புதிய அலாய் வீல்கள் மற்றும் இணைக்கப்பட்ட LED டெயில்லேம்ப்கள் உடன் மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது
அதே வடிவமைப்பு அப்டேட்கள் எஸ்யூவி -யின் அப்டேட் செய்யப்பட்ட எலக்ட்ரிக் எடிஷனான XUV400 EV -க்கும் பயன்படுத்தப்படும்
-
XUV300 ஃபேஸ்லிஃப்ட் -டின் சோதனை கார் புதிய அலாய் வீல்கள் மற்றும் இணைக்கப்பட்ட LED டெயில்லேம்ப்களுடன் காணப்பட்டது.
-
முன்பக்கத்தில், இது புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் பம்பர் வடிவமைப்பு மற்றும் ஃபாங்- வடிவ LED DRL -களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
முந்தைய படங்களின் அடிப்படையில், XUV300 -யின் ஃபேஸ்லிஃப்டட் பதிப்பு, ஒரு பெரிய ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன் அமைப்பை கொண்டிருக்கும்.
-
மஹிந்திரா, 2024 XUV300 உடன் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை தக்க வைத்துக் கொள்ளும், ஆனால் இது ஒரு டார்க் கன்வெர்ட்டர் ஆப்ஷனையும் பெறலாம்.
-
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் மற்றும் அதன் விலை ரூ. 9 லட்சத்தில் (எக்ஸ் ஷோ ரூம்) இருந்து நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில், சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவு மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட் வடிவில் மற்றொரு புதுப்பிக்கப்பட்ட காரை காண உள்ளது . புதிய வெளிப்புற வடிவமைப்பு விவரங்களை வெளிப்படுத்தும் அந்த காரின் சோதனை கார் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது; மேலும் இதே வடிவமைப்பு புதுப்பிப்புகள் அதன் எலக்ட்ரிக் எடிஷனான மஹிந்திரா XUV400 EV -க்கும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய படம் காட்சிகள் என்ன வெளிப்படுத்துகின்றன என்பதைக் காண்போம் வாருங்கள்.
முன்புறம் பின்புறம் புதிய லைட்டிங் செட் அப்புகள்
சமீபத்திய படத்தில், XUV700 -ல் உள்ளதை போன்ற ஒரு ஃபாங்- வடிவ LED DRL அமைப்பை சோதனைக் காரின் முன்புறத்தில் காணலாம். இது புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களையும் பெறுகிறது, இது கூடுதல் ஏரோடைனமிக்கிற்காக கொடுக்கப்பட்டது போல் தெரிகிறது.
பின்புறத்தில், XUV300 ஃபேஸ்லிஃப்ட் முழுமையாக ஒளிரும் ஸ்ட்ரிப்புடன் இணைக்கப்பட்ட LED டெயில்லேம்ப்களை கொண்டுள்ளது. மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம், லைசென்ஸ் பிளேட் பகுதியை பின்புற பம்பருக்கு மாற்றியமைப்பது ஆகும், அதேசமயம் தற்போதுள்ள XUV300 -யில், லைசென்ஸ் பிளேட் டெயில்கேட்டிலேயே அமைந்துள்ளது.
கேபின் அப்டேட்கள்
தற்போதுள்ள மஹிந்திரா XUV300 -ன் உட்புறப் படம் குறிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டது
முந்தைய புகைப்படங்களின் அடிப்படையில், ஃபேஸ்லிஃப்டட் XUV300 ஒரு பெரிய ஃப்ளோட்டிங் டச் ஸ்கிரீன் அமைப்பு மற்றும் புதிய வடிவிலான சென்டர் கன்சோலையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்யூவி -யில் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களில் முழு டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் ஆகியவை அடங்கும். சிங்கிள்-பேன் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் AC போன்ற அம்சங்கள் கொடுக்கப்படும். மேம்படுத்தப்பட்ட XUV300 ஆனது பனோரமிக் சன்ரூஃப் மூலம் அதன் பிரிவில் முதன்முறையாக ஒரு அம்சத்தையும் வழங்கக்கூடும் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
இதன் பாதுகாப்பு அம்சங்களின் பட்டியலில் ஆறு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை இருக்கலாம்.
பவர்டிரெயின்கள் விவரம்
மஹிந்திரா, 2024 மஹிந்திரா XUV300 உடன் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை தக்க வைத்துக் கொள்ளும். இந்த தேர்வுகளில் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (110PS/200Nm) மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (117PS/300Nm) ஆகியவை அடங்கும். இரண்டு இன்ஜின் வேரியன்ட்களும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்படலாம்.
தற்போதைய XUV300 ஆனது T-GDi (டைரக்ட்-இன்ஜெக்ஷன்) டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (130PS/250Nm வரை) கிடைக்கிறது, இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் பிரத்தியேகமாக இணைக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா, தற்போதைய AMTயை டார்க் கன்வெர்ட்டருடன் மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்.
எதிர்பார்க்கப்படும் அறிமுகம் போட்டியாளர்கள்
மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரூ 9 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், மற்றும் கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
படங்களின் ஆதாரம்
மேலும் தெரிந்து கொள்ளவும்: மஹிந்திரா XUV300 AMT