நீர்வீழ்ச்சிக்குக் கீழே ஸ்கார்பியோ N இருக்கும் வைரலான வீடியோவிற்கு தனது சொந்த வைரல் வீடியோ மூலமாகப் பதிலடி கொடுத்த மஹிந்திரா
mahindra scorpio n க்காக மார்ச் 07, 2023 07:53 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 57 Views
- ஒரு கருத்தை எழுதுக
முதலில் வைரலான ஒரிஜினல் வீடியோவில் காட்டியுள்ளபடி, SUVயில் நீர் கசிவு பிரச்சனைகள் இல்லை என்பதைக் காட்ட கார் தயாரிப்பாளரால் அதே சம்பவம் மீண்டும் செய்து காட்டப்பட்டது .
-
சமீபத்தில் ஒரு வைரல் வீடியோவில் ஒரு நீர்வீழ்ச்சியின் கீழ் நிற்கும் SUV இன் கேபினுக்குள் தண்ணீர் கசிவதைக் காட்டியது.
-
அதன் சன்ரூஃப் திறந்திருந்தது அல்லது அதைச் சுற்றி அழுக்கு சேர்ந்திருந்தது போன்றவை காரணங்களாக இருந்திருக்கலாம்.
-
மஹிந்திராவின் வீடியோவில், SUVயில் கசிவு பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
எப்படியும் நீங்கள், நீர்வீழ்ச்சியின் அடியில் நிறுத்தப்பட்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ N -ன் கேபினுக்குள் நீர் கசியும் வைரல் வீடியோவை கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள். இது SUV -யின் பில்ட் குவாலிட்டி பற்றிய விவாதத்தை இது தூண்டியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அதே போல் ஒரு வெள்ளை ஸ்கார்பியோ என் வாகனத்தை அதே போன்ற ஒரு சூழலில் இருப்பது போன்ற ஒரு வீடியோவை ஆன்லைனில் கார் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் என்ன காட்டப்படுகிறது?
Just another day in the life of the All-New Scorpio-N. pic.twitter.com/MMDq4tqVSS
— Mahindra Scorpio (@MahindraScorpio) March 4, 2023
மஹிந்திராவின் வீடியோவில் இடம்பெற்றுள்ள SUVயை அசல் கிளிப்பின் அதே அணுகுமுறையைக் கொண்டு நீர்வீழ்ச்சியின் கீழ் நிற்கவைத்துள்ளனர். சன்ரூஃப் மூடிய நிலையில் அதன் மேல் நீர் வழிந்து விழுவதை SUV -யின் இண்டீரியர் வழியாக நாம் நன்றாக பார்க்கலாம். அசல் வீடியோவில் காட்டியுள்ளபடி ரூஃப்-மவுண்டட் ஸ்பீக்கர்களில் இருந்து நீர் கசிவு ஏற்படவில்லை என்பதையும் இது மேலும் தெளிவாகக் காட்டுகிறது.
அசல் வீடியோ போலியானதா?
அசல் சமூக ஊடக வீடியோவின் நம்பகத்தன்மையை முழுமையாக சரிபார்க்க முடியவில்லை என்றாலும், காருக்குள் தண்ணீர் கசிவது காட்டப்படுகிறது. சன்ரூஃப் சரியாக மூடப்படாமல் இருப்பது, முறையற்ற பயன்பாட்டினால் சேதமடைந்த சீல் அல்லது அழுக்கு, இலைகள் மற்றும் மரக்கிளைகள் குவிந்திருப்பது போன்றவை சேகரிக்கப்பட்ட நீர் பாதுகாப்பான வெளியேறும் பாதையில் செல்வதைத் தடுக்கும் பல காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
தொடர்புடையவை: ஜப்பானில் அதீத உருமாற்றத்துடன் காணப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ N
சம்பவத்தை நாம் ஆராய்ந்து பார்ப்போம்
அசல் வீடியோவில் தண்ணீர் கசிவு ஒரு உண்மையான பிரச்சினையாக இருந்தாலும், சமூக ஊடகங்களில் கிடைக்கும் அனைத்து உள்ளடக்கங்களும் எப்போதும் முழுவதும் உண்மையானதாக இருக்காது. தன்னிச்சையாக செயல்படும் படைப்பாளிகள் அதன் பின் இருக்கும் உண்மையை சரிதானா என்று சோதனை செய்யாமல் அல்லது பார்வையாளர்களுடன் வெளிப்படையாக இருக்காமல் ஒரு பொழுதுபோக்கு கதையை வழங்குவது அசாதாரணமானது அல்ல.
எனவே, இதுபோன்ற உள்ளடக்கத்தின் நுகர்வோர்களாகிய நாம், இணையத்தில் உள்ள அனைத்தையும் முற்றிலும் உண்மை என்று கண்மூடித்தனமாக நம்பாமல், அதற்குப் பதிலாக தர்க்கரீதியான காரணங்களைப் பயன்படுத்தி, இதுபோன்ற சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள காரணத்தை மதிப்பிடுவது மிகவும் முக்கியமானது. மஹிந்திராவின் வீடியோவானது நமக்கு அதை நினைவூட்டும் வகையில் பொருத்தமான பதிலாக இருக்கிறது.
மேலும் படிக்க: புதிய வேரியண்ட் உடன் மேலும் அதிக சீட்டிங் ஆப்ஷன்களை மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் பெற வாய்ப்புள்ளது
மேலும் படிக்கவும்: ஸ்கார்பியோ-N ஆன் ரோடு விலை