• English
  • Login / Register

பாரத் என்சிஏபி சோதனையில் 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றது Mahindra BE 6

மஹிந்திரா பிஇ 6 க்காக ஜனவரி 17, 2025 06:30 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 25 Views
  • ஒரு கருத்தை எழுதுக

XEV 9e மற்றும் XUV400 EV உட்பட மஹிந்திராவின் அனைத்து எலக்ட்ரிக் கார்களும் Bharat NCAP -லிருந்து 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.

  • இது 32 -க்கு 31.97 மதிப்பெண்களை பெற்றது. மற்றும் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 5 மதிப்பீடு கிடைத்தது.

  • குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49 -க்கு 45 மதிப்பெண்களைப் பெற்றதால் 5 ஸ்டார் மதிப்பீடு கிடைத்தது. 

  • இது 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS தொகுப்புடன் வருகிறது.

  • BE 6 காரின் விலை ரூ.18.90 லட்சம் முதல் 26.90 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மஹிந்திரா பிஇ 6 காரின் பாரத் என்சிஏபி சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இது பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக (AOP) 31.97/32 புள்ளிகளைப் பெற்றது. அதே சமயம் குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்காக (COP), BE 6 45/49 புள்ளிகளைப் பெற்றது. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை வழங்கியுள்ளது.

மஹிந்திரா BE 6 -ன் கிராஷ் டெஸ்ட் முடிவுகளை விரிவாக பார்ப்போம்:

பெரியவர்களுக்கான பாதுகாப்பு (AOP)

ஃபிரன்ட்டல் ஆஃப்செட் டிஃமார்பிள் பேரியர் டெஸ்ட்: 15.97/16 புள்ளிகள்

சைடு டிஃமார்பிள் பேரியர் டெஸ்ட்: 16/16 புள்ளிகள்

பெரியவர்களுக்கான முன்பக்க தாக்க சோதனையில் மஹிந்திரா BE 6 கோ டிரைவரின் அனைத்து பகுதிகளுக்கும் ‘நல்ல’ பாதுகாப்பைப் பெற்றது. ஓட்டுநருக்கு வலது கால் முன்னெலும்புக்கு 'போதுமான' பாதுகாப்பு கிடைத்தது. அதே நேரத்தில் தலை, கழுத்து, மார்பு, இடுப்பு, தொடைகள், கால்கள் மற்றும் இடது கால் முன்னெலும்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் 'நல்ல' பாதுகாப்பு கிடைத்தது.

சைடு டிஃமார்பிள் பேரியர் மற்றும் சைடு போல் இம்பாக்ட் சோதனையில் (போல்) சோதனைகளில், பெரியவர்களுகான டம்மி பொம்மையின் அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பு 'நல்லது' என மதிப்பீடு கிடைத்தது.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு (COP)

டைனமிக் மதிப்பெண்: 24/24 புள்ளிகள்

சைல்டு ரீஸ்ட்ரெயின் கன்ட்ரோல் அமைப்பு (CRS) இன்ஸ்டாலேஷன் மதிப்பெண்: 12/12 புள்ளிகள்

வாகன மதிப்பீட்டு மதிப்பெண்: 9/13 புள்ளிகள்

குழந்தைகள் பாதுகாப்பு சோதனைகளில் சைல்டு ரீஸ்ட்ரெயின் கன்ட்ரோல் அமைப்பு (CRS)  டைனமிக் சோதனைகளில் 24-க்கு 24 புள்ளிகளைப் பெற்றது. டைனமிக் ஸ்கோர் 8 -க்கு 8 புள்ளிகள் மற்றும் 4 -க்கு 4 புள்ளிகள் 18 மாத மற்றும் 3 வயது டம்மியின் முன் மற்றும் பக்க பாதுகாப்பிற்கு கிடைத்தன.

மேலும் படிக்க: Mahindra XEV 9e, பாரத் NCAP-இலிருந்து பாதுகாப்புக்கான 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது!

மஹிந்திரா BE 6: பாதுகாப்பு 

மஹிந்திரா BE 6 ஆனது 7 அம்சங்கள் (ஸ்டாண்டர்டாக 6), ஆட்டோ பார்க் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), 360-டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது. ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற இது நிலை 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொழில்நுட்பத்துடன் வருகிறது.

மஹிந்திரா BE 6: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

Mahindra BE 6

மஹிந்திரா BE 6 இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் மற்றும் ரியர் வீல் டிரைவ் (RWD) டிரைவ் டிரெய்னுடன் வருகிறது. விரிவான விவரங்கள் இங்கே:

பேட்டரி பேக்

59 kWh

79 kWh

எலக்ட்ரிக் மோட்டார் (கள்) எண்ணிக்கை

1

1

பவர்

231 PS

286 PS

டார்க்

380 Nm

380 Nm

ரேஞ்ச் (MIDC பகுதி 1 + பகுதி 2)

535 கி.மீ

682 கி.மீ

டிரைவ்டிரெய்ன்

RWD

RWD

மஹிந்திரா BE 6: போட்டியாளர்கள்

Mahindra BE 6

மஹிந்திரா BE 6 காரின் விலை ரூ.18.90 லட்சம் முதல் ரூ.26.90 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது MG ZS EV, டாடா கர்வ்வ் EV மற்றும் விரைவில் வெளியாகவுள்ள ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் மாருதி இ விட்டாரா ஆகியவற்றுடன் போட்டியிடும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Mahindra be 6

explore மேலும் on மஹிந்திரா பிஇ 6

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
×
We need your சிட்டி to customize your experience