MG Windsor EV -யின் விலை ரூ.50,000 வரை உயர்ந்துள்ளது
3 வேரியன்ட்களின் விலையும் ஒரே மாதிரியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இலவச பொது சார்ஜிங் சலுகையும் நிறுத்தப்பட்டுள்ளது.
-
2024 அக்டோபரில் எம்ஜி வின்ட்சர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
-
இது 3 பரந்த வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: எக்ஸைட், எக்ஸ்க்ளூஸிவ் மற்றும் எசென்ஸ்.
-
3 வேரியன்ட்களும் ஒரே 38 kWh பேட்டரி பேக் மற்றும் 136 PS மற்றும் 200 Nm அவுட்புட்டை கொடுக்கும் மோட்டார் செட்டப் உடன் வருகின்றன.
-
MG விண்ட்ஸர் விலை இப்போது ரூ.14 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது.
எம்ஜி விண்ட்சர் காரின் விலை இப்போது ரூ.50,000 வரை உயர்ந்துள்ளது. EV -யின் மூன்று வேரியன்ட்களின் விலை ஒரே மாதிரி உயர்த்தப்பட்டுள்ளன. வின்ட்சர் EV -யின் திருத்தப்பட்ட வேரியன்ட் வாரியான விலை விவரங்களை இங்கே பார்ப்போம்.
எம்ஜி விண்ட்சர் விலை உயர்வு
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
|
எக்ஸைட் |
ரூ.13,49,800 |
ரூ.13,99,800 |
+ரூ.50,000 |
எக்ஸ்க்ளூஸிவ் |
ரூ.14,49,800 |
ரூ.14,99,800 |
+ரூ.50,000 |
எசென்ஸ் |
ரூ.15,49,800 |
ரூ.15,99,800 |
+ரூ.50,000 |
3 வேரியன்ட்களுக்கும் ஒரே மாதிரியான ரூ.50,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. MG eHUB பயன்பாட்டின் மூலம் கொடுக்கப்பட்டு வந்த இலவச சார்ஜிங் இனிமேல் கிடைக்காது. விலை உயர்வை தொடர்ந்து, MG விண்ட்ஸர் EV -யின் திருத்தப்பட்ட விலை ரூ. 14 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது. நீங்கள் பேட்டரி-அஸ்அ-சர்வீஸ் (BaaS) ஆப்ஷனை தேர்வுசெய்யவில்லை என்றால் மேற்கண்ட விலை இறுதியானது.
MG விண்ட்ஸர் கம்ஃபோர்ட் மற்றும் பாதுகாப்பு வசதிகளின் விவரங்கள்
வின்ட்சர் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 15.6 இன்ச் டச் ஸ்கிரீன் காட்சி மற்றும் 8.8 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே போன்ற வசதிகளுடன் வருகிறது. வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஏசி ஆகிய வசதிகளும் உள்ளன .
வின்ட்சர் 6 ஏர்பேக்குகளுடன் (ஸ்டாண்டர்டாக), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் 360 டிகிரி கேமராவுடன் வருகிறது. இது டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: மேட்-இன்-இந்தியா Maruti Suzuki Jimny நோமாட் பதிப்பு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
எம்ஜி விண்ட்சர் பவர்டிரெய்ன்
MG விண்ட்ஸர் ஆனது ஒரே ஒரு 38 kWh பேட்டரி பேக் மற்றும் 136 PS மற்றும் 200 Nm அவுட்புட்டை கொடுக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டார் செட்டப்பை கொண்டுள்ளது. இது 332 கி.மீ ரேஞ்சை கொடுக்கும். இந்த பேட்டரி மற்றும் மோட்டார் பேக் மூன்று வேரியன்ட்களிலும் ஒரே மாதிரியாக உள்ளது.
எம்ஜி வின்ட்சர் போட்டியாளர்கள்
டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV ஆகியவற்றுக்கு MG விண்ட்ஸர் ஒரு மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் பார்க்க: Kia Syros காரின் எதிர்பார்க்கப்படும் விலை: சோனெட்டை விட எவ்வளவு கூடுதலாக இருக்கும்?.