சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Mahindra XUV 3XO (XUV300 ஃபேஸ்லிஃப்ட்) காரின் மேலும் ஒரு டீஸர் வெளியானது, வசதிகளின் விவரங்கள் தெரிய வருகின்றன

மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO க்காக ஏப்ரல் 22, 2024 08:51 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

மஹிந்திரா XUV 3XO சப்-4 மீட்டர் பிரிவில் பனோரமிக் சன்ரூஃப் பெறும் முதல் காராக இருக்கும்.

  • XUV 3XO ஆனது அதிக பிரீமியம் 7-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டத்தையும் பெறும்.

  • இது மஹிந்திராவின் AdrenoX கனெக்டட் கார் டெக்னாலஜியையும் கொண்டிருக்கும்.

  • இப்போதுள்ள்ள XUV300 உடன் வழங்கப்படும் அதே டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களையே பயன்படுத்த வாய்ப்புள்ளது.

  • மஹிந்திரா XUV 3XO ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

  • விலை ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 29 ஆம் தேதி மஹிந்திரா XUV 3XO அறிமுகத்தை நெருங்க நெருங்க மஹிந்திரா புதிய டீஸர்களை வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் சப்-காம்பாக்ட் எஸ் பற்றிய புதிய விவரங்களை தெரிய வருகின்றன. XUV 3XO -ன் சமீபத்திய டீஸர்களில் (ஃபேஸ்லிப்டட் XUV300) பனோரமிக் சன்ரூஃப் மற்றும் எஸ்யூவி -யில் பிராண்டட் ஆடியோ சிஸ்டம் போன்ற சில வசதிகள் இருப்பது தெரிய வருகின்றது.

அறிமுகமாகும் போது மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO இந்தியாவில் பனோரமிக் சன்ரூஃப் கொண்டிருக்கும் முதல் சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆக இருக்கும். இப்போதுள்ள மஹிந்திரா XUV300 சிங்கிள்-பேன் சன்ரூஃப் உடன் மட்டுமே கிடைக்கிறது. தற்போது டாடா நெக்ஸான், கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ மற்றும் மாருதி பிரெஸ்ஸா ஆகிய அனைத்தும் XUV 3XO -க்கு நேரடி போட்டியாளர்களாக இருக்கும். இவை அனைத்தும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் உடன் மட்டுமே வருகின்றன.

XUV 3XO இன் மிக சமீபத்திய டீஸர் இது பிரீமியமான 7-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டத்துடன் வரும் என்பதை வெளிப்படுத்துகிறது. முன்னதாக XUV300 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டது.

மேலும் பார்க்க: 5 படங்களின் மூலம் Mahindra Bolero Neo Plus பேஸ் வேரியன்ட்டின் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்

AdrenoX கனெக்டட் கார் டெக்னாலஜி

XUV 3XO -ன் முந்தைய டீஸர்களில் ஒன்று மஹிந்திரா XUV700 உடன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திராவின் AdrenoX கனெக்டட் கார் டெக்னாலஜி தொகுப்பைக் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்தியது. இது காருக்குள் நுழையும் முன் கேபினை முன்கூட்டியே குளிரவைக்க இது அனுமதிக்கிறது இது நமது நாட்டின் தீவிர கோடைக்காலத்தின் போது பயனுள்ளதாக இருக்கும்.

எதிர்பார்க்கப்படும் பிற வசதிகள்

XUV3XO காரில் டிரைவருக்கான ஆல் டிஜிட்டல் 10.25-இன்ச் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளையும் கொடுக்கப்படலாம். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் (ADAS) இருக்கலாம்.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

XUV 3XO இப்போதுள்ள XUV300 போன்ற இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பயன்படுத்தலாம். அவற்றின் விவரங்கள்:

இன்ஜின்

1.2 லிட்டர் டர்போ பெட்ரோல்

1.2-லிட்டர் T-GDi (டர்போ-பெட்ரோல்)

1.5 லிட்டர் டீசல்

பவர்

110 PS

130 PS

117 PS

டார்க்

200 Nm

250 Nm வரை

300 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT

6-ஸ்பீடு MT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT

இருப்பினும் தற்போதுள்ள AMT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் பதிலாக சரியான டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் கொடுக்கப்படலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

மஹிந்திரா XUV 3XO இப்போதுள்ள XUV300 காரை விட சற்று அதிக விலை கொண்டதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் விலை ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இது இந்தியாவில் மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி ஆகியற்றுக்கு போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க: XUV300 AMT

Share via

Write your Comment on Mahindra எக்ஸ்யூவி 3XO

Y
yogendra singh choudhary
Apr 23, 2024, 7:52:24 PM

Loved 3xo xuv

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.2.84 - 3.12 சிஆர்*
புதிய வேரியன்ட்
பேஸ்லிப்ட்
Rs.1.03 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.11.11 - 20.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை