புதிய அம்சங்களுடன் கூடிய மஹிந்திரா XUV400 -யின் இன்டீரியர் படம் பிடிக்கப்பட்டுள்ளது… கார் விரைவில் வெளியாக வாய்ப்பு
published on ஜனவரி 05, 2024 11:40 am by rohit for மஹிந்திரா xuv400 ev
- 101 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதுப்பிக்கப்பட்ட கேபினின் முக்கிய சிறப்பம்சங்கள் பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் புதிய வடிவிலான கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆக இருக்கும்.
-
மஹிந்திரா நிறுவனம் XUV400 எலக்ட்ரிக் எஸ்யூவி -யை ஜனவரி 2023 இல் அறிமுகப்படுத்தியது.
-
தற்போதைய டாப்-ஸ்பெக் டிரிமிற்கு மேலே வைக்கப்பட்டுள்ள ‘ப்ரோ’ பெயர் சேர்க்கப்பட்டு புதிய வேரியன்ட்களை பெறலாம்.
-
உட்புற அப்டேட்களில் பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் டிரைவருக்கான முழுமையான டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும்.
-
மின்சார பவர்டிரெயினில் எந்த மாற்றமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை; இது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது.
-
இந்த கார் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, தற்போதைய மாடலை விட கூடுதலான விலையில் (ரூ. 15.99 லட்சம் முதல் ரூ. 19.39 லட்சம் வரை, எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கலாம்.
மஹிந்திரா XUV400 கார் புதிய 'புரோ' என்ற பெயர் சேர்க்கப்பட்டு, கூடுதல் அம்சங்களுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை குறிப்பிட்டு காட்டும் வகையிலான அறிக்கைகள் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ஆன்லைனில் வெளியாகியின. இந்நிலையில் தற்போது, அப்டேட் செய்யப்பட்ட எலக்ட்ரிக் எஸ்யூவி -யை அதன் அறிமுகம் குறித்து முழுமையாகக் காட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதிய இன்ட்டீரியர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன
பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், பெரும்பாலும் ஆல்-டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, புதிய வடிவிலான கிளைமேட் கன்ட்ரோல் பேனல் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் ஆகியவை கேபினுக்கான மிகவும் குறிப்பிடத்தக்க அப்டேட்களாகும். வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், சன்ரூஃப், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் டிரைவர் இருக்கை போன்ற மற்ற அம்சங்கள் XUV400 -யில் இன்னும் உள்ளன.
மஹிந்திராவின் எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் பாதுகாப்பு வசதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது ஆறு ஏர்பேக்குகள், ரிவர்சிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
மஹிந்திரா XUV400 காரின் மின்சார பவர்டிரெய்னில் எந்த மாற்றங்களையும் செய்ய வாய்ப்பில்லை. இது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது - 34.5 kWh மற்றும் 39.4 kWh - முறையே 375 கி.மீ மற்றும் 456 கி.மீ என்ற கிளைம்டு வரம்பை வழங்குகிறது. இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் ஒரே 150 PS/310 Nm மின்சார மோட்டாரை பெறுகின்றன.
சார்ஜிங் நேரம் பின்வருமாறு:
-
50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர்: 50 நிமிடங்கள் (0-80 சதவீதம்)
-
7.2 kW AC சார்ஜர்: 6.5 மணி நேரம்
-
3.3 kW டொமெஸ்டிக் சார்ஜர்: 13 மணிநேரம்
மேலும் படிக்க: ஸ்மார்ட்போன் நிறுவனமான Xiaomi அதன் முதல் எலக்ட்ரிக் காரான SU7 -ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
அப்டேட் செய்யப்பட்ட மஹிந்திரா XUV400, தற்போதுள்ள மாடலை விட கூடுதல் விலையில் 15.99 லட்சம் முதல் 19.39 லட்சம் ரூபாய் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விற்பனை செய்யப்படலாம். இது டாடா நெக்ஸான் EV -க்கு போட்டியாக தொடரும். மேலும் MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகிய கார்களுக்கு விலை குறைவான மாற்றாகவும் இருக்கும்.
மேலும் படிக்க: XUV400 EV ஆட்டோமெட்டிக்