சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

MG Comet EV ஆனது MY2025 அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது

எம்ஜி comet இவி க்காக மார்ச் 19, 2025 06:48 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

மாடல் இயர் அப்டேட் மூலமாக காமெட் EV -ல் வேரியன்ட் வாரியாக சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சில வேரியன்ட்களின் விலை ரூ.27,000 வரை உயர்ந்துள்ளது.

  • மிட்-ஸ்பெக் எக்ஸைட் டிரிம் இப்போது பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ஓவிஆர்எம் -களை பெறுகிறது.

  • டாப்-ஸ்பெக் எக்ஸ்க்ளூஸிவ் வேரியன்ட் இப்போது லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் 4 ஸ்பீக்கர்களை பெறுகிறது.

  • எக்சைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் வேரியன்ட்களின் விலை ரூ.6,000 மற்றும் ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது.

  • பேட்டரி சந்தா திட்டத்துடன் கூடிய காமெட் இவி இப்போது முன்பை விட ரூ.27,000 வரை அதிகமாக உள்ளது.

  • டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் மற்றும் மேனுவல் ஏசி போன்ற முக்கிய வசதிகளை கொண்டுள்ளது.

  • இதன் பாதுகாப்புக்காக 2 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை உள்ளன.

  • 17.4 kWh பேட்டரி பேக் ஆப்ஷனை பெறுகிறது. இது அராய் கிளைம்டு 230 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது.

  • இப்போது காமெட் -ன் விலை ரூ.7 லட்சம் முதல் ரூ.9.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை உள்ளது.

கடந்த மாதம் எம்ஜி காமெட் இவி பிளாக்ஸ்டார்ம் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான வேரியன்ட்களில் கிடைக்காத லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்தது. இப்போது எம்ஜி நிறுவனம் காமெட் இவி -யின் வழக்கமான வேரியன்ட்களுக்கு மாடல் ஆண்டு 2025 (MY25) அப்டேட்டை கொடுத்துள்ளது. இதன் மூலம் எம்ஜி காமெட் காருக்கு இன்னும் சில அப்டேட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரூ.27,000 வரை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது, கூடுதல் விவரங்கள் இங்கே:

விலையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

வேரியன்ட்

பழைய விலை

புதிய விலை

விலை வித்தியாசம்

எக்ஸிகியூட்டிவ்

ரூ.7 லட்சம்

ரூ.7 லட்சம்

வித்தியாசம் இல்லை

எக்ஸைட்

ரூ.8.20 லட்சம்

ரூ.8.26 லட்சம்

+ ரூ 6,000

எக்ஸைட் ஃபாஸ்ட் சார்ஜிங்

ரூ.8.73 லட்சம்

ரூ.8.78 லட்சம்

+ ரூ 6,000

எக்ஸ்க்ளூஸிவ்

ரூ.9.26 லட்சம்

ரூ.9.36 லட்சம்

+ ரூ 10,000

எக்ஸ்க்ளூஸிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

ரூ.9.68 லட்சம்

ரூ.9.78 லட்சம்

+ ரூ 10,000

பிளாக்ஸ்டார்ம் பதிப்பு

ரூ.9.81 லட்சம்

ரூ.9.81 லட்சம்

வித்தியாசம் இல்லை

100 ஆண்டு லிமிடெட் எடிஷன்

ரூ.9.84 லட்சம்

நிறுத்தப்பட்டது

அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை

மிட்-ஸ்பெக் எக்ஸைட் வேரியன்ட்களின் விலை ரூ.6,000 வரை உயர்ந்துள்ளது. அதே சமயம் டாப்-ஸ்பெக் எக்ஸ்க்ளூசிவ் வேரியன்ட்களின் விலை ரூ.10,000 வரை உயர்ந்துள்ளது.

காமெட் EV ஆனது பேட்டரி சந்தா திட்டத்துடன் கூட கிடைக்கிறது, அதன் புதிய விலை இங்கே:

வேரியன்ட்

பழைய விலைகள்

புதிய விலைகள்

விலை வித்தியாசம்

எக்ஸிகியூட்டிவ்

ரூ.5 லட்சம்

ரூ.5 லட்சம்

வித்தியாசம் இல்லை

எக்ஸைட்

ரூ.6.09 லட்சம்

ரூ.6.25 லட்சம்

+ ரூ 16,000

எக்ஸைட் ஃபாஸ்ட் சார்ஜிங்

ரூ.6.57 லட்சம்

ரூ.6.77 லட்சம்

+ ரூ 20,000

எக்ஸ்க்ளூஸிவ்

ரூ.7.13 லட்சம்

ரூ.7.35 லட்சம்

+ ரூ 22,000

எக்ஸ்க்ளூஸிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

ரூ.7.50 லட்சம்

ரூ.7.77 லட்சம்

+ ரூ 27,000

100 ஆண்டு லிமிடெட் எடிஷன்

ரூ.7.66 லட்சம்

நிறுத்தப்பட்டது

பிளாக்ஸ்டார்ம் பதிப்பு

ரூ.7.80 லட்சம்

ரூ.7.80 லட்சம்

வித்தியாசம் இல்லை

பேட்டரி சந்தா திட்டம், காமெட் இவி -யின் தொடக்க செலவைக் குறைக்கிறது. ஏனெனில் நீங்கள் பேட்டரி பேக் இல்லாமல் இவி -யை வாங்குகிறீர்கள். இருப்பினும் இந்தத் திட்டத்தைத் தேர்வுசெய்தால் ஒவ்வொரு கி.மீ ஓட்டுவதற்கும் ரூ.2.5 சந்தா கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

எம்ஜி காமெட் இவி -யில் மாடல் அப்டேட் மூலமாக புதிதாக கிடைத்த விஷயங்களை இங்கே பார்ப்போம்.

புதிதாக என்ன இருக்கிறது ?

அப்டேட்டின் மூலமாக எம்ஜி காமெட் வேரியன்ட்களில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. எக்ஸிகியூட்டிவ், எக்சைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ், வேரியன்ட் என 3 வேரியன்ட்களில் இது கிடைக்கிறது. ஆனால் வேரியன்ட் வாரியாக சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எக்சைட் டிரிமில் ஒரு ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் எக்ஸ்ட்டீரியர் ரியர் வியூ மிரர்கள் (ORVMs) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டும் மேம்படுத்தலுக்கு முன் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டில் மட்டுமே கிடைத்தன.

மேலும் டாப்-ஸ்பெக் எக்ஸ்க்ளூசிவ் டிரிம் இப்போது ஒரு வொயிட் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்தை பெறுகிறது. அப்டேட்டுக்கு முன்னர் ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் 2-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை மட்டுமே கிடைத்தன.

இவை தவிர வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பு மற்றும் பிற வசதிகள் புதுப்பிப்புக்கு முந்தையதை போலவே இருக்கும்.

மேலும் படிக்க: 2025 ஏப்ரல் முதல் டாடா கார்களின் விலை உயரவுள்ளது

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

புதிய 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டமை தவிர எம்ஜி காமெட் EV ஆனது டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்கு மற்றும் இன்னொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்க்கு) மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டிவிட்டி உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது. இது ஒரு மேனுவல் ஏசி, எலக்ட்ரிக்கலி ஃபோல்டபிள் ஓவிஆர்எம் -கள் (வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள்) மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு தொகுப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. காமெட் இவி -யில் டூயல் முன் ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், ஒரு ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் ஆகியவை உள்ளன. இது எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), நான்கு டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

பேட்டரி பேக், எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச் விவரங்கள்

எம்ஜி காமெட் இவி ஆனது பின்புற ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட ஒரே பேட்டரி பேக் ஆப்ஷன் உடன் தொடர்ந்து கிடைக்கும். அதன் விவரங்கள் இங்கே:

பேட்டரி பேக்

17.4 kWh

எலக்ட்ரிக் மோட்டார் (கள்) எண்ணிக்கை

1

பவர்

42 PS

டார்க்

110 Nm

டிரைவ்டிரெய்ன்

ரியர்-வீல் டிரைவ் (RWD)

கிளைம்டு ரேஞ்ச் (ARAI)

230 கி.மீ

போட்டியாளர்கள்

எம்ஜி காமெட் EV ஆனது மற்ற என்ட்ரி-லெவல் இவி -களான டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோன் eC3 போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on M g comet ev

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.7 - 9.84 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை