சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மேட்-இன்-இந்தியா Nissan Magnite சவுதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

நிசான் மக்னிதே க்காக மார்ச் 19, 2025 07:46 pm அன்று kartik ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

மேக்னைட் எஸ்யூவி -ன் புதிய லெஃப்ட்-ஹேண்ட்-டிரைவிங் பதிப்பைப் பெற்ற உலகின் முதல் பிராந்தியமாக மத்திய கிழக்கு நாடுகள் உள்ளன.

  • சவுதி அரேபியா-ஸ்பெக் மாடல் 3 வேரியன்ட்களை பெறுகிறது. ஆனால் இந்தியா-ஸ்பெக் மாடல் 6 வேரியன்ட்களுடன் கிடைக்கிறது.

  • ஆல்-எல்இடி லைட்கள் மற்றும் 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகிய விஷயங்களுடன் இந்தியா-ஸ்பெக் மாடலின் அதே வெளிப்புற வடிவமைப்பு இதில் உள்ளது.

  • 8 இன்ச் டச் ஸ்கிரீன், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ஆட்டோ ஏசி உள்ளிட்ட வசதிகளுடன் கிடைக்கிறது.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், TPMS மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை உள்ளன.

  • சவுதி அரேபியா-ஸ்பெக் மேக்னைட்டில் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் சிவிடி ஆட்டோமேட்டிக் உடன் மட்டுமே கிடைக்கும்.

  • சவுதி-ஸ்பெக் நிஸான் மேக்னைட்டின் விலை சவுதி ரியால் 66,699 (தோராயமாக ரூ. 15.36 லட்சம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் நிஸான் மேக்னைட் காருக்கு ஒரு ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் கொடுக்கப்பட்டது. இப்போது மத்திய கிழக்கு நாடுகளில் அறிமுகமாகியுள்ளது. நிஸான் மேக்னைட்டின் இடது கை இயக்கி (LHD) பதிப்பைப் பெற்ற உலகின் முதல் பிராந்தியங்களில் இதுவும் ஒன்றாகும். நிஸான் நிறுவனம் 'ஒரு கார், ஒரே உலகம்' பார்வையின் கீழ் 65 -க்கும் மேற்பட்ட சந்தைகளுக்கு மேக்னைட்டின் விற்பனையை விரிவுபடுத்தவுள்ளது. 2025 ஏப்ரல் முதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிஸான் மேக்னைட் கிடைக்கும். இதன் விலை மற்றும் வசதிகள் பற்றிய விரைவான பார்வை இங்கே.

விலை

மத்திய கிழக்கு மாடல் விலை (சவுதி ரியால்)

இந்தியா மாடல் விலை

SAR 66,699 (தோராயமாக ரூ. 15.36 லட்சம்)

ரூ.6.14 லட்சம் முதல் ரூ.9.27 லட்சம்

இந்திய ரூபாய் மதிப்புக்கு மாற்றப்பட்ட பிறகு இந்திய-ஸ்பெக் மாடலுடன் ஒப்பிடும் போது, ​​நிஸான் மேக்னைட்டின் ஆரம்ப விலையை விட சவுதி மாடல் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்திய மாடல் 6 வேரியன்ட்களில் கிடைக்கும். நிஸான் மத்திய கிழக்கு நாடுகளில் மேக்னைட்டை S, SV மற்றும் SL என 3 வேரியன்ட்களில் மட்டுமே விற்பனை செய்யவுள்ளது.

மேலும் பார்க்க:வரும் ஏப்ரல் மாதம் முதல் Kia கார்களின் விலை உயரவுள்ளது

நிஸான் மேக்னைட்: மத்திய கிழக்கு ஸ்பெக் கண்ணோட்டம்

இந்திய மற்றும் மத்திய கிழக்கு ஸ்பெக் மேக்னைட்டின் வடிவமைப்பு ஒரே மாதிரியாக உள்ளது. முன்பக்கம் ஒரு பெரிய பிளாக் கிரில், ஷார்ப்பான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டிஆர்எல் -கள் உள்ளன. பக்கவாட்டில் சில்வர் நிற டோர் ஹேண்டில்கள், கிளாடிங் மற்றும் 16-இன்ச் டயமண்ட்-கட் டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவை உள்ளன. இரண்டு மாடல்களும் மொத்தம் 5 டூயல்-டோன் மற்றும் 7 மோனோடோன் எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களுடன் வருகின்றன.

இரண்டு மேக்னைட்களுக்கும் இடையேயான ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால், இந்திய மாடல் வலது கை இயக்கி அமைப்புடன் கிடைக்கும். சவுதி அரேபியா மாடல் இடது கை இயக்கி ஸ்டீயரிங் அமைப்பைக் கொண்டுள்ளது. டூயல்-டோன் கேபின் மற்றும் 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் போன்ற மற்ற வடிவமைப்பு விஷயங்கள் அப்படியே உள்ளன.

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்கிரீன், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் கூல்டு க்ளோவ்பாக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய அதன் அம்சங்களின் தொகுப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. இந்திய மாடல் ஏர் ஃபில்டருடன் வருகிறது. சவுதி அரேபியா-ஸ்பெக் மேக்னைட் ஏர் அயனிசரை கொண்டுள்ளது.

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் டிராக்‌ஷன் கன்ட்ரோல் செட்டப் ஆகியவை உள்ளன.

இந்தியாவில் விற்கப்படும் மாடல் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. சவுதி அரேபியா-ஸ்பெக் எஸ்யூவி டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வருகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்

பவர்

100 PS

டார்க்

152 Nm

டிரான்ஸ்மிஷன்

CVT*

*CVT= கன்டினியூஸ்லி வேரியபிள் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

இந்திய மாடல் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் அதே இன்ஜினை கொண்டுள்ளது. சவூதி அரேபியா-ஸ்பெக் மாடலில் கிடைக்காத 1-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் இன்ஜினுடன் இந்தியா-ஸ்பெக் மேக்னைட்டை நிஸான் கொடுக்கிறது. இது 72 PS மற்றும் 96 Nm அவுட்புட்டை கொடுக்கும், மேலும் 5-ஸ்பீடு MT அல்லது 5-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) உடன் இணைக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்கள்

இந்தியாவில் நிஸான் மேக்னைட் ஆனது மாருதி பிரெஸ்ஸா, ரெனால்ட் கைகர், டாடா நெக்ஸான், சோனெட் மற்றும் மஹிந்திரா XUV 3XO ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Nissan மக்னிதே

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.18.99 - 32.41 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.2.84 - 3.12 சிஆர்*
புதிய வேரியன்ட்
பேஸ்லிப்ட்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை