆனால் நிறுவனம் கிடைக்கக்கூடிய அனைத்து ஆப்ஷன்களையும் வழங்கும் என்று தெரிகிறது. மேக்னைட் எஸ்யூவி -யில் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனையும் நிஸான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது 1 லிட்டர் N.A. பெட்ரோல் இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது. நிஸான் இப்போது மேக்னைட்டை இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களில் வழங்குகிறது: 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT உடன் இணைக்கப்பட்ட 1 லிட்டர் N/A (72PS/96Nm) மற்றும் மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் தேர்வுடன் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் (100PS/160Nm).
AMT -யின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் மேனுவல் வேரியன்ட்டை விட சுமார் ரூ. 55,000 கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மாருதி ஃபிரான்க்ஸ், ஹூண்டாய் எக்ஸ்டர், டாடா பன்ச், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV300, கியா சொனெட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய மாடல்களுடன் மேக்னைட் போட்டி போடும்.
மேலும் படியுங்கள்: நிஸான் மேக்னைட் ஆன் ரோடு விலை