சுதந்திர தினத்துக்கு பின் மாருதியின் சியஸ் ஹைப்ரிட் கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
published on ஆகஸ்ட் 11, 2015 11:57 am by nabeel for மாருதி சியஸ்
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: மாருதி நிறுவனம் புதிய சியஸ் ஹைப்ரிட் கார்களை சுதந்திர தினத்திற்கு பின் அறிமுகப்படுத்த முற்றிலும் தயார் நிலையில் உள்ளது. தேதி இன்னும் சரியாக முடிவு செய்யப் படவில்லை என்றாலும் ஆகஸ்ட் 15 க்கு பின் ஒரு வார காலத்திற்குள் இந்த சியஸ் ஹைப்ரிட் கார்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த ஹைப்ரிட் வெர்ஷன் தற்போது புழக்கத்தில் உள்ள டீசல் எஞ்சினுக்கு மாற்றாக அமையுமே தவிர தற்போது உள்ள பெட்ரோல் எஞ்சின்கள் எந்தவிதமான மாற்றத்திற்கும் உள்ளாகாது. இந்த புதிய ஹைப்ரிட் காரில் அதே 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தாலும் இந்த முறை அதனுடன் புதிய எஸ்எச்விஎஸ் (SHVS) தொழில் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.. இந்த தொழில்நுட்பத்தின்படி லிதியம் - அயான் பாட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. . இந்த பாட்டரிகள் ப்ரேக் பயன்படுத்துகையில் சார்ஜ் ஆகிக்கொள்ளும் தன்மை கொண்டன. இது எஞ்சினுக்கு கூடுதல் முறுக்கு விசையை தருவதோடு மட்டுமன்றி புதிய ஐடில் ஸ்டார்ட் - ஸ்டாப் அம்சத்தையும் இயக்குகிறது. இதன் விளைவாக சியஸ் இப்போது முந்தைய லிட்டருக்கு 26 கி.மீ என்ற அளவை விட 28- 30 கி. மீ என்ற அளவுக்கு கூடுதல் மைலேஜ் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது..
சில லேசான ஒப்பனை மாற்றங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய ஹைப்ரிட் கார்கள் மாருதியின் புதிய நெக்ஸா டீலர்ஷிப் வாயிலாக விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இப்போது நெக்ஸா டீலர்ஷிப் மூலமாக சமீபத்தில் அறிமுகமான எஸ் - கிராஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன . இந்த புதிய ஹைபிரிட் கார்களை எதிர்பார்த்து டீலர்கள் தற்போது ஸ்டாக்கில் விற்பனைக்கு உள்ள சியஸ் கார்களை ரூ. 25000 வரை தள்ளுபடி தந்து அதன் மூலம் விற்பனையை வேகப்படுத்தி உள்ளனர். 2015 ஜெனிவாவில் நடந்த மோட்டார் ஷோவில் மாருதி நிறுவனம் தனது இந்த புதிய எஸ்எச்விஎஸ் (SHVS) தொழில் நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்று விளக்கியது. மேலும் இந்த லிதியம் - அயான் பாட்டரிகள் எவ்வாறு பிரேக் பயன்படுத்தும்போது சார்ஜ் ஆகிக்கொண்டு அந்த சக்தியை எஞ்சினுக்கு கடத்தி கூடுதல் முறுக்கு விசையை வெளிப்படுத்துகிறது என்பதும் தெளிவாக விளக்கப்பட்டது. மேலும் நமக்கு கிடைத்த தகவலின்படி இந்த ஹைபிரிட் சியஸ் கார்கள் ரூ. 75,௦௦௦ முதல் 1.2 லட்சம் வரை கூடுதல் விலையுடன் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது..
0 out of 0 found this helpful