மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கார் முதல் முறையாகச் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது
sonny ஆல் மார்ச் 04, 2020 11:48 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
குறைந்தது பட்சம் 350 கி.மீ தூரம் வரை செல்லும், நெக்ஸான் இவி க்கு போட்டியாக- 2021 இல் அறிமுகப்படுத்தப்படும்
-
உருவ மறைப்பு செய்யப்பட்டு எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் கரானது சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.
-
ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மாதிரியில் காணப்படக்கூடிய வடிவமைப்பு அம்சங்கள் எதுவும் சோதனை ஓட்டத்தில் இடம்பெறவில்லை.
-
முன்பு உள்ள மாதிரியின் வழக்கமான எக்ஸ்யூவி300 இன் மேற்புற அமைப்பை ஒத்ததாகவே தெரிகிறது.
-
எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் மாதிரியின் புதிய இவி ஆற்றல் இயக்கி மூலம் எம்இஎஸ்எம்ஏ 350 ஆல் பொருத்தப்பட்டு இருக்கும்.
-
இது குறைந்த பட்சம் 350 கி.மீ தூரம் வரை செல்லும் மேலும் இது டாடா நெக்ஸான் இவி க்கு போட்டியாக இருக்கும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலக்ட்ரிக் காரானது இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்களிலேயே நீண்ட தூரம் செல்லக்கூடிய முதல் இவி ஆகும். வழக்கமான எக்ஸ்யூவி 300 அறிவிக்கப்பட்ட சிறிது நாட்களிலேயே அறிமுகம் செய்யப்பட்டது, இது ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் பொது மக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது, இப்போது சாலையில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது.
இங்கே சோதனை ஓட்டம் செய்யப்பட்ட எக்ஸ்யுவி300 எலக்ட்ரிக் உருவ மறைப்பு செய்யப்பட்டிருக்கும், ஆனால் அதனுடைய பரிமாணங்கள் மற்றும் எரிபொருள் கொள்ளளவு திறன் எக்ஸ்யுவி300 இன் தற்போதைய ஐசிஇ (உட்புற எரிபொறி) பதிப்பிற்கு ஒத்ததாகத் தெரிகிறது. எனினும், சோதனை ஓட்டம் செய்யப்பட்ட முந்தைய மாதிரியில் உள்ளதைப் போல தற்போதைய எக்ஸ்யுவி300 மேற்புற அமைப்பைப் பெற்றிருக்கும். பின்புற விளக்குகள் லேசாக தெரிந்ததால் இது இவி பதிப்பாக அடையாளம் காணப்பட்டது. மேலும், கார் தயாரிப்பு நிறுவனம் இந்த கார் இயங்கும் போது எந்தவித சத்தமும் இருக்காது என்று தெரிவித்திருக்கின்றது. மற்றொரு குறிப்பிட்ட அடையாளமாக இதில் நீல நிற உலோக சக்கரங்கள் இருக்கிறது.
எக்ஸ்யுவி300 எலக்ட்ரிக்கின் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், இது பிராண்டின் புதிய இவி கட்டமைப்பு எம்இஎஸ்எம்ஏ350 யை அடிப்படையாகக் கொண்டது (மஹிந்திரா எலக்ட்ரிக் ஸ்கேலபிள் மாடுலர் ஆர்கிடெக்சர்). பெயருக்கு தகுந்தாற் போலவே, எக்ஸ்யூவி 300 எலக்ட்ரிக் ஒருமுறை மின்னேற்றம் செய்தால் குறைந்தது 350 கி.மீ தூரம் வரை செல்லக்கூடும். இது வேகமாக மின்னேற்றம் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
எக்ஸ்யுவி300 எலக்ட்ரிக் இறுதி உற்பத்தி-சிறப்பம்ச மாதிரியில் ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் காட்சிப்படுத்தப்பட்ட சில வடிவமைப்புக் குறித்த சிறப்பம்ச குறிப்புகளைக் கொண்டிருக்கும். இவை பின்னர் எக்ஸ்யுவி300 ஃபேஸ்லிப்டில் நெக்ஸான் போன்ற வடிவமைப்பில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கிட்டதட்ட 15 லட்சம் ரூபாய் விலையுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எக்ஸ்யுவிஐ300 எலக்ட்ரிக் டாடா நெக்ஸான் இவிக்கு நேரடி போட்டியாக இருக்கும்.
பட ஆதாரம்
மேலும் படிக்க: எக்ஸ்யுவி300 ஏஎம்டி