• English
  • Login / Register

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Mahindra XEV 9e மற்றும் BE 6e கார்கள் வெளியிடப்பட்டுள்ளன

published on நவ 26, 2024 10:51 pm by dipan for மஹிந்திரா xev 9e

  • 117 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பேஸ்-ஸ்பெக் மஹிந்திரா XEV 9e மற்றும் BE 6e ஆகியவை 59 kWh பேட்டரி பேக்குடன் வருகின்றன. 

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே மஹிந்திரா நிறுவனம் XEV 9e மற்றும் BE 6e ஆகிய இரண்டு கார்களை வெளியிட்டுள்ளது.மஹிந்திராவின் புதிய சப் பிராண்டுகளான BE மற்றும் XEV ஆகியவற்றின் கீழ் இந்த கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 59 kWh பேட்டரி பேக் கொண்ட Be 6e -ன் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டின் விலை ரூ. 18.90 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே பேட்டரி கொண்ட XEV 9e -ன் பேஸ் வேரியன்ட் ரூ. 21.90 லட்சம் (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்) -இந்தியா அறிமுகத்துக்கானவை). இரண்டு EV -களும் இந்த பிரிவில் முதல் வசதிகளுடன் வந்துள்ளன மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் மெர்சிடிஸ்-பென்ஸ் EQA மற்றும் BMW iX1 போன்ற பிரீமியம் EV -களுக்குக் கூட போட்டி போடும் வகையில் உள்ளன. இரண்டு EVகளின் கூடுதல் விவரங்கள் இங்கே:

வெளிப்புறம்

இரண்டு புதிய EV -களும் அந்தந்த கான்செப்ட் மாடல்களில் இருந்து விஷயங்களை பெற்றுள்ளன. XEV 9e -யின் வெளிப்புற வடிவமைப்பைப் பற்றி முதலில் பார்ப்போம். 

மஹிந்திரா XEV 9e

மஹிந்திரா XEV 9e ஆனது புதிய இல்லுமினேட்டட் மஹிந்திரா ‘இன்ஃபினிட்டி’ லோகோவை கொண்டிருக்கும் ஒரு நேரான பானட் உள்ளது. பானட்டின் கீழே கனெக்டட் LED DRL செட்டப் வெர்டிகலாக உள்ள LED புரொஜெக்டர் ஹெட்லைட்களின் பக்க வாட்டு பக்கங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. EV -களில் காணப்படும் கிரில் வெறுமையாக உள்ளது. மற்றும் பிளாக் பம்பர் பிளாக் கலரில் உள்ளன. இதில் இரண்டு LED ஃபாக் லேம்ப்கள் மற்றும் ஏர் இன்லெட் ஆகியவை உள்ளன. 

எஸ்யூவி-கூபேயில் சாய்வான ரூஃப் மற்றும் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்களை நீங்கள் கவனிக்க முடியும். குறிப்பிடத்தக்க வகையில், ORVM -கள் பாடி கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன, B- மற்றும் C-பில்லர் பிளாக் கலரிலும் மற்றும் வீல் ஆர்ச்கள் EV -யின் நீளம் முழுவதும் உள்ள பிளாக் கிளாடிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஏரோடைனமிக் முறையில் வடிவமைக்கப்பட்ட டூயல்-டோன் அலாய் வீல்கள் பிளாக் கலரில் கொடுக்கப்பட்டுள்ளன.

கனெக்டட் எல்இடி டெயில் லைட் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இது LED டிஆர்எல்களுக்கு முன்புறத்தில் உள்ளதைப் போன்ற இன்வெர்டட் U-வடிவ டிஸைன் கொண்டுள்ளது. நீளமான டெயில்கேட் ஒரு ஒளிரும் இன்ஃபினிட்டி லோகோவை கொண்டுள்ளது. பின்புற பம்பர் பிளாக் மற்றும் அதில் ஒரு குரோம் அப்ளிக் உள்ளது.

மஹிந்திரா BE 6e

மஹிந்திரா BE 6e ஆனது ஆக்ரோஷமான கட்கள் மற்றும் ஃபோல்டுல்கள் மற்றும் இல்லுமினேட்டட் BE லோகோவுடன் மிகவும் கிரீசஸ் உடன் பானட் வடிவமைப்பு உள்ளது. இது LED புரொஜெக்டர் ஹெட்லைட்களையும் பெறுகிறது. ஆனால் இவை கிடைமட்டமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. C-வடிவ LED DRL -கள் எந்த லைட் பட்டியாலும் இணைக்கப்படவில்லை. இதன் கீழ் பம்பர் பிளாக் மற்றும் LED ஃபாக் லேம்ப்கள் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

டூயல்-டோன் அலாய் சக்கரங்கள் வித்தியாசமாக உள்ளன, ஆனால் வீல் ஆர்ச்களில் உள்ள கிளாஸி கிளாடிங் XEV 9e போலவே உள்ளது. மேலும் வித்தியாசமானது என்னவென்றால் இது முன் கதவுகளில் ஃப்ளஷ் வகை டோர் ஹேண்டில்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் பின்புற டோர் ஹேண்டில்கள் சி-பில்லரில் கொடுக்கப்பட்டுள்ளன. BE 6e -ல் வீல் ஆர்ச்கள் பெரியதாக உள்ளன மற்றும் ORVMகள், A-, B- மற்றும் C-பில்லர் பிளாக் கலரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள டெயில் லைட்ஸ் DRL -களை போன்று C-வடிவத்தில் உள்ளன. இவை கனெக்ட் செய்யப்படவில்லை. டெயில்கேட் ஒரு இல்லுமினேட்டட் BE லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பம்பர் பிளாக் கலரில் உள்ளது மற்றும் ஆக்ரோஷமான கட்ஸ் மற்றும் ஃபோல்டுகள் கொண்டுள்ளது.

இன்ட்டீரியர்

Mahindra XEV 9e interior
Mahindra XEV 6e interior

இரண்டு EV -களின் உட்புறமும் மிகக் குறைவானது மற்றும் ஒளிரும் லோகோக்கள் (XEV 9e -ல் இன்ஃபினிட்டி லோகோ மற்றும் BE 6e -ல் BE லோகோ) கொண்ட 2-ஸ்போக் ஸ்டீயரிங் கொண்டுள்ளது. மீதமுள்ளவை அடுக்கு டாஷ்போர்டு வடிவமைப்புடன் ஒத்திருக்கிறது.

சென்டர் கன்சோலில் டிரைவிங் மோடுகள் மற்றும் கியர் ஷிஃப்ட்டருக்கான டயல்கள் உள்ளன. இது இரண்டு கப் ஹோல்டர்கள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது (BE 6e இரண்டு வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் பேட்களும் உள்ளன). கன்சோல் முன் மைய ஆர்ம்ரெஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டு EV -க்களுக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால் XEV 9e ஆனது டாஷ்போர்டில் மூன்று 12.3-இன்ச் ஸ்கிரீன்களுடன் கொண்டுள்ளது (டிரைவரின் டிஸ்பிளே, டச் ஸ்கிரீன் மற்றும் பயணிகள் காட்சிக்கு ஒவ்வொன்றும் ஒன்று). மறுபுறம் BE 6e டூயல் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

மஹிந்திரா XEV 9e மற்றும் BE 6e உடன் பிரீமியம் வசதிகளையும் கொடுக்கிறது. பனோரமிக் சன்ரூஃப், மல்டி-சோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 1400 வாட் 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் மற்றும் வென்டிலேட்டட் மற்றும் பவர்டு முன் இருக்கை ஆகியவை இதில் உள்ளன. இந்த EV -கள் ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளேவும் கொடுக்கப்பட்டுள்ளது.

7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்களுடன் பாதுகாப்பு மிகச் சிறப்பாக உள்ளது. இரண்டு EVகளும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பத்துடன் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளுடன் வருகின்றன. மஹிந்திரா சில சொகுசு மாடல்களில் காணப்படுவது போல் பார்க் அசிஸ்ட் வசதியும் இந்த கார்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்கள்

இரண்டு EVகளும் மஹிந்திராவின் EV-குறிப்பிட்ட INGLO கட்டமைப்பு தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.மஹிந்திரா குறிப்பாக EV -களுக்காக இதை வடிவமைத்துள்ளது. இரண்டு EVகளும் 231 PS எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட 59 kWh பேட்டரி பேக்குடன் வருகின்றன. அவர்களின் உயர்-ஸ்பெக் வேரியன்ட்டுகளுக்கு அவர்கள் ஒரு பெரிய 79 kWh விருப்பத்தை தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா இரண்டு EVகளை ஆல்-வீல்-டிரைவ் (AWD) ஆப்ஷன் ரியர் வீல் டிரைவ் (RWD) செட்டப் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பேட்டரி பேக்கைப் பொறுத்து இரண்டையும் கொடுக்கலாம். XEV 9e அதிகபட்சமாக 656 கிமீ ரேஞ்ச் உடன் வரலாம், அதே சமயம் BE 6e அதிகபட்சமாக 682 கி.மீ ரேஞ்சை கொண்டிருக்கும் (MIDC பகுதி 1 + 2).

இரண்டு EV -களும் 175 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றன. இது பேட்டரி பேக்குகளை 20 நிமிடங்களில் 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். ரேஞ்ச், எவ்ரிடே மற்றும் ரேஸ் என 3 டிரைவிங் மோடுகளும் இந்த கார்களில் உள்ளன

போட்டியாளர்கள்

மஹிந்திரா XEV 9e ஆனது வரவிருக்கும் டாடா ஹாரியர் EV மற்றும் டாடா சஃபாரி EV ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும். BE 6e ஆனது டாடா கர்வ்வ் EV, MG ZS EV உடனும் வரவிருக்கும் மாருதி eVX மற்றும் ஹூண்டாய் கிரெட்டா EV ஆகிய கார்களுக்கும் போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Mahindra xev 9e

Read Full News

explore மேலும் on மஹிந்திரா xev 9e

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
×
We need your சிட்டி to customize your experience