சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

MG Windsor EV உற்பத்தியில் 15,000 யூனிட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது

kartik ஆல் பிப்ரவரி 19, 2025 08:14 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
55 Views

விண்ட்சர் EV ஒரு நாளைக்கு சுமார் 200 முன்பதிவுகளை பெறுகிறது என MG நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • செப்டம்பர் 2024 ஆண்டில் எம்ஜி விண்ட்சர் இவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • இந்தியாவில் (BaaS) வாடகைத் திட்டமாக பேட்டரியை பெற்ற முதல் EV இதுவாகும்.

  • வின்ட்சர் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு அதன் பிரிவில் அதிகம் விற்பனையாகும் EV -யக இருந்தது.

  • இது 3 வேரியன்ட்களில் வருகிறது: எக்சைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ்.

  • எம்ஜி வின்ட்சர் ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான் இந்தியா) உள்ளது.

எம்ஜி விண்ட்சர் செப்டம்பர் 2024 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 15,000 யூனிட்களின் உற்பத்தி மைல்கல்லை எட்டியுள்ளது. விண்ட்ஸர் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே 15,000-க்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றது. இது இந்தியாவில் எந்த EV -க்கும் இல்லாத அதிகபட்ச முன்பதிவுகளில் ஒன்றாகும். இப்போதும் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் 200 முன்பதிவுகளுடன், எலக்ட்ரிக் கிராஸ்ஓவருக்கான தேவை இன்னும் வலுவாக இருப்பதாக MG தெரிவித்துள்ளது. MG விண்ட்சர் EV -யின் விரைவான பார்வை இங்கே.

MG விண்ட்சர் EV: பார்வை

வின்ட்சரின் முன்பக்கத்தில் கனெக்டட் LED DRL -கள், LED ஹெட்லைட்கள் மற்றும் இல்லுமினேட்டட் MG லோகோவுடன் கூடிய பிளாங்க்டு-ஆஃப் கிரில் ஆகியவை உள்ளன. EV ஆனது 18-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது மற்றும் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் படி கலர்டு ORVM -களை கொண்டுள்ளது. பின்புறம் கனெக்டட் LED டெயில்லேம்ப்கள், கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் பம்பர் முழுவதும் குரோம் ஸ்ட்ரிப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

MG விண்ட்சரில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவை சப்போர்ட் செய்யும் ஆதரிக்கும் 15.6-இன்ச் டச் ஸ்கிரீன், இன்ஃபினிட்டி 9-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப், சாய்ந்த பின் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றை கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றுடன் வருகிறது. MG விண்ட்சர் உடன் வழங்கப்படும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) இதில் இல்லை.

மேலும் பார்க்க: விற்பனைக்கு வந்தது 2025 Toyota Land Cruiser 300 GR-S கார், விலை ரூ 2.41 கோடியாக நிர்ணயம்.

விண்ட்சர் 3 வேரியன்ட்களில் கிடைக்கும்: எக்சைட், எக்ஸ்க்ளூசிவ் மற்றும் எசென்ஸ். இவை அனைத்தும் ஒரே பேட்டரி பேக் மற்றும் இ-மோட்டரை பகிர்ந்து கொள்கின்றன. பவர்டிரெய்னின் விவரங்கள் இங்கே:

பேட்டரி பேக்

38 kWh

பவர்

136 PS

டார்க்

200 Nm

கிளைம்டு ரேஞ்ச் (MIDC I+II)

332 கி.மீ

பேட்டரி 45 kW ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இது 55 நிமிடங்களில் பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய உதவுகிறது.

MG விண்ட்சர் EV: விலை மற்றும் போட்டியாளர்கள்

இதன் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை உள்ளது. விண்ட்சர் இவி ஆனது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV 3XO ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on M g விண்ட்சர் இவி

மேலும் ஆராயுங்கள் on எம்ஜி விண்ட்சர் இவி

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை