சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Lexus LM இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது: விலை ரூ.2 கோடி -யில் இருந்து தொடங்குகிறது

modified on மார்ச் 15, 2024 08:52 pm by rohit for லேக்சஸ் எல்எம்

புதிய லெக்ஸஸ் LM லக்ஸரி வேன் 2.5 லிட்டர் ஸ்டிராங்-ஹைப்ரிட் பெட்ரோல் பவர்டிரெய்ன் மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப் உள்ளது.

  • லெக்ஸஸ் புதிய டொயோட்டா வெல்ஃபயர் அடிப்படையிலான LM MPV -யை இந்தியாவிl விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

  • இது இரண்டு வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது: LM 350h (7-சீட்டர்) மற்றும் LM 350h (4-சீட்டர்).

  • இரண்டு வேரியன்ட்களுக்கான விலை: ரூ. 2 கோடி மற்றும் ரூ. 2.5 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • வெளிப்புறத்தில் பெரிய ஸ்பிண்டில் கிரில் எலக்ட்ரானிக் ஸ்லைடிங் பின்புற கதவுகள் மற்றும் கனெக்டட் LED டெயில்லைட்கள் ஆகியவை உள்ளன.

  • இரண்டு பெரிய ஸ்கிரீன்கள் மையமாக உள்ளன, உள்ளே மினிமலிஸ்ட் வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

  • இரண்டாவது வரிசையில் ஒரு பெரிய 48 இன்ச் ஸ்கிரீன் 23-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ADAS ஆகியவற்றைப் பெறுகிறது.

லெக்ஸஸ் LM காருக்கான முன்பதிவு 2023 ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இப்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான டொயோட்டா வெல்ஃபயர் காரை விட மேம்பட்டதாக இருக்கும்.

வேரியன்ட் வாரியான விலை

வேரியன்ட்

விலை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா)

LM 350h (7 இருக்கைகள்)

ரூ.2 கோடி

LM 350h (4-சீட்டர்)

ரூ.2.5 கோடி

லெக்ஸஸ் அதன் ஃபிளாக்ஷிப் லக்ஸரி MPV -யின் 4-சீட்டர் கேப்டன் சீட் பதிப்பில் லவுஞ்ச் போன்ற அனுபவத்திற்காக 7 இருக்கைகள் கொண்ட வேரியன்ட்டை விட ரூ.50 லட்சம் கூடுதலாக இருக்கின்றது.

லெக்ஸஸ் காரின் வெளிப்புற வடிவமைப்பு

லெக்ஸஸ் LM காரின் முன்பக்கத்தில் ஒரு பெரிய முன் கண்ணாடி மற்றும் ஒரு பெரிய ஸ்பிண்டில் கிரில் உள்ளது. இதன் முன்பக்கமானது ட்ரை-பீஸ் LED எலமென்ட்களுடன் கூடிய ஸ்டைலான LED ஹெட்லைட்களை கொண்டுள்ளது. பக்கவாட்டில் உங்கள் கவனம் முதலில் MPV -யின் பெரிய தோற்றம் ஈர்க்கப்படும் வகையில் உள்ளது. அதன் நீண்ட வீல்பேஸ் இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது. பின்னர் பார்ட்டி பீஸ் - எலக்ட்ரானிக் ஸ்லைடிங் பின்புற கதவுகள் - இறுதியாக மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள். பின்புறத்தில் உயரமான பின்புற விண்ட்ஸ்கிரீனுடன் LED டெயில்லைட்கள் கனெக்டட் ஆக இருப்பதால் தெளிவான தோற்றத்தை அளிக்கிறது.

கேபின் மற்றும் வசதிகள்

லெக்ஸஸ் ஒரு கிரீம் நிற கேபின் தீம் மற்றும் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் 14-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான இரண்டு பெரிய ஸ்கிரீன்கள் கொண்ட மினிமலிஸ்ட் டேஷ்போர்டு அமைப்பை வழங்கியுள்ளது. MPV ஆனது உலகளவில் - 4- 6- மற்றும் 7-சீட் அமைப்புகள் - என பல்வேறு இருக்கை ஆப்ஷன்களை கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவில் சந்தையில் 4- மற்றும் 7-இருக்கை வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.

இரண்டாவது வரிசையானது சாய்ந்த ஒட்டோமான் இருக்கைகள், 23-ஸ்பீக்கர் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் தலையணை-பாணியில் உள்ள ஹெட்ரெஸ்ட்கள் போன்றவற்றை கொண்டுள்ளது. லெக்ஸஸ் இரண்டாவது வரிசையை கேபினின் முன் மற்றும் பின் பகுதிகளுக்கு இடையே உள்ள பகிர்வில் பொருத்தப்பட்ட ஒரு பெரிய 48-இன்ச் டி.வியு -டன் வழங்குகிறது.

மேலும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், 10-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க: இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா -வுக்கு Mahindra XUV400 காரை பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா

இன்ஜின் விவரங்கள் ?

லெக்ஸஸ் ஆனது இந்திய-ஸ்பெக் செகன்ட் ஜெனரேஷன் LM காரை ஒரே ஒரு சிங்கிள்-ஹைபிரிட் பவர்டிரெயின் உடன் கொடுக்கின்றது. 250 PS அவுட்புட்டை கொடுக்கும் 2.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் e-CVT ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் MPV ஆனது ஆல்-வீல் டிரைவ் (AWD) உடன் வருகிறது.

தாமதமான துவக்கம் மற்றும் விநியோகம்

இது குறித்து தன்மய் பட்டாச்சார்யா லெக்ஸஸ் இந்தியாவின் நிர்வாக துணைத் தலைவர் அவர் கருத்து தெரிவிக்கையில் "இந்தியாவில் புதிய லெக்ஸஸ் LM -ன் அறிமுகமானது சிறப்பான-லக்ஸரி மொபிலிட்டிக்கான பயணத்தை நாங்கள் தொடங்கும்போது ​​எங்களுக்கு இது ஒரு முக்கிய தருணம் என்பதை காட்டுகின்றது. கடந்த ஆண்டு அதன் முன்பதிவுகள் தொடங்கியவுடன் புதிய லெக்ஸஸ் LM நாட்டில் உடனடி வெற்றியைப் பெற்றது. எங்கள் வாடிக்கையாளர்களின் பொறுமை மற்றும் பிராண்டின் மீதான அவர்களின் நம்பிக்கைக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். மேலும் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இந்த புதிய LM -ன் டெலிவரிகளை தொடங்க முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்." என்றார்.

மேலும் படிக்க: பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 தேதிகள் வெளியிடப்பட்டன

போட்டியாளர்கள்

புதிய லெக்ஸஸ் LM ஆனது டொயோட்டா வெல்ஃபையர் காருக்கு ஒரு ஆடம்பர மாற்றாக இருக்கும். மேலும் இது BMW X7, மெர்சிடிஸ்-பென்ஸ் GLS மற்றும் வரவிருக்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் V-கிளாஸ் போன்ற 3-வரிசை எஸ்யூவி -களுக்கு ஒரு லக்ஸரி MPV மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: Lexus LM ஆட்டோமெட்டிக்

r
வெளியிட்டவர்

rohit

  • 30 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது லேக்சஸ் எல்எம்

Read Full News

trendingஎம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.10.44 - 13.73 லட்சம்*
Rs.19.77 - 30.98 லட்சம்*
Rs.10.52 - 19.67 லட்சம்*
Rs.2 - 2.50 சிஆர்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை