எம்ஜி, காமெட் EV யின் முழு விலைப் பட்டியலை வெளியிட்டது
published on மே 08, 2023 06:02 pm by ansh for எம்ஜி comet ev
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
நகரப் பயணத்திற்கு என கட்டமைக்கப்பட்ட காமெட் EV தற்போது நாட்டில் உள்ள மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் கார் ஆகும்
a
-
காமெட் EV-இன் விலை ரூ.7.98 லட்சம் (அறிமுக விலை, எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.
-
மூன்று கார் வேரியன்ட்களாகக் கிடைக்கிறது பேஸ், ப்ளே மற்றும் ப்ளஷ்
-
17.3kWh பேட்டரி பேக்குகளுடன் 230 கிமீ வரை பயணதூரத்தை வழங்குகிறது.
-
மே மாதம் 15 ஆம் தேதியிலிருந்து புக்கிங்குகள் தொடங்கி டெலிவரிகள் மே மாதம் 22 இல் தொடங்கும்.
MG காமெட் EV, நகரப் பயணங்களுக்கெனவே கட்டமைக்கப்பட்ட இந்திய சந்தையில் உள்ள ஒரே வேரியன்ட்யான ஒரு பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் கார் ஆகும் அதன் விலை நாட்டிலேயே அதனை மிக விலை குறைவான எலக்ட்ரிக் காராக மாற்றியுள்ளது. இருந்தாலும், கார் தயாரிப்பு நிறுவனம் கூடுதலான வசதிகள் கொண்ட மற்ற இரு கார் வேரியன்ட்களின் விலைகளையும் இப்போது வெளியிட்டுள்ளது. இந்த கார் வேரியன்ட்களின் விலைகளைப் பற்றி இப்போது காணலாம்:
விலை
|
|
|
|
|
|
|
|
*அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் அறிமுக விலைகள்.
அறிமுக விலைகள் முதல் 5,000 புக்கிங்குகளுக்கு மட்டுமே என்று எம்ஜி அறிவித்துள்ளது. மே மாதம் 15 ஆம் தேதியிலிருந்து புக்கிங்குகள் தொடங்குவதாக இருந்தாலும், முன்-பதிவு திறக்கப்பட்டு விட்டது மற்றும் மே மாதம் 22 ஆம் தேதியிலிருந்து டெலிவரிகள் தொடங்கவுள்ன மேலும் அவை பல்வேறு கட்டங்களாக இருக்கும்.
பவர்டிரெயின்
காமெட் ஆனது 42PS மற்றும் 110Nm ஆற்றலை வெளிப்படுத்தும் ஒற்றை மோட்டாருடன் 17.3kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. அதன் போட்டியாளர்களைப் போல இல்லாமல், அல்ட்ரா-காம்பாக்ட் EV பின்புற வீல்-டிரைவ் அமைப்புடன் வருகிறது மேலும் 230 கிமீ பயணதூரத்தை வழங்குகிறது.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
அது மிக சிறிய காராக இருந்தாலும் கூட அம்சங்களைப் பொருத்தவரை அதில் எந்த குறைபாடும் இல்லை. அது டூயல்-இன்டெகிரேட்டட் 10.25 இன்ச் டிஸ்பிளேக்கள், வயர்லெஸ் ஆன்டிராய்டு மற்றும்ஆட்டோ கார்ப்ளே, ஸ்டியரிங்கில் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள், மேனுவல் கிளைமேட் கன்ட்ரோல், இரட்டை முன்புற ஏர்பேகுகள், EBD உடன் கூடிய ABS டயர் அழுத்தக் கண்காணிப்பு அமைப்பு (TPMS) மற்றும் அனைத்து பயணிகளுக்கான 3- பாயின்ட் சீட்பெல்ட்டுகள் ஆகியவற்றைப் பெறுகிறது.
மேலும் படிக்கவும்: உங்கள் MG காமெட் EV-ஐ உங்களின் விருப்பதிற்கேற்ப எவ்வாறு தனிப்பயனாக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டிஜிட்டல் கீ போன்ற அம்சங்கள் டாப்-ஸ்பெக் வேரியன்ட் கார்களுக்கு மட்டுமே ஆனவை.
போட்டியாளர்கள்
4இருக்கை 2 கதவு கொண்ட ஈவி சந்தையில் நுழைந்துள்ளது அது டாடா டியாகோ EV , க்கு போட்டியாக உள்ளது அதன் விலை ரூ.8.69 லட்சம் முதல் ரூ11.99 லட்சம் விலையாக (அறிமுக விலை, எக்ஸ்-ஷோ ரூம்) இருக்கும் மேலும் சிட்ரோன் eC3 ,விலைகள் ரூ.11.50 லட்சம் முதல் ரூ.12.76 லட்சம் வரை (அறிமுக விலை, எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் .
மேலும் படிக்கவும்: காமெட் EV ஆட்டோமெட்டிக்