MG Hector Blackstorm எடிஷன் காரின் விவரங்களை 7 படங்களில் விரிவாக பார்க்கலாம்
published on ஏப்ரல் 22, 2024 07:53 pm by anonymous for எம்ஜி ஹெக்டர்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
குளோஸ்டர் மற்றும் ஆஸ்டர் எஸ்யூவி -களுக்கு பிறகு பிளாக்ஸ்டார்ம் எடிஷனை பெறும் எம்ஜியின் மூன்றாவது எஸ்யூவி ஹெக்டர் ஆகும்.
எம்ஜி ஹெக்டர் மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் பிளாக்ஸ்டார்ம் பதிப்பில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்டாண்டர்டான பதிப்புடன் ஒப்பிடும் போது இது உள்ளேயும் வெளியேயும் சில மாற்றங்களைப் கொண்டுள்ளது. இதன் விலை ரூ.21.25 லட்சத்தில் தொடங்குகிறது. மற்றும் ஹெக்டரின் ஷார்ப் ப்ரோ டிரிமில் மட்டுமே கிடைக்கும். இந்த பிளாக்ஸ்டார்ம் பதிப்பு டாடாவின் டார்க் பதிப்புகளை போன்றே வசதிகளை கொண்டுள்ளது. ஸ்போர்ட்டியான கவர்ச்சிக்கான ஆல் பிளாக் தோற்றத்தையும் கொண்டுள்ளது.
வெளிப்புறம்
ஹெக்டரின் வடிவமைப்பு ஆல் பிளாக் கலருடன் உள்ளது. கிரில்லில் இருந்து குரோம் எலமென்ட்கள் அகற்றப்பட்டு அவை பிளாக் கலரில் மாற்றப்பட்டுள்ளது. ஹெட்லைட் ஹவுஸிங் மற்றும் ORVM -களுக்கு ஆப்ஷனலாக ரெட் ஹைலைட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
எஸ்யூவி முற்றிலும் பிளாக் நிற 18-இன்ச் அலாய் வீல்களுடன் மாறுபட்ட சிவப்பு பிரேக் காலிப்பர்களை கொண்டுள்ளது. பின்புறம் வழக்கமான ஹெக்டரை போலவே உள்ளது பிளாக் கலர் குரோம் பேட்ஜிங் சேர்க்கப்பட்டுள்ளது.
இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்
உள்ளே பிளாக்ஸ்டார்ம் பதிப்பில் ஸ்டாண்டர்டான மாடல்களில் காணப்படும் டூயல்-டோம் இன்ட்டீரியருக்கு பதிலாக ரெட் ஆக்ஸன்ட்களுடன் உள்ளே ஆல் பிளாக் இன்ட்டீரியர்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. செங்குத்தாக கொடுக்கப்பட்டுள்ள பெரிய 14-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், கனெக்டட் கார் டெக்னாலஜி, பனோரமிக் சன்ரூஃப், ரெட் நிற ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் ஃபுட்வெல் லைட்ஸ், பவர்டு டெயில்கேட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் அப்படியே உள்ளன.
6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள் 360 டிகிரி கேமரா ADAS தொழில்நுட்பம் மற்றும் ஸ்டெல்பிலிட்டி கன்ட்ரோல் அமைப்பு போன்ற பாதுகாப்பு வசதிகள் அப்படியே உள்ளன.
மேலும் பார்க்க: பிரபல பாலிவுட் இயக்குனர் ஆர் பால்கி Mercedes-Benz GLE காரை வாங்கியுள்ளார்
இன்ஜின் மற்றும் விலை
பிளாக்ஸ்டார்ம் எடிஷன் 143 PS 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 170 PS 2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் வருகிறது. டீசல் மாறுபாடு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் டர்போ-பெட்ரோல் வேரியன்ட் ஒரு CVT டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும்.
பிளாக்ஸ்டார்ம் எடிஷன் விலை ஸ்டாண்டர்ட் ஷார்ப் ப்ரோ வேரியண்ட்டை விட ரூ.25000 அதிகம். ஹெக்டரின் விலை இப்போது ரூ.13.98 லட்சம் முதல் ரூ.21.95 லட்சம் வரையிலும் ஹெக்டர் பிளஸ் ரூ.16.99 லட்சம் முதல் ரூ.22.67 லட்சம் வரையிலும் உள்ளது.
MG ஹெக்டர், டாடா ஹாரியர்/சஃபாரி மஹிந்திரா XUV700 மற்றும் ஹூண்டாய் கிரெட்டா/அல்கஸார் போன்றவற்றுடன் போட்டியிடுகிறது.
பட உதவி- விப்ராஜேஷ் (ஆட்டோ ட்ரெண்ட்)
மேலும் படிக்க: ஹெக்டர் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful