ஐரோப்பாவில் தென்பட்ட புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் !
published on ஏப்ரல் 03, 2023 04:53 pm by shreyash for ரெனால்ட் டஸ்டர் 2025
- 34 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்பை ஷாட் புதிய டஸ்டர் முந்தையதை விட பெரிய பரிமாணங்களைக் கொண்டிருக்கும் என்பதைக் காட்டுகிறது
-
புதிய டஸ்டர் ரெனால்ட்-நிஸானின் புதிய CMF-B கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.
-
புதிய பிளாட்ஃபார்ம் ICE மற்றும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை ஆதரிக்கிறது.
-
இதன் வடிவமைப்பு டாசியா பிக்ஸ்டர் கான்செப்ட்டில் இருந்து மிகவும் பெறப்பட்டுள்ளது.
-
2025 ஆம் ஆண்டில் இது இந்தியாவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கூடவே நிஸான் தயாரிப்பும் கிடைக்கும்.
அடுத்த தலைமுறை டஸ்டர் தற்போது தயாரிப்பு நிலையில் உள்ளது . 2024 -ல் எதிர்பார்க்கப்படும் உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக இது ஐரோப்பாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் வழங்கப்படும் இரண்டாம் தலைமுறை மாடலை இந்தியா தவறவிட்டாலும், முதல் தலைமுறை டஸ்டர் 2022 -ம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கு நிறுத்தப்பட்டுவிட்டது. இருப்பினும், டஸ்டர் பெயர்ப்பலகையானது வரவிருக்கும் உலகளாவிய மாடலுடன் இந்தியாவுக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வடிவமைப்பு, பெரிய பரிமாணங்கள்
முழுவதுமாக உருவ மறைப்பு செய்யப்பட்ட கார் சாலையில் சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை காட்சிகளின் அடிப்படையில், புதிய தலைமுறை ரெனால்ட் எஸ்யூவி -யின் வடிவமைப்பு டாசியா பிக்ஸ்டர் கான்செப்ட் -லிருந்து மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. எஸ்யூவி -யின் ஒட்டுமொத்த தோற்றம் மிகவும் நேர்த்தியாகவும் ஸ்டைலாகவும் வளர்ந்துள்ளது. எஸ்யூவி -யின் முன்பகுதியில் டூயல் ஸ்ட்ரிப் LED DRL -கள் மற்றும் ஒரு பெரிய ஏர் டேம் உள்ளது, இது கிளாடட் செய்யப்பட்ட பம்பரின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்கிறது.
மேலும் படிக்க: நிஸான் ரெனால்ட் ட்ரைபரின் சொந்த எடிஷனை அறிமுகப்படுத்த உள்ளது
எஸ்யூவி -யின் வடிவமானது, பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது, சதுரமான வீல் ஆர்குகள் மற்றும் வீங்கிய ஃபெண்டர்கள் இல்லாமல் நெறிப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஸ்பைட் எஸ்யூவியின் பின்புற வடிவமைப்பு ஹன்ச்பேக் வடிவத்தைக் கொண்டிருந்தாலும், அதன் உயரமான ரூஃப்லைன் மற்றும் ஒருங்கிணைந்த ரூஃப் ஸ்பாய்லருடன் கிரிஸ்ப் ப்ரொப்போஷன்களைக் கொண்டுள்ளது. தற்போதைய இரண்டாம் தலைமுறை டஸ்டர் 4.34 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் அதன் அடுத்து வரும் வாகனம் சோதனை ஓட்டத்தில் பெரியதாக தெரிகிறது.
புதிய தளம்
மூன்றாம் தலைமுறை டஸ்டர் ஆனது ரெனால்ட்-நிஸானின் சமீபத்திய CMF-B கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது, இரண்டாம் தலைமுறை யூரோ-ஸ்பெக் கேப்டூரைப் போலவே, ICE மற்றும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன்கள் இரண்டையும் சப்போர்ட் செய்கிறது. டாசியா பிராண்டின் கீழ், புதிய டஸ்டர் நிச்சயமாக வலுவான-ஹைப்ரிட் பவர்டிரெய்னின் ஆப்ஷனைப் பெறும், மேலும் இது ரெனால்ட்-பேட்ஜ் பதிப்பிலும் வழங்கப்படலாம். இந்த இயங்குதளம் CMF-BEV ஆர்க்கிடெக்சருடன் நெருக்கமாக தொடர்புடையது, எனவே எஸ்யூவி ஆனது எதிர்காலத்தில் அனைத்து மின்சார பதிப்பையும் பெறலாம்.
மேலும் படிக்க: 4 எஸ்யூவிக்கள் மற்றும் 2 EV க்கள் இந்தியாவிற்கான ஆறு புதிய மாடல்களை நிஸான் & ரெனால்ட் அறிமுகப்படுத்த உள்ளது
எதிர்பார்க்கப்படும் இந்திய வெளியீடு
ரெனால்ட்-நிசான் ஆட்டோமோட்டிவ் குழுமம், 2025 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்கான புதிய தயாரிப்புகள் பற்றிய திட்டங்களைப் பகிர்ந்து கொண்டது, இதில் நான்கு எஸ்யூவிகள் அடங்கும். ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் டுயோ போன்ற புதிய தலைமுறை டஸ்டர் இவற்றில் ஒன்று கண்டிப்பாக இருக்கும், என்பதுடன் நிஸான் – பேட்ஜ் உடன் சிறிய மாற்றத்துடன் வருகிறது. மாருதி கிராண்ட் விட்டாரா,டொயோட்டா ஹைரைடர்,ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ்,MG ஆஸ்டர், வோக்ஸ்வாகன் டைகன் மற்றும் ஸ்கோடா குஷாக் போன்றவற்றை எதிர்கொள்ளும்.