MG Hector மற்றும் Hector Plus காருக்கான பண்டிகைக்கால தள்ளுபடிகள் முடிவுக்கு வந்துள்ளன, ஆனால் இப்போதும் குறைவான விலையில் கிடைக்கின்றன
published on நவ 17, 2023 11:07 pm by rohit for எம்ஜி ஹெக்டர்
- 51 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு MG எஸ்யூவி -களின் விலை பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெரிய அளவில் குறைக்கப்பட்டது, ஆனால் இப்போது ரூ.30,000 வரை விலை உயர்ந்துள்ளது.
-
எம்ஜி ஹெக்டரின் பெட்ரோல் வேரியன்ட்களின் விலை ரூ.19,000 முதல் ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன.
-
எம்ஜி நிறுவனம் ஹெக்டர் பிளஸ் காரின் விலையை ரூ.24,000 முதல் ரூ.30,000 வரை உயர்த்தியுள்ளது.
-
ஹெக்டர் எஸ்யூவி இப்போது ரூ.15 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
எம்ஜி நிறுவனம் இப்போது ஹெக்டர் பிளஸை ரூ.17.80 லட்சத்தில் இருந்து ரூ.22.51 லட்சம் விற்பனை செய்கிறது.
எம்ஜி ஹெக்டர் மற்றும் எம்ஜி ஹெக்டர் பிளஸ் -ன் விலை செப்டம்பர் 2023 -ன் இறுதியில் பண்டிகை காலத்தை முன்னிட்டு குறைக்கப்பட்டன. ஆனால் இப்போது எம்ஜி நிறுவனம் விலையை மாற்றியமைத்துள்ளது. புதிய விலையில் இருந்தாலும், செப்டம்பர் விலை குறைப்புக்கு முன்னர் நடைமுறையில் இருந்த பழைய கட்டணங்களை விட இரண்டு எஸ்யூவி -கள் இன்னும் குறைவான விலையில் உள்ளன. எஸ்யூவி டியோவின் புதுப்பிக்கப்பட்ட வேரியன்ட் வாரியான விலைகளை பாருங்கள்:
எம்ஜி ஹெக்டர் பெட்ரோல்
வேரியன்ட் |
பழைய விலை (பண்டிகை காலம்) |
புதிய விலை |
வித்தியாசம் |
ஸ்டைல் MT |
ரூ.14.73 லட்சம் |
ரூ.15 லட்சம் |
+ரூ 27,000 |
ஷைன் MT |
ரூ.15.99 லட்சம் |
ரூ.16.29 லட்சம் |
+ரூ 30,000 |
ஷைன் சிவிடி |
ரூ.17.19 லட்சம் |
ரூ.17.49 லட்சம் |
+ரூ 30,000 |
ஸ்மார்ட் MT |
ரூ.16.80 லட்சம் |
ரூ.17.10 லட்சம் |
+ரூ 30,000 |
ஸ்மார்ட் CVT |
ரூ.17.99 லட்சம் |
ரூ.18.29 லட்சம் |
+ரூ 30,000 |
ஸ்மார்ட் புரோ MT |
ரூ.17.99 லட்சம் |
ரூ.18.29 லட்சம் |
+ரூ 30,000 |
ஷார்ப் புரோ MT |
ரூ.19.45 லட்சம் |
ரூ.19.75 லட்சம் |
+ரூ 30,000 |
ஷார்ப் புரோ சிவிடி |
ரூ.20.78 லட்சம் |
ரூ.21.08 லட்சம் |
+ரூ 30,000 |
சாவ்வி புரோ CVT |
ரூ.21.73 லட்சம் |
ரூ.22 லட்சம் |
+ரூ 27,000 |
எம்ஜி ஹெக்டர் டீசல்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
ஷைன் MT |
ரூ.17.99 லட்சம் |
ரூ.18.29 லட்சம் |
+ரூ 30,000 |
ஸ்மார்ட் MT |
ரூ.19 லட்சம் |
ரூ.19.30 லட்சம் |
+ரூ 30,000 |
ஸ்மார்ட் புரோ |
ரூ.20 லட்சம் |
ரூ.20.20 லட்சம் |
+ரூ 20,000 |
ஷார்ப் புரோ |
ரூ.21.51 லட்சம் |
ரூ.21.70 லட்சம் |
+ரூ 19,000 |
-
எம்ஜி ஹெக்டரின் பெட்ரோல் வேரியன்ட்கள் ரூ.30,000 வரை விலை உயர்ந்துள்ளன. அதன் பேஸ்-ஸ்பெக் மற்றும் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களின் விலை இப்போது ரூ.27,000 அதிகம்.
-
எஸ்யூவியின் டீசல் வேரியன்ட்களின் விலை ரூ.19,000 முதல் ரூ.30,000 வரை உயர்ந்துள்ளது.
இதையும் பார்க்கவும்: அக்டோபர் 2023 -ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான 15 கார்கள்… ஆனால் அவை எஸ்யூவிகள் அல்ல
எம்ஜி ஹெக்டர் பிளஸ் பெட்ரோல்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
ஸ்மார்ட் MT 7-சீட்டர் |
ரூ.17.50 லட்சம் |
ரூ.17.80 லட்சம் |
+ரூ 30,000 |
ஷார்ப் புரோ MT 6-சீட்டர்/ 7 சீட்டர் |
ரூ.20.15 லட்சம் |
ரூ.20.45 லட்சம் |
+ரூ 30,000 |
ஷார்ப் புரோ CVT 6-சீட்டர்/ 7-சீட்டர் |
ரூ.21.48 லட்சம் |
ரூ.21.78 லட்சம் |
+ரூ 30,000 |
சாவ்வி புரோ CVT 6-சீட்டர்/ 7-சீட்டர் |
ரூ.22.43 லட்சம் |
ரூ.22.73 லட்சம் |
+ரூ 30,000 |
எம்ஜி ஹெக்டர் பிளஸ் டீசல்
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
ஸ்மார்ட் MT 7-சீட்டர் |
ரூ.19.76 லட்சம் |
ரூ.20 லட்சம் |
+ரூ 24,000 |
ஸ்மார்ட் புரோ MT 6-சீட்டர் |
ரூ.20.80 லட்சம் |
ரூ.21.10 லட்சம் |
+ரூ 30,000 |
ஷார்ப் புரோ MT 6-சீட்டர்/ 7-சீட்டர் |
ரூ.22.21 லட்சம் |
ரூ.22.51 லட்சம் |
+ரூ 30,000 |
-
பெட்ரோல் வேரியன்ட்கள் எம்ஜி ஹெக்டர் பிளஸ் -க்கு ரூ. 30,000 வரை சீரான விலை உயர்வு கிடைத்துள்ளது.
-
கார் தயாரிப்பு நிறுவனம், எஸ்யூவியின் டீசல் வேரியன்ட்களின் விலையை ரூ.30,000 வரை உயர்த்தியுள்ளது.
இரண்டுக்கும் சக்தி அளிப்பது எது?
எம்ஜி இரண்டு எஸ்யூவி -க்களையும் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் பொருத்தியுள்ளது: 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் (143 PS/250 Nm) உடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT, மற்றும் 2-லிட்டர் டீசல் இன்ஜின் (170 PS/350) Nm) 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: காற்றின் தர நிலைகள் அபாயகரமானதாக இருப்பதால், சரியான ஏர் ஃபியூரிபையர் உடன் கூடிய 10 விலை குறைவான கார்கள் இவை
போட்டியாளர்கள்
எம்ஜி ஹெக்டர். ஜீப் காம்பஸ், டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா XUV700 5-சீட்டர் வேரியன்ட் -க்கு போட்டியாக உள்ளது. MG ஹெக்டர் பிளஸ், டாடா சஃபாரி, ஹூண்டாய் அல்கஸார் மற்றும் மஹிந்திரா XUV700 ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கிறது.
விலை விவரங்கள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
மேலும் படிக்க: ஹெக்டர் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful