• English
  • Login / Register

விற்பனைக்கு வந்தது 2025 Toyota Land Cruiser 300 GR-S கார், விலை ரூ 2.41 கோடியாக நிர்ணயம்.

டொயோட்டா லேண்டு க்ரூஸர் 300 க்காக பிப்ரவரி 19, 2025 07:13 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 48 Views
  • ஒரு கருத்தை எழுதுக

லேண்ட் குரூஸரின் புதிய GR-S  வேரியன்ட் ஆஃப்-ரோடு டியூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷன் மற்றும் ஷாக் அப்சார்பர்களுடன் வருகிறது.

Toyota Land Cruiser GR-S

இந்தியாவில் 2025 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முறை ஒரு புதிய GR-S வேரியன்ட் ஆக லேண்ட் க்ரூஸரின் ஸ்போர்ட்டியர் மற்றும் அதிக ஆஃப்ரோடு திறன் கொண்ட பதிப்பாக இது இருக்கிறது. GR-S டிரிம் உடன், ஏற்கனவே கிடைக்கும் லேண்ட் க்ரூஸர் 300 ZX டிரிமின் MY25 யூனிட்களும் CBU (முழுமையாக கட்டப்பட்ட யூனிட்) என இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டன. இப்போது எஸ்யூவி -யின் இரண்டு வேரியன்ட்களுக்கான முன்பதிவுகளும் இப்போது தொடங்கியுள்ளன. மேலும் விவரங்களை பார்க்கும் முன்னர் 2025 லேண்ட் க்ரூஸர் 300 எஸ்யூவி -யின் வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் இங்கே:

2025 Toyota Land Cruiser 300: விலை விவரங்கள்

வேரியன்ட்

விலை

ZX

ரூ.2.31 கோடி

GR-S 

ரூ.2.41 கோடி

 

மேலே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 GR-S ZX மாடலை விட விலை ரூ. 10 லட்சம் கூடுதலாக இருக்கிறது. 

முரட்டுத்தனமாக தோற்றம் கொண்ட GR-S

Toyota Land Cruiser GR-S Rear

எஸ்யூவி -யின் புதிய GR-S வேரியன்ட் வழக்கமான ZX டிரிம்களை விட ஸ்போர்ட்டியான தோற்றத்தை கொண்டுள்ளது, அதன் பிளாக்டு-அவுட் ஹனிகோம்ப் வடிவ கிரில்லின் மையத்தில் 'டொயோட்டா' எழுத்து, பிளாக்-அவுட் அலாய் வீல்கள், டோர் ஹேண்டில்கள் மற்றும் ORVM -கள் (வெளிப்புற, பின்புற வியூ மிரர்ஸ்) ஆகியவற்றுடன் வருகிறது. பம்பர் டிசைனும் மாற்றப்பட்டு சில்வர் ஸ்கிட் பிளேட்டை கொண்டுள்ளது. கிரில், ஃபெண்டர் மற்றும் டெயில்கேட் ஆகியவற்றில் ‘GR-S ’ பேட்ஜிங் இருப்பதால் எஸ்யூவி -யின் திறமையான பதிப்பாக இதை எளிதாக வேறுபடுத்தி காட்ட உதவும்.

2025 லேண்ட் க்ரூஸர் 300 எஸ்யூவி -யின் வழக்கமான ZX வேரியன்ட்டில் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு மாற்றங்கள் எதுவும் இல்லை. இது மஸ்குலரான முன்பக்க கிரில், ஸ்லீக்கரான LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் LED டெயில் லைட்ஸ் போன்ற விஷயங்கள் அப்படியே உள்ளன. 

ஸ்போர்ட்டியர் கேபின் தீம்

Toyota Land Cruiser GR-S Interior

லேண்ட் க்ரூஸர் 300 GR-S ஆனது மெஜந்தா-ரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் ஆல் பிளாக் டேஷ்போர்டுடன் வருகிறது. நீங்கள் இன்னும் மிதமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், லேண்ட் க்ரூஸர் GR-S  ஆல் பிளாக் கலரில் இருக்கும் கேபினும் கிடைக்கும். இது ஸ்டீயரிங் மற்றும் முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்களில் ‘GR-S ’ சிம்பலையும் பெறுகிறது.  

வழக்கமான ZX டிரிம், டூயல்-டோன் பிளாக் மற்றும் பீஜ் கேபின் தீம் மற்றும் பீஜ் கலர் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைப் பெறுகிறது. ஆனால் மீண்டும், நீங்கள் இன்னும் விளையாட்டு மற்றும் எளிதாக பராமரிக்க விரும்பினால், டொயோட்டா அதை முழு கருப்பு நிறத்திலும் வழங்குகிறது. 

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 4-ஜோன் ஏசி மற்றும் 14-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும். இது 8 வே பவர்டு முன் இருக்கைகள், பவர்டு டெயில்கேட், சன்ரூஃப் மற்றும் இரண்டாவது வரிசை பயணிகளுக்கான பின்புற இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்கள்ன ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்புக்காக 10 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றால் கவனிக்கப்படுகிறது.

அதே V6 இன்ஜின் அண்டர் தி ஹூட்

டொயோட்டா 2025 லேண்ட் குரூஸர் 300 உடன் கிடைக்கும் அதே 3.3 லிட்டர் V6 ட்வின்-டர்போ டீசல் இன்ஜினை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது. விவரங்கள் இங்கே: 

இன்ஜின்

3.3 லிட்டர் V6 ட்வின்-டர்போ டீசல்

பவர்

309 PS

டார்க்

700 Nm

டிரான்ஸ்மிஷன்

10-ஸ்பீடு AT

டிரைவ்-டைப்

4-வீல் டிரைவ் (4WD)

AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

மேம்படுத்தப்பட்ட ஆஃப்ரோட் விஷயங்கள்

2025 Toyota Land Cruiser 300 GR-S Launched At Rs 2.41 Crore

லேண்ட் க்ரூஸர் 300 எஸ்யூவி -யின் புதிய GR-S  வேரியன்ட், ரீட்யூன் செய்யப்பட்ட அடாப்டிவ் வேரியபிள் சஸ்பென்ஷன் சிஸ்டம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஷாக் அப்சார்பர்களுடன், டிஃபெரன்ஷியல் லாக்குகளுடன் வருகிறது. இது எஸ்யூவி -யின் ஒட்டுமொத்த ஆஃப்-ரோடு திறமையை மேம்படுத்துகிறது. மற்ற ஆஃப்-ரோடு அம்சங்களில் கிரால் கண்ட்ரோல் ஃபங்ஷன், பனோரமிக் வியூ மானிட்டருடன் கூடிய 4-கேமரா மல்டி டெரெய்ன் மானிட்டர் மற்றும் மல்டி-டெரெய்ன் மோடுகள் ஆகியவை அடங்கும்.

போட்டியாளர்கள்

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 ஆனது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ்-மேபேக் GLS மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டரின் சில வேரியன்ட்களுக்கு போட்டியாக இருக்கும். 

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Toyota Land Cruiser 300

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்Estimated
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்Estimated
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்Estimated
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்Estimated
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf3
    vinfast vf3
    Rs.10 லட்சம்Estimated
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience