- + 15படங்கள்
ரெனால்ட் டஸ்டர் 2025
change carரெனால்ட் டஸ்டர் 2025 இன் முக்கிய அம்சங்கள்
engine | 1499 cc |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் |
fuel | பெட்ரோல் |
டஸ்டர் 2025 சமீபகால மேம்பாடு
லேட்டஸ்ட் அப்டேட்: மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டர் உலகளவில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் கடைசியாக விற்பனை செய்யப்பட்ட பழைய இந்தியா-ஸ்பெக் ரெனால்ட் டஸ்ட்டருடன் புதிய டஸ்டர் காரை ஒப்பிட்டுப் பார்த்தோம். அதை இங்கே பார்க்கலாம்.
அறிமுகம்: அக்டோபர் 2025 -க்குள் ரெனால்ட் நிறுவனம் இதை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம்.
விலை: விலை ரூ. 10 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீட்டிங் கெபாசிட்டி: 2024 டஸ்டர் 5 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வழங்கப்படும்.
பூட் ஸ்பேஸ்: இது 472 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகிறது.
இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: புதிய தலைமுறை டஸ்டர் 3 பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது: 130 PS, 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்ன் 48 V மைல்ட் ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது, ஒரு ஸ்ட்ராங் ஹைபிரிட் 140 PS 1.6-லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. 2 எலக்ட்ரிக் மோட்டார்கள் 1.2kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகின்றன, மூன்றாவது பெட்ரோல் மற்றும் LPG கலவையாகும். 1.2 லிட்டர் யூனிட் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் அனைத்து 4 சக்கரங்களுக்கும் சக்தியளிக்கிறது.
அம்சங்கள்: இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 6-ஸ்பீக்கர் ஆர்காமிஸ் 3டி சவுண்ட் சிஸ்டம் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெறுகிறது.
பாதுகாப்பு: ரெனால்ட் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் ட்ராஃபிக் சைன் ரெகக்னிஷன் மற்றும் ஸ்பீடிங் அலெர்ட் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் ஆகிய அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) -களை கொண்டிருக்கும்.
போட்டியாளர்கள்: புதிய ரெனால்ட் டஸ்டர் மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஹூண்டாய் கிரெட்டா, எம்ஜி ஆஸ்டர், கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலிவேட் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
ரெனால்ட் டஸ்டர் 2025 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
அடுத்து வருவதுஎஸ்டிடி1499 cc, மேனுவல், பெட்ரோல் | Rs.10 லட்சம்* |