BYD Atto 3 காரின் புதிய வேரியன்ட் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது
published on ஜூலை 09, 2024 06:37 pm by dipan for பிஒய்டி அட்டோ 3
- 33 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய வேரியன்ட்டுக்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு இப்போது ஒரு சில டீலர்ஷிப்களில் ரூ.50,000 டோக்கன் அட்வான்ஸ் உடன் துவங்கியுள்ளது
-
அட்டோ 3 -யின் இந்த புதிய வேரியன்ட் மிகவும் மலிவு விலையில் கிடைக்கக்கூடும். மேலும், இது சிறிய 50 கிலோவாட் பேட்டரி பேக்குடன் வரும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
-
தற்போது, அட்டோ 3 ஆனது 60 கிலோவாட் பேட்டரி பேக் மற்றும் இது 204 PS மற்றும் 310 Nm செயல்திறனை கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் உடன் வருகிறது.
-
தற்போது அட்டோ 3 -யின் விலை ரூ.33.99 லட்சம் முதல் ரூ.34.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.
-
MG ZS EV உடன் போட்டியிடும் வகையில் புதிய வேரியன்ட்டின் விலை சுமார் ரூ.25 லட்சமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
BYD அட்டோ 3-இன் புதிய, மிகவும் விலையுயர்ந்த வேரியன்ட்டின் அறிமுகம் அதிகாரப்பூர்வ டீஸர்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இது ஜூலை 10 ஆம் தேதிக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய வேரியன்ட் பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் இன்னுமும் வெளியிடப்படவில்லை என்றபோதிலும், சில டீலர்ஷிப்கள் ரூ.50,000 டோக்கன் அட்வான்ஸ் உடன் அதன் முன்பதிவு தொடங்கியுள்ளது.
புதிய வேரியன்ட்டில் உள்ள ஹைலைட்ஸ்கள் என்ன?
தற்போதைய அட்டோ 3-இல் உள்ள அதே எலக்ட்ரிக் மோட்டாருடன் சிறிய 50 கிலோவாட் பேட்டரி பேக் இந்த வேரியன்ட்டுடன் வரும் என்றும் டீலர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
தற்போதைய மாடல் சிங்கள் மோட்டாருடன் இணைக்கப்பட்ட 60 கிலோவாட் பேட்டரி பேக்குடன் வருகிறது. அதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு:
விவரங்கள் |
BYD அட்டோ 3 (இப்போதுள்ள லைன்அப்) |
பேட்டரி பேக் |
60 கிலோவாட் |
பவர் |
204 PS |
டார்க் |
310 Nm |
ரேஞ்ச் |
510 கி.மீ. (ARAI) |
சிறிய பேட்டரி பேக்கிலிருந்து ரேஞ்சை அதிகரிக்க புதிய வேரியன்ட் குறைந்த ட்யூனை கொண்டிருக்கலாம்.
மேலும் இந்த புதிய வேரியன்ட்டில் இப்போது அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் விலையை குறைக்க உதவும்.
BYD அட்டோ 3 பற்றிய கண்ணோட்டம்
BYD அட்டோ 3 ஆனது 2022 ஆம் ஆண்டில் இந்திய கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட. BYD நிறுவனத்தின் இரண்டாவது EV கார் இதுவாகும். தற்போது, BYD அட்டோ 3 இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: எலக்ட்ரிக் மற்றும் ஸ்பெஷல் எடிஷன் இரண்டும் 60 கிலோவாட் பேட்டரி பேக்குடன் வருகிறது.
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 12.8 இன்ச் ரொடேட்டிங் டச்ஸ்க்ரீன், 5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 6-வே பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் ஏசி, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்றவை இதில் அடங்கும்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய இதில் ஏழு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் டிசென்ட் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவை அடங்கும். இது ஃபார்வர்ட் கோலிஷன் வார்னிங், லேன்-கீப் அசிஸ்ட், பிளைண்ட்-ஸ்பாட் டிடெக்ஷன், ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற அம்சங்கள் உள்ளன.
போட்டியாளர்கள்
BYD அட்டோ 3-இன் தற்போதைய விலை ரூ. 33.99 லட்சம் முதல் ரூ. 34.49 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது, இது பிரீமியம் ஹூண்டாய் அயோனிக் 5-க்கு குறைவான விலையில் உள்ள மாற்றாக இருக்கும். இருப்பினும் வரவிருக்கும் வேரியன்ட்டின் அறிமுகத்திற்குப் பிறகு இது MG ZS EV மற்றும் மாருதி சுஸூகி eVX மற்றும் ஹூண்டாய் கிரெட்டா EV போன்ற மாடல்களுடன் நேரடியாக போட்டியிடக்கூடும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் நடப்பவை தொடர்பான உடனடி அப்டேட் வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.
மேலும் படிக்க: BYD அட்டோ ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful