சியஸ் டீசல் ஹைபிரிட்டை செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது மாருதி
published on ஆகஸ்ட் 28, 2015 11:29 am by அபிஜித் for மாருதி சியஸ்
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
சியஸ் டீசலின் ஹைபிரிட் பதிப்பை, சியஸ் SHVS (ஸ்மார்ட் ஹைபிரிட் வெஹிக்கிள் பை சுசுகி) என்ற பெயரில் மாருதி நிறுவனம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. மேற்கூறிய இந்த தொழில்நுட்பத்தை, சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்தோனேஷியா ஆட்டோ எக்ஸ்போவில் அந்நிறுவனத்தால் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
எளிய ஹைபிரிட் காரான சியஸ் SHVS-ல் ஒருங்கிணைந்த (இன்டிக்ரேடட்) ஸ்டார்ட்டர் ஜெனரேட்டரை (ISG) மோட்டாரின் உதவியுடன் சில இடங்களில் என்ஜின் இயங்கும். மேலும் ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்/ ஸ்டாப் செயலிலும் இது பங்கேற்கிறது. இந்த தொடர்ச்சியான செயல்பாடு மூலம் காருக்கு சிறந்த மைலேஜாக லிட்டருக்கு 28 கி.மீட்டருக்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது. சியஸின் தற்போதைய எரிபொருள் சிக்கனமாக லிட்டருக்கு 26.21 கி.மீ அளித்து, இந்த பிரிவை சேர்ந்த கார்களில் சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த புதிய இலக்கம் மூலம் நம் நாட்டில் ரூ.12 லட்சத்திற்கு குறைவாக விலை நிர்ணயிக்கப்பட்ட கார்களில், மிகச் சிறந்த எரிபொருள் சிக்கனம் மேற்கொள்ளும் கார் என்ற புகழை பெற உள்ளது.
இந்த காரில் உள்ள ISG மோட்டாரை இயங்க உதவும் பெரியளவிலான பேட்டரி, ஆற்றல் மறுஉருவாக்க அமைப்பு (எனர்ஜி ரிஜெனரேஷன் சிஸ்டம்) மூலம் தொடர்ந்து சார்ஜ் செய்யப்பட்டு கொண்டே இருக்கும் என்பதையே SHVS சியஸ் என்று குறிக்கப்படுகிறது.
இது தவிர, ஓட்டுநரின் பக்க ஏர்பேக் அமைந்துள்ள வரிசை முழுவதையும் தரமானதாக மாற்றி அமைத்தல் மற்றும் சில மிரர் மேம்பாடுகள் போன்ற சில சிறப்புகளை, புதிய பதிப்பு கொண்டுள்ளது. V (O) மற்றும் மேற்கூறிய வகைகளை பொறுத்த வரை, இரட்டை ஏர்பேக்கள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS), எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபூஷன் (EBD) சிஸ்டம் போன்ற தரமான அம்சங்களையும் கொண்டுள்ளது.
தற்போது உள்ள டீசல் என்ஜின் காரின் விலையை விட, இதற்கு கொஞ்சம் அதிக விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சிறந்த எரிபொருள் சிக்கனம் மேற்கொள்வதால், அந்த விலை உயர்வு ஈடுசெய்யப்பட்டுவிடும். பெட்ரோல் வகைகளின் விலையில் கூட திருத்தம் செய்யப்படலாம்.
0 out of 0 found this helpful