Mahindra BE 6 மற்றும் XEV 9e கார்களுடன் சார்ஜரை வாங்க வேண்டும் என்பது இனிமேல் கட்டாயமில்லை
மஹிந்திரா நிறுவனம் இவி -களுடன் இனிமேல் கட்டாயமாக சார்ஜர்களை வாங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே இது பொருந்தும். இதற்கு முன்னர் இவி -களுடன் சார்ஜரை கட்டாயம் வாங்க வேண்டும் என்பது விதியாக இருந்தது.
மஹிந்திரா XEV 9e மற்றும் மஹிந்திரா BE 6, EV களுடன் சார்ஜரை கட்டாயம் வாங்க வேண்டும் என்பதை மஹிந்திரா நிறுவனம் கட்டாயமாக்கியிருந்தது. இருப்பினும் சில விதிகளுக்குட்பட்டு வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என மஹிந்திரா இப்போது தெரிவித்துள்ளது.
சார்ஜரை வாங்குவதில் இருந்து வாடிக்கையாளர்கள் விலக்கு பெற கீழே உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
நிபந்தனைகள்
-
வாடிக்கையாளரின் வீடுகளிலோ அல்லது பணியிடத்திலோ தனியார் EV சார்ஜரை பொருத்துவதற்கான வசதிகள் இல்லாவிட்டால்.
-
மஹிந்திராவால் அங்கீகரிக்கப்பட்ட சார்ஜர் ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் இருந்தால்.
-
வாடிக்கையாளர் பல மஹிந்திரா EV -களை வாங்கி குறைந்தபட்சம் ஒரு மாடலுக்கு சார்ஜரை வாங்கியிருந்தால்.
மேலே உள்ள நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று பூர்த்தி செய்யப்பட்டால், EV உடன் OEM சார்ஜர் வேண்டால் என்ற ஆப்ஷனை வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம். இருப்பினும் உறுதியான பாதுகாப்பு மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் -கிற்காக மஹிந்திராவால் சான்றளிக்கப்பட்ட சார்ஜர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை மஹிந்திரா பரிந்துரைக்கின்றது.
இப்போது மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e உடன் கிடைக்கும் சார்ஜிங் ஆப்ஷன்களின் விவரங்கள் இங்கே.
சார்ஜிங் ஆப்ஷன்கள்
இரண்டு EV -கள் அறிமுகப்படுத்தியதில் இருந்து மஹிந்திரா ஏற்கனவே 7.3 kWh AC மற்றும் 11.2 kWh AC ஃபாஸ்ட் சார்ஜர் உள்ளிட்ட இரண்டு ஆப்ஷன்களை ரூ.50,000 மற்றும் ரூ.75,000 -க்கு கொடுத்து வருகிறது.
மேலும் படிக்க: Tata Harrier EV அறிமுகத்திற்கு முன்னதாக காட்சிக்கு வைக்கப்பட்டது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் ரியர் ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் வருகின்றன. விரிவான விவரங்கள் இங்கே:
மாடல் |
மஹிந்திரா BE 6 |
மஹிந்திரா XEV 9e |
||
பேட்டரி பேக் |
59 kWh |
79 kWh |
59 kWh |
79 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
1 |
1 |
1 |
பவர் |
231 PS |
286 PS |
231 PS |
286 PS |
டார்க் |
380 Nm |
380 Nm |
380 Nm |
380 Nm |
கிளைம்டு ரேஞ்ச் (MIDC பார்ட் 1+ பார்ட் 2) |
557 கி.மீ |
683 கி.மீ |
542 கி.மீ |
656 கி.மீ |
டிரைவ்டிரெய்ன் |
RWD* |
RWD |
RWD |
RWD |
*RWD = ரியர் வீல் டிரைவ்
இரண்டு EV -களின் அனைத்து வேரியன்ட்களும் 59 kWh பேட்டரி பேக் உடன் வருகின்றன. ஆனால் பேக் 3 டிரிம் இரண்டு கார்களிலும் பேட்டரி பேக் என இரண்டு ஆப்ஷன்களையும் பெறுகிறது.
விலை விவரங்கள் மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா BE 6 காரின் விலை ரூ. 18.90 லட்சம் முதல் ரூ. 26.90 லட்சம் வரை உள்ளது. ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், டாடா கர்வ் EV, MG ZS EV மற்றும் வரவிருக்கும் மாருதி மற்றும் விட்டாரா ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
மஹிந்திரா XEV 9e காரின் விலை ரூ.21.90 லட்சம் மற்றும் ரூ.30.50 லட்சம் வரை உள்ளது. இது வரவிருக்கும் டாடா ஹாரியர் EV -க்கு போட்டியாக இருக்கும்.
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை (சார்ஜர் விலை தவிர்த்து)
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.