புதிய Mahindra XUV 3OO EV படம் பிடிக்கப்பட்டுள்ளது
XUV 3OO EV ஆனது அதன் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் (ICE) மாடலை போன்ற டிசைன் மற்றும் வசதிகளின் தொகுப்பைப் பகிர்ந்து கொள்ளும். அதே சமயம் இதன் பேட்டரி பேக்கை XUV400 EV மாடலில் இருந்துப் பெறக்கூடும். மேலும் இது ப்ரீ-ஃபேஸ்லிஃப்டட் XUV 3OO காரை அடிப்படையாகக் கொண்டது
மஹிந்திரா XUV 3OO ஆனது XUV 300 -ன் ஃபேஸ்லிஃப்டட் வெர்ஷனாக 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. XUV 3OO -ன் சமீபத்திய ஸ்பை ஷாட்கள், காப்பர் கலர் பேட்ஜிங் (மஹிந்திரா EV-களின் பொதுவான கலர் ஆப்ஷன்) மற்றும் முன் ஃபெண்டரில் சார்ஜிங் போர்ட்டுடன் வருகிறது. இது XUV 3OO EV ஆக இருக்கும். சோதனையின் போது காணப்பட்ட EV-யின் ஸ்பை ஷாட்கள் எதைக் காட்டுகின்றன என்பதைப் பார்ப்போம்:
ஸ்பை ஷாட்களில் காணப்பட்டது என்ன?
ஸ்பை ஷாட் மாடல் ஆனது முன் மற்றும் பின்புறத்தில் மறைக்கப்பட்டிருந்தாலும் EV வெர்ஷன் அதன் ICE (இன்டர்னல் கம்பஷன் இன்ஜின்) வெர்ஷன் போலவே உள்ளது என்பது தெளிவாகிறது. இருப்பினும் EV ஆனது சீல் செய்யப்பட்ட கிரில் மற்றும் காப்பர் கலர் பேட்ஜிங் போன்ற தனித்துவமான டிசைன் எலமென்ட்களை கொண்டிருக்கும். கூடுதலாக காப்பர் கலர் ரூஃப் உடன் காணப்பட்டது.
இந்த ஸ்பை ஷாட்களில் மூலம் காணப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க விவரம் அதன் முன் ஃபெண்டர் ஆகும். இது சார்ஜிங் போர்ட்டை கொண்டுள்ளது, மேலும் அலாய் வீல்கள் ICE வெர்ஷனைப் போலவே உள்ளது. பின்புறத்தில், இணைக்கப்பட்ட LED லைட் செட்டப்பும் காணப்படுகிறது. இந்த மாற்றங்களைத் தவிர மீதமுள்ள டிசைன் அமைப்புகள் ICE மாடலை போலவே உள்ளது.
ஸ்பை ஷாட்கள் காரின் உட்புறத்தைப் பற்றிய ஒரு பார்வையை நமக்குத் தருகின்றன, இது XUV 3OO-இன் டிசைனைப் பிரதிபலிக்கிறது. இது டூயல்-டோன் வெள்ளை மற்றும் கருப்பு கேபின் தீம், ஃப்ரீஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் மற்றும் வெள்ளை சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: இந்த தீபாவளிக்கு மஹிந்திரா எஸ்யூவியை ஒட்டிச் செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? நீங்கள் 6 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்!
எதிர்பார்க்கப்படும் வசதிகள்
உட்புறம் ICE வெர்ஷனை போலவே இருப்பதால் EV ஆனது 10.25-இன்ச் டச்ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் டூயல்-டோன் ஆட்டோ ஏசி ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜரும் இதில் வழங்கப்படலாம்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை மஹிந்திரா XUV 3OO EV அதன் பிற மாடல்களில் உள்ளது போன்றே அதே அம்சத் தொகுப்பை பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திராவின் முக்கிய பாதுகாப்பு சிறப்பம்சங்களில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவை அடங்கும். கூடுதலாக, இது லேன் கீப்பிங் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டமுடன் (ADAS) வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் பவர்ட்ரைன் ஆப்ஷன்
மஹிந்திரா XUV400 EV, XUV300 (ப்ரீ- ஃபேஸ்லிஃப்டட் 3OO) -ல் கட்டமைக்கப்பட்டது. இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை வழங்குகிறது: அதில் 34.5 கிலோவாட் மற்றும் 39.5 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி போக்குகளைப் பெறுகிறது, இரண்டும் 150 PS மற்றும் 310 Nm டார்க்கை உருவாக்கும் சிங்கில் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 456 கி.மீ ரேஞ்ஜை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா XUV 3OO EV ஆனது அதே பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரை இணைக்கப்பட்டிருக்கலாம். மேலும் இதே போன்ற ரேஞ்ஜை பராமரிக்கக்கூடும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா XUV3OO-யின் விலை ரூ. 7.79 லட்சம் முதல் ரூ. 15.49 லட்சமாக (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது. மேலும் மஹிந்திரா XUV 3OO EV -யின் விலை சற்றுக் கூடுதலாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம். இது டாடா நெக்ஸான் EV உடன் போட்டியிடும் அதே வேளையில் டாடா கர்வ் EV மற்றும் MG ZS EV ஆகியவற்றிற்கு மிகவும் விலை குறைவான மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: XUV400 EV ஆட்டோமேட்டிக்