20 ஆயிரம் விற்பனை மைல்கல்லை வேகமாக கடக்கும் இந்தியாவின் முதல் இவி -யானது MG Windsor
செப்டம்பர் 2024 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 20,000 யூனிட்கள் என்ற விற்பனையுடன் வின்ட்சர் இவி ஆனது இந்தியாவில் இந்த விற்பனை மைல்கல்லை வேகமாக கடந்த இவி ஆனது.
2024 ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமானதிலிருந்து எம்ஜி வின்ட்சர் இவி வெறும் ஆறு மாதங்களில் 20,000 யூனிட் விற்பனையை கடந்து இந்திய வாடிக்கையாளர்களிடையே மிகப் பிரபலமான இவி -யாக மாறியுள்ளது. இதன் மூலம் 20,000 யூனிட் விற்பனை மைல்கல்லை அதிவேகமாக எட்டிய இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனம் என்ற சாதனையை இது படைத்துள்ளது.
அதன் வளர்ந்து வரும் பிரபலம் அதன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் குறைந்தபட்ச மற்றும் விசாலமான உட்புறங்கள் உட்பட பல விஷயங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் அதன் வலுவான தேவைக்கு ஒரு முக்கிய பங்களிப்பு எம்ஜி -யின் பேட்டரி வாடகை திட்டமாக இருக்கலாம். இந்த தேர்வு காரின் முன்கூட்டிய விலையைக் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் பேட்டரி பேக்கை பயன்படுத்துவதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இது பல வாடிக்கையாளர்களுக்கு காரை மிகவும் விலை குறைவானதாக மாற்றியுள்ளது.
எம்ஜி வின்ட்சர் இவியின் பேட்டரி சந்தா திட்டம் மற்றும் இதர விலை பற்றிய விரிவான பார்வை இங்கே உள்ளது.
எம்ஜி வின்ட்சர் இவி: விலை
வேரியன்ட் |
பேட்டரி வாடகை திட்டம் இல்லாமல் கார் விலை |
பேட்டரி வாடகை திட்டத்துடன் கார் விலை* |
விலை வித்தியாசம் (பேட்டரி வாடகை செலவு தவிர) |
எக்ஸைட் |
ரூ.14 லட்சம் |
ரூ.10 லட்சம் |
ரூ.4 லட்சம் |
எக்ஸ்க்ளூஸிவ் |
ரூ.15 லட்சம் |
ரூ.11 லட்சம் |
ரூ.4 லட்சம் |
எசென்ஸ் |
ரூ.16 லட்சம் |
ரூ.12 லட்சம் |
ரூ.4 லட்சம் |
*எம்ஜி பேட்டரி வாடகை திட்டத்துடன் காரின் விலையை விட ஒரு கி.மீ -க்கு ரூ.3.9 வசூலிக்கிறது
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
எம்ஜி ஆல் BaaS (பேட்டரி அஸ் அ சர்வீஸ்) என அழைக்கப்படும் பேட்டரி சந்தா திட்டம் மூலமாக வின்ட்சர் இவியின் முன்கூட்டிய விலையை குறைக்க உதவுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 1,500 கி.மீ.க்கு மாதாந்திரக் கட்டணத்துடன், ஒரு கி.மீ.க்கு பேட்டரி வாடகைக் கட்டணமாக ரூ.3.9 செலுத்த வேண்டும்.
இந்த திட்டத்தின் ஒரு முக்கிய பலன் குறைந்த ஆரம்ப விலையை தவிர முதல் உரிமையாளர்கள் பேட்டரியின் மீது வரம்பற்ற உத்தரவாதத்தையும் தேவைப்படும் போதெல்லாம் இலவசமாக பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வசதியையும் இதனுடன் பெறுவார்கள்.
எம்ஜி வின்ட்சர் இவி: ஒரு கண்ணோட்டம்
எம்ஜி வின்ட்சர் இவி ஆனது ப்ரொஜெக்டர் LED ஹெட்லைட்கள், இணைக்கப்பட்ட LED லைட்டிங் கூறுகள், 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் கொண்ட முட்டை வடிவ வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் மற்றும் நேர்த்தியான மற்றும் நவீன தோற்றத்திற்காக கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
உள்ளே கேபின் ஆல் பிளாக் கலரில் ஃபாக்ஸ் வுடன் மற்றும் பிராஸ் ஆக்ஸென்ட்களுடன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இருக்கைகள் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியில் உள்ளது. மேலும் பின்புற பெஞ்ச் 135 டிகிரி வரை சாய்ந்து, விமானம் போன்ற இருக்கை அனுபவத்தை வழங்குகிறது.
வின்ட்சர் இவி ஆனது பெரிய 15.6-இன்ச் டச் ஸ்கிரீன், 8.8-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புற ஏசி வென்ட்களுடன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், 256-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், 9-ஸ்பீக்கர் இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஒரு பனோராம் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவற்றை வழங்குகிறது. எம்ஜி வின்ட்சர் இவி உடன் எந்த அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வழங்கப்படவில்லை.
மேலும் பார்க்க: டாடா கர்வ் இவி மற்றும் டாடா கர்வ் இவி டார்க் எடிஷன் படங்களில் ஒப்பீடு
எம்ஜி வின்ட்சர் இவி: பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரங்கள்
எம்ஜி வின்ட்சர் இவி ஆனது ஃபிரன்ட்-ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட ஒரே ஒரு பேட்டரி பேக் தேர்வுடன் வருகிறது. அதன் விவரங்கள் இங்கே:
பேட்டரி பேக் |
38 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
பவர் |
136 PS |
டார்க் |
200 Nm |
கிளைம்டு ரேஞ்ச் |
332 கி.மீ |
டிரைவ்டிரெய்ன் |
ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD) |
எம்ஜி வின்ட்சர் இவி: போட்டியாளர்கள்
எம்ஜி வின்ட்சர் இவி ஆனது டாடா நெக்ஸான் இவி மற்றும் மஹிந்திரா XUV400 உடன் போட்டியிடுகிறது. பேட்டரி வாடகை விருப்பத்துடன் அதன் குறைந்த தொடக்க விலையால் இது டாடா பன்ச் இவி -க்கும் வலுவான போட்டியாளராக ஆக்குகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.