Mahindra XEV 9e, பாரத் NCAP-இலிருந்து பாதுகாப்புக்கான 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது!
published on ஜனவரி 17, 2025 02:23 pm by shreyash for மஹிந்திரா xev 9e
- 25 Views
- ஒரு கருத்தை எழுதுக
பெரியவர்களுக்கான பாதுகாப்புக்காக (AOP) 32-க்கு 32 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அனைத்துச் சோதனைகள் மற்றும் சூழ்நிலைகளிலும் டிரைவர் மற்றும் கோ டிரைவர் இருவருக்கும் சிறந்த பாதுகாப்பை வழங்கி அதன் செயல்திறனை நிரூபித்துள்ளது.
இந்திய வாகன உற்பத்தியாளர்களின் வரிசையில் முதன்மையான ஆல்-எலக்ட்ரிக் கார் ஆன மஹிந்திரா XEV 9e, சமீபத்தில் பாரத் NCAP ஆல் விபத்துக் கிராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தப்பட்டது. XEV 9e, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக முழு 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது மற்றும் வயது வந்தோ பாதுகாப்பில் 32-க்கு 32 மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. XEV 9e-இன் விரிவான கிராஷ் டெஸ்ட் முடிவுகளை விரிவாகப் பார்க்கலாம்.
அளவுகோல்கள் |
மதிப்பெண் |
அடல்ட் ஆக்குப்பன்ட் புரொடக்ஷ்ன் (AOP) |
32-க்கு 32 புள்ளிகள் |
சைல்ட் ஆக்குப்பன்ட் புரொடக்ஷ்ன் (COP) |
49-க்கு 45 புள்ளிகள் |
வயது வந்தோருக்கான பாதுகாப்பு மதிப்பீடு |
5 நட்சத்திரங்கள் |
குழந்தைகளுக்கான பாதுகாப்பு மதிப்பீடு |
5 நட்சத்திரங்கள் |
ஃப்ரண்டல் ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் ஸ்கோர் |
16-க்கு 16 புள்ளிகள் |
சைட் மூவபிள் டெஃபோர்மப்ளே பேரியர் டெஸ்ட் ஸ்கோர் |
16-க்கு 16 புள்ளிகள் |
டைனமிக் ஸ்கோர் (குழந்தைகளின் பாதுகாப்பு) |
24-க்கு 24 புள்ளிகள் |
மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, XEV 9e எலெக்ட்ரிக் SUV-கூபே அனைத்து சோதனைகளிலும் டிரைவர் மற்றும் கோ டிரைவர் இருவருக்கும் சிறப்பான பாதுகாப்பை வழங்குகிறது. முன்பக்க ஆஃப்செட் சிதைக்கக்கூடிய தடை சோதனையில், டிரைவர் மற்றும் முன் பயணிகளின் அனைத்து உடல் பாகங்களும் 'நல்ல' பாதுகாப்பைப் பெற்றன. பக்கவாட்டு நகரக்கூடிய சிதைக்கக்கூடிய தடை சோதனை மற்றும் பக்கவாட்டு துருவ சோதனையில், டிரைவரின் தலை, மார்பு, வயிறு மற்றும் இடுப்பு அனைத்தும் 'நல்ல' பாதுகாப்பைப் பெற்றன.
18 மாத மற்றும் 3 வயது குழந்தைகளுக்கான ஒட்டுமொத்த செயல்திறனுக்காகச் செயல்திறன் மதிப்பெண் முறையே 8-க்கு 8 ஆகவும், முன் மற்றும் பக்கவாட்டுப் பிரிவுகளுக்கு 4-க்கு 4 பெற்று மஹிந்திரா XEV 7e அதன் செயல்திறனை நிரூபித்துள்ளது.
மேலும் படிக்க: பாரத் NCAP கிராஷ் டெஸ்டில் Mahindra BE 6, 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது!
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
மஹிந்திரா XEV 9e-ஐ இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது அதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு:
பேட்டரி பேக் |
59 கிலோவாட் |
79 கிலோவாட் |
ரேஞ்ச் (MIDC பகுதி I + பகுதி II) |
535 கி.மீ |
656 கி.மீ |
பவர் |
231 PS |
286 PS |
டார்க் |
380 Nm |
380 Nm |
டிரைவ்டிரெய்ன் |
ரியர்-வீல் டிரைவ் |
ரியர்-வீல் டிரைவ் |
பாதுகாப்பு அம்சங்கள்
XEV 9e காரில் 7 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகிய அம்சங்களும், லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஃபார்வேர்ட் கோலிஷன் வார்னிங் போன்ற பாதுகாப்பு சிறப்பம்சங்களும் இதில் அடங்கும்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா XEV 7e விலை ரூ.21.90 லட்சம் முதல் ரூ.30.50 லட்சம் வரை (அறிமுக, எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டாடா சஃபாரி EV மற்றும் டாடா ஹாரியர் EV உடன் நேரடியாக போட்டியிடும், அதே நேரத்தில் டாடா கர்வ் EV, MG ZS EV, ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா BE 6 போன்ற மாடல்களுக்கு பிரீமியம் மாற்றாகவும் இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளைப் பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.