கோமட் EV இன் அம்சங்கள் நிறைந்த உட்புறத்தின் காட்சியின் முன்னோட்டத்தை வெளியிட்ட எம்ஜி
published on ஏப்ரல் 10, 2023 06:11 pm by tarun for எம்ஜி comet ev
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
கோமட் EV இந்த மாத இறுதியில் முழுமையாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோமட் EV இன் முதல் டீசர் வெளியாகி, உட்புறத்தின் காட்சியை நமக்குக் காட்டுகிறது.
-
இது ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள், டூயல் 10.25-இன்ச் டிஸ்பிளேக்கள், தானியங்கி ஏசி மற்றும் பிரஷ்டு சில்வர் பாகங்கள் ஆகியவற்றைப் பெறும்.
-
இரண்டு கதவுகள் மற்றும் நான்கு இருக்கைகள் கொண்ட சப்-3 மீட்டர் சலுகையாக இருக்கும்.
-
17.3kWh மற்றும் 26.7kWh பேட்டரி பேக்குகளுடன் எதிர்பார்க்கப்படுகிறது, இது 300 கிமீ வரை பயணதூர ரேஞ்சை வழங்குகின்றன.
-
விலை ரூ. 9 இலட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோமட் EV -யின் முதல் டீசர் வெளியாகியுள்ளது! கார் தயாரிப்பாளர் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் உட்புறத்தைப் பற்றிய ஒரு காட்சியை எங்களுக்கு வழங்கியுள்ளார், இது ஒரு தனித்துவமான மற்றும் மாறுபாடான ஸ்டைலிங்கை காட்டுகிறது. இது ஒரு சிறிய இரண்டு-கதவு மின்சார ஹேட்ச்பேக்காக இருக்கும் மற்றும் ஏப்ரல் மாதத்திலேயே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டீசரில் இருந்து நாம் என்ன தெரிந்து கொண்டோம்?
(வூலிங் அல்மாஸ் உட்புறம் எடுத்துக்காட்டுக்காக)
டீஸர், கோமெட் EV இன் நவீன தோற்றம் கொண்ட கேபினைக் காட்டுகிறது. இது ஆடியோ மற்றும் வாய்ஸ் கமாண்ட் கன்ட்ரோல்களுடன் இரண்டு-ஸ்போக் ஸ்டீயரிங்கை பெறும். இரண்டு அடையாளம் குறிக்கப்படாத பட்டன்கள் உள்ளன, அவை க்ரூஸ் கன்ட்ரோலுக்காக கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். அதுமட்டுமின்றி, டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டிருக்கும் டூயல் இன்டெகிரேட்டட் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்களையும் நீங்கள் பார்க்கலாம். ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரோட்டரி டயல்களையும், பிரஷ்டு சில்வர் சுற்றுப்புறத்தையும் தனித்துவமாகத் தோற்றமளிக்கும் ஏசி வென்ட்களையும் நீங்கள் காணலாம்.
எதிர்பார்க்கப்படும் பிற அம்சங்கள்
கோமெட் EVக்கு இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் உறுதிசெய்யப்பட்டாலும், அது டூயல் முன்புற ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவற்றைப் பெறலாம்.
இருக்கை மற்றும் அளவு
கோமெட் EV ஆனதுஅதன் நீளத்தைப் பொருத்தவரையில் டாடா நானோவை விட சிறியதாக இருக்கும், ஆனால் அல்டோ K10 ஐ விட அதிக அகலம் மற்றும் உயரத்துடன் இருக்கும், சப்-3 மீட்டர் பிரிவில் இருக்கும். இது நான்கு இருக்கைகள் வசதியுடன் இரண்டு கதவு கொண்டதாக இருக்கும். விகிதாச்சாரங்கள் ஒரு அழகான மைக்ரோ -EVக்கானது , இது ஒரு தனித்துவமான வெளிப்புற ஸ்டைலிங்கைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: எம்ஜி கோமட் EV -யைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
பேட்டரி பற்றிய விவரம்
எம்ஜி கோமட் EV ஆனது இந்தோனேசிய சந்தையில் வூலிங் அல்மாஸ் EV என அழைக்கப்படுகிறது, இது இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வழங்கப்படுகிறது. 17.3kWh பேக் 200 கிமீ பயணதூரம் வரை வரக்கூடியது மற்றும் 26.7kWh விருப்பம் 300 கிமீ ரேஞ்ச் வரை உரிமை கோருகிறது. பின்புற சக்கரங்களை இயக்கும் ஒற்றை 40PS மின்சார மோட்டார் உள்ளது. கோமட் EV -உடன் இரு பேட்டரி பேக் தேர்வுகளும் வழங்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
எதிர்பார்க்கப்படும் விலை
மேலும் படிக்க: இந்தியாவில் வரவிருக்கும் எலக்ட்ரிக் கார்கள்
MG கோமட் EVயின் விலை சுமார் ரூ.9 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். சிட்ரோன் eC3 மற்றும் டாடா டியாகோEV -க்கு போட்டியான விலையில் இருக்கும்.
0 out of 0 found this helpful