• English
  • Login / Register

பிரபல பாலிவுட் இயக்குனர் ஆர் பால்கி Mercedes-Benz GLE காரை வாங்கியுள்ளார்

published on ஏப்ரல் 18, 2024 07:12 pm by ansh for மெர்சிடீஸ் ஜிஎல்இ

  • 41 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த கார் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இவை அனைத்தும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்தில் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

R Balki Buys A Mercedes-Benz GLE

பா, பேட் மேன் மற்றும் கி & கா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல பாலிவுட் இயக்குனர் ஆர் பாலகிருஷ்ணன் ( ஆர்.பால்கி என்று அழைக்கப்படுகிறார்) 5 இருக்கைகள் கொண்ட சொகுசு எஸ்யூவியான மெர்சிடிஸ்-பென்ஸ் GLE காரை தற்போது வாங்கியுள்ளார். இயக்குனர் தனது 60 வது பிறந்தநாளுக்கு எஸ்யூவி -யின் பேஸ் வேரியன்ட்டை வாங்கியுள்ளார். மேலும் இந்த சொகுசு எஸ்யூவி -யை பற்றிய விவரங்களை இங்கே பார்ப்போம்.

Mercedes-Benz Auto Hangar India Pvt Ltd (@autohangar) ஆல் ஷேர் செய்யப்பட்டுள்ள பதிவு

பவர்டிரெய்ன்

Mercedes-Benz GLE 2-litre Diesel Engine

இன்ஜின்

2 லிட்டர் டீசல்

3 லிட்டர் டீசல்

3-லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

269 ​​PS

367 PS

381 PS

டார்க்

550 Nm

750 Nm

500 Nm

டிரான்ஸ்மிஷன்

9-வேக ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

டிரைவ்டிரெய்ன்

ஆல்-வீல் டிரைவ் (AWD)

Mercedes-Benz GLE ஆனது டீசல் மற்றும் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இவை அனைத்தும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. 2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனுடன் வரும் இந்த எஸ்யூவியின் பேஸ் வேரியன்ட்டை ஆர் பால்கி வாங்கியுள்ளார்

மேலும் படிக்க: Mercedes-Maybach GLS 600 காரை வாங்கினார் இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்கியா ரஹானே

மெர்சிடிஸ்-பென்ஸ் ஆனது GLE -ஐ பெர்ஃபாமன்ஸ் பதிப்பில் வழங்குகிறது மெர்சிடிஸ்-AMG GLE 53 கூபே, 3-லிட்டர் ட்வின்-டர்போ பெட்ரோல் இன்ஜின் (435 PS/560 Nm) 48V மைல்ட்-ஹைப்ரிட் அசிஸ்டுடன் 20 PS மற்றும் 200 Nm க்கு அவுட்புட்டை கொடுக்கின்றது.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

Mercedes-Benz GLE Cabin

GLE ஆனது 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 4-ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஒரு பனோரமிக் சன்ரூஃப், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் 590W 13-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டத்துடன்  அமைப்புடன் வருகிறது.

மேலும் படிக்க: Toyota Innova Hycross GX (O) வேரியன்ட் ரூ. 20.99 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது, புதிதாக டாப்-ஸ்பெக் பெட்ரோல்-ஒன்லி வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

பாதுகாப்பைப் பொறுத்தவரை இது 9 ஏர்பேக்குகள், டிராக்‌ஷன் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா மற்றும் பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு, லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்ஸி  பிரேக்கிங் போன்ற வசதிகளை உள்ளடக்கிய ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) வசதிகளுடன் வருகிறது. 

விலை மற்றும் போட்டியாளர்கள்

Mercedes-Benz GLE 300d

மெர்சிடிஸ்-பென்ஸ் GLE விலை ரூ.96.4 லட்சம் முதல் ரூ 1.15 கோடி வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. GLE -க்கு போட்டியாக BMW X5, ஆடி Q7, மற்றும் வோல்வோ XC90 ஆகிய கார்கள் உள்ளன. 

மேலும் படிக்க: மெர்சிடிஸ்-பென்ஸ் GLE டீசல்

was this article helpful ?

Write your Comment on Mercedes-Benz ஜிஎல்இ

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • M ஜி Majestor
    M ஜி Majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience