மாருதி நிறுவனம் சியஸ் கார்களின் பாதுகாப்பான O வேரியான்ட்களை அறிமுகப்படுத்தியது.
published on செப் 14, 2015 02:12 pm by nabeel for மாருதி சியஸ்
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: கார் பாதுகாப்பு இப்போது அதிகமாக விவாதிக்கப்படும் ஒரு தலைப்பாக மாறி இருக்கிறது. அதுவும் NCAP அமைப்புகள் இந்திய கார் தயாரிப்பளர்கள் உயர் ரக பாதுகாப்பு கருவிகளை கண்டிப்பாக தங்களது தயாரிப்புகளில் பயன்படுத்த வேண்டும் என்று அழுத்தம் தர துவங்கிய பின் அனைத்து கார் தயாரிப்பாளர்களும் தங்கள் புதிய வெளியீடுகளில் உயர்மட்ட பாதுகாப்பு அம்சங்களை பொருத்தியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இதை மனதில் கொண்டு மாருதி நிறுவனத்தினர் , தங்களது சம்மேபதிய வெளியீடான செடான் பிரிவு காரான சியஸ் கார்களின் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்ட புதிய இரண்டு வேரியன்ட் (மாடல்) களை அறிமுகப்படுத்தியுள்ளனர். . Vxi (O ) மற்றும் Vdi (O) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல்கள் முறையே ரூ. 7.48 லட்சம் மற்றும் ரூ. 8.37 லட்சம் என்ற விலையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இரட்டை காற்று பைகள் மற்றும் ABS தொழில்நுட்பம் இந்த இரண்டு மாடல்களிலும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் இல்லாத தற்போது விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் Vxi மற்றும் Vdi மாடல்கள் முறையே ரூ.7.31 லட்சம் மற்றும் ரூ. 8.23 லட்சம் என்ற விலைகளில் விற்பனைஆகிக் கொண்டிருக்கிறது..
மாருதி இந்தியா நிறுவனத்தின் மார்க்கெடிங் மற்றும் விற்பனை பிரிவின் தலைமை இயக்குனர் R.S. கல்சி பேசுகையில் பின்வரும் கருத்துக்களைக் கூறினார். “ எங்களுடைய பேஸ் (அடிப்படை) மாடல்களில் இத்தகைய பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதன் மூலம் பாதுகாப்பு வசதிகளின் முக்கியத்துவத்தை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தி இத்தகைய அம்சங்கள் பொருத்தப்பட்ட கார்களை வாங்க ஊக்கப்படுத்துகிறோம் . ஏற்கனவே அறிமுகமாகி விற்பனையில் உள்ள சியஸ் கார்களின் சிறப்பம்சங்களுடன் சேர்ந்து இந்த 'O' வேரியன்ட் களில் இரட்டை காற்று பைகள், ABS மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன.
சீட் பெல்ட் ப்ரிடென்ஷனர், , ஓட்டுனர் சீட் பெல்ட் அணிய மறந்தால் ஞாபக படுத்தும் சமிஞ்ஞை ஒலியுடன் (பஸ்ஸர்) கூடிய சீட் பெல்ட் ரிமைன்டர் போன்ற சீட் பெல்ட் சம்மந்தமான சிறப்பு தொழில்நுட்ப அம்சங்கள் இந்த புதிய Vxi (O ) மற்றும் Vdi (O) மாடல்களில் பொருதப்பட்டுல்லதை காண முடிகிறது. ABS ( ஏன்டி லாக் ப்ரேகிங் சிஸ்டம் ) . ஓட்டுனர் மற்றும் முன்பக்க பயணிக்கான இரட்டை காற்றுபைகளும் இதில் உள்ளன.
0 out of 0 found this helpful