Mahindra XUV700 AX5 செலக்ட் வேரியன்ட்கள் வெளியிடப்பட்டுள்ளன, விலை ரூ 16.89 லட்சத்திலிருந்து தொடங்குகின்றது
published on மே 22, 2024 05:36 pm by rohit for மஹிந்திரா எக்ஸ்யூவி700
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய AX5 செலக்ட் வேரியன்ட்கள் 7 சீட்கள் கொண்ட அமைப்பில் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகளுடன் வருகின்றன.
-
எஸ்யூவி -யின் AX3 மற்றும் AX5 டிரிம்களுக்கு இடையே புதிய AX5 செலக்ட் ஸ்லாட்டுகள் உள்ளன.
-
புதிய வேரியன்ட்களின் விலை ரூ.16.89 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா)
-
இந்த புதிய வேரியன்ட்கள், AX5 வேரியன்ட்களை விட ரூ.1.40 லட்சம் வரை மலிவு விலையில் உள்ளன.
-
போர்டில் உள்ள வசதிகளில் இரட்டை 10.25-இன்ச் ஸ்கிரீன்கள், ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல் முன் ஏர்பேக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
எஸ்யூவி -யின் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும். அவற்றுக்கான டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது.
மஹிந்திரா XUV700 ஒரு புதிய மிட்-ஸ்பெக் AX5 செலக்ட் (அல்லது சுருக்கமாக AX5 S) டிரிம்மை பெற்றுள்ளது. இது AX3 மற்றும் AX5 டிரிம்களுக்கு இடையில் ஸ்லாட் செய்யப்பட்டுளது. மற்றும் 7-சீட் லேஅவுட்டில் மட்டுமே கிடைக்கும். ஒப்பீட்டளவில் குறைந்த விலையை கொண்டிருக்கும் போது நெக்ஸ்ட்-இன்-லைன் AX5 டிரிமின் சில பிரீமியம் மற்றும் பயனுள்ள வசதிகளை பெறுகிறது.
வேரியன்ட் வாரியான விலை
வேரியன்ட் |
AX5 செலக்ட் |
AX5 |
வித்தியாசம் |
பெட்ரோல் MT |
ரூ.16.89 லட்சம் |
ரூ.18.19 லட்சம் |
(ரூ 1.30 லட்சம்) |
பெட்ரோல் AT |
ரூ.18.49 லட்சம் |
ரூ.19.79 லட்சம் |
(ரூ 1.30 லட்சம்) |
பெட்ரோல் MT E |
ரூ.17.39 லட்சம் |
ரூ.18.69 லட்சம் |
(ரூ 1.30 லட்சம்) |
டீசல் MT (185 PS) |
ரூ.17.49 லட்சம் |
ரூ.18.79 லட்சம் |
(ரூ 1.30 லட்சம்) |
டீசல் MT E (185 PS) |
ரூ.17.99 லட்சம் |
– |
– |
டீசல் AT |
ரூ.18.99 லட்சம் |
ரூ.20.39 லட்சம் |
(ரூ 1.40 லட்சம்) |
மேலே உள்ள அட்டவணையில் உள்ளபடி புதிய AX5 செலக்ட் வேரியன்ட்கள் தொடர்புடைய AX5 வேரியன்ட்களை விட ரூ.1.40 லட்சம் வரை விலை குறைவாக உள்ளன.
போர்டில் உள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம்
மஹிந்திரா புதிய AX5 S வேரியன்ட்களில் பனோரமிக் சன்ரூஃப், டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காக) வயர்லெஸ் கனெக்டிவிட்டி, அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை இது டூயல் முன் ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆங்கரேஜ்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களுடன் வருகின்றது.
நெக்ஸ்ட்-இன்-லைன் AX5 டிரிமுடன் ஒப்பிடும்போது, AX5 S வேரியன்ட்களில் LED DRLகள் மற்றும் கார்னரிங் செயல்பாடுகள், டூயல்-டோன் அலாய் வீல்கள், ஃபாக் லேம்ப்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ரிவர்சிங் கேமரா மற்றும் கர்ட்டன் ஏர்பேக்குகள் கொண்ட LED ஹெட்லைட்கள் கிடைக்காது.
மேலும் பார்க்க: மஹிந்திரா BE.05 மீண்டும் சோதனையின் போது படம்பிடிக்கப்பட்டுள்ளது, இன்ட்டீரியர் விவரங்கள் வெளியாகியுள்ளன
அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பெறுகிறது
எஸ்யூவி -யின் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் எதுவும் மாறவில்லை. புதிய AX5 செலக்ட் வேரியன்ட்கள் பின்வரும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகின்றன:
விவரக்குறிப்பு |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
200 PS |
156 PS/ 185 PS |
டார்க் |
380 Nm |
360 Nm/ 450 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
எஸ்யூவியின் டாப்-ஸ்பெக் AX7 மற்றும் AX7 L டிரிம்கள் மட்டுமே டீசல் ஆட்டோமேட்டிக் பவர்டிரெய்னுடன் ஆப்ஷனலான ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப்பை பெறுகின்றன.
மஹிந்திரா XUV700 போட்டியாளர்கள்
மஹிந்திரா XUV700 கார் ஆனது MG ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி, மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது. அதன் 5-சீட்டர் பதிப்பு டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் உடன் போட்டியிடும்.
மேலும் படிக்க: மஹிந்திரா XUV700 ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful