• English
    • Login / Register

    மாருதியின் புதிய மாற்றுதயாரிப்பான, தி ஃபிரான்க்ஸ், 9 வெவ்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது

    மாருதி fronx க்காக ஜனவரி 16, 2023 05:18 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 69 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    இந்தியா முழுவதும் உள்ள நெக்சா டீலர்ஷிப்கள் மூலம் ஃபிரான்க்ஸ் விற்கப்படும், இப்போது முன்பதிவு நடந்து வருகிறது

    Maruti Fronx

    • 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஃபிரான்க்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

    • ஒன்பது வெளிப்புற வண்ண விருப்பத் தெரிவுகளில்  வழங்கப்படுகிறது - ஆறு ஒரு நிறம் கொணவை மற்றும் மூன்று இரு நிறம் கொண்டவை.

    • ஒரு நிறம் விருப்பங்களில் நெக்சா ப்ளூ, ஓபுலன்ட் ரெட், ஆர்க்டிக் ஒயிட், ஸ்ப்லென்டிட் சில்வர், கிரான்டியூர் கிரே மற்றும் எர்தர்ன் பிரௌன் ஆகியவை அடங்கும்.

    • நீல நிற கருப்பு கூரையுடன் கூடிய இரட்டை-நிறம் விருப்பக் கார், பழுப்பு, சிவப்பு மற்றும் வெள்ளி நிறங்களுடன் வழங்கப்படுகிறது.

    • ஃபிரான்க்ஸ் இரட்டை-நிறம் கொண்ட கருப்பு மற்றும் மெரூன் கேபின் தீமை மாறாததாகப் பெறுகிறது.

    • விலை ரூ. 8 இலட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     

    மாருதி ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் பலேனோ அடிப்படையிலான மாற்று தயாரிப்பான ஃப்ரான்க்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் விலைகள் தவிர அனைத்து விவரங்களையும் வெளியிட்டது. 11,000 வைப்புத்தொகையுடன் முன்பதிவு நடந்து வருகிறது, மற்றும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய நான்கு பவர்டிரெய்ன்களுடன் ஐந்து டிரிம் நிலைகளும் கிடைக்கின்றன. வண்ணங்களின் அடிப்படையில், தேர்வு செய்ய நிறைய வகைகள் உள்ளன (கார் வகையைப் பொறுத்து) மற்றும் உங்கள் தேர்வுகள் பின்வருமாறு:

    மேலும் பார்க்கவும்: இந்த 7 துடிப்பான ஜிம்னி நிறங்களில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

    நீலம் கலந்த கருப்பு கூரையுடன் கூடிய மண்ணின் பழுப்பு நிறம்

     

    Maruti Fronx Earthen Brown With Bluish Black Roofநீலம் கலந்த கருப்பு கூரையுடன் கூடிய செழுமையான சிவப்பு

    Maruti Fronx Opulent Red With Bluish Black Roofநீலம் கலந்த கருப்பு கூரையுடன் கூடிய அற்புதமான வெள்ளி

    Maruti Fronx Splendid Silver With Bluish Black Roofநெக்சா புளூ

    Maruti Fronx Nexa Blue

    ஓபுலன்ட் ரெட்

    Maruti Fronx Opulent Red

    ஆர்க்டிக் ஒயிட்

    Maruti Fronx Arctic Whiteஸ்ப்லென்டிட் சில்வர்

    Maruti Fronx Splendid Silverகிரான்டியுர் கிரே

    Maruti Fronx Grandeur Greyஎர்தர்ன் பிரௌன்

    Maruti Fronx Earthen Brown

    மாருதியின் அனைத்து புதிய மாற்று எஸ்யுவிகள், இரண்டு பெட்ரோல் என்ஜின்களின் தேர்வைப் பெறுகின்றன:  மிதமான ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் எஞ்சின் (100பிஎஸ் மற்றும் 148என்எம்) மற்றும் பலேனோவில் இருந்து 1.2-லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் யூனிட் (90பிஎஸ் மற்றும் 113என்எம் தயாரிக்கிறது). முந்தையது ஐந்து-வேக கைமுறை அல்லது ஆறு-வேக தானியங்கி வசதியுடன் கிடைக்கிறது, பிந்தையது ஐந்து-வேக கைமுறை அல்லது ஐந்து-வேக ஏஎம்டீ உடன் கிடைக்கிறது.

    மேலும் படிக்க: ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் 550 கிமீ பயணதூர வரம்பு கொண்ட ஈவிஎக்ஸ் எலக்ட்ரிக் கான்செப்ட்டை  மாருதி வெளியிட்டது

    ஒன்பது அங்குல தொடுதிரை அமைப்பு, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் சீர்வேகப்ப்பொறி ஆகியவற்றை உள்ளடக்கிய பலேனோவைப் போலவே இதன் அம்சப் பட்டியலும் நீண்டு உள்ளது. பாதுகாப்பு வாரியாக, இது ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், ஈஎஸ்பீ (மின்னணு நிலைத்தன்மை திட்டம்) மற்றும் 360-டிகிரி கேமராவையும் பெறுகிறது.

    மேலும் பார்க்கவும்: மாருதி அறிமுகப்படுத்தும் சிஎன்ஜி-இன் ப்ரெஸ்ஸா, இந்தியாவின் முதல் சப் காம்பாக்ட் சிஎன்ஜி எஸ்யூவி

    மாருதி ஃப்ரான்க்ஸின் விலைகள் அடுத்த சில மாதங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ரூ. 8 இலட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம். இது நேரடி போட்டியாளர்களைக் கொண்டிருக்காது, ஆனால்  டாட்டா அல்ட்ரோஸ் போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக்குகள் மற்றும் சப்காம்பாக்ட் எஸ்யுவிகள் இரண்டிற்கும் மாற்றாக இருக்கும். மாருதி பிரெஸ்ஸாடாடா நெக்ஸான்ரெனால்ட் கைகர்ஹூண்டாய் வென்யு.

     

    was this article helpful ?

    Write your Comment on Maruti fronx

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience