பனோரமிக் சன்ரூஃப் உடன் Kia Syros வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
published on நவ 25, 2024 08:04 pm by shreyash for க்யா syros
- 2 Views
- ஒரு கருத்தை எழுதுக
கியா சைரோஸில் வெர்டிகலாக உள்ள 3-பாட் LED ஹெட்லைட்கள், ஃபிளேர்ட் வீல் ஆர்ச்கள், நீளமான ரூஃப் ரெயில்ஸ் மற்றும் L ஷேப்டு டெயில் லைட்ஸ் ஆகியவை இருக்கும் என்பதை முந்தைய டீஸர்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
-
சைரோஸ் கார் தயாரிப்பாளரின் எஸ்யூவி -யின் இந்திய வரிசையில் சோனெட் மற்றும் செல்டோஸ் இடையே விற்பனைக்கு கொண்டு வரப்படும் .
-
காரில் டூயல் டிஜிட்டல் டிஸ்பிளேக்கள், வென்டிலேட்டட் இருக்கைகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை அடங்கும்.
-
கியா சோனெட்டின் அதே பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறலாம்.
-
கியா காரின் விலை ரூ.9 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கியா நிறுவனம் சைரோஸ் காரை அடுத்ததாக அறிமுகப்படுத்த தயாராகவுள்ளது. கியா ஏற்கனவே சைரோஸ் எஸ்யூவி -யின் டீசர் வெளியிட்டுள்ளது. அதன் மூலமாக காரின் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் காரின் வடிவமைப்பையும் பார்க்க முடிந்தது. இப்போது சைரோஸின் மேலும் ஒரு டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை சன்ரூஃப் கிடைக்கும் என்பது டீசர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டீசரில் என்ன பார்க்க முடிகிறது ?
லேட்டஸ்ட் வீடியோ டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கியா சைரோஸ் ஒரு பனோரமிக் சன்ரூஃப் உடன் வரவுள்ளது. தற்போது சோனெட்டில் சிங்கிள்-பேன் சன்ரூஃபை மட்டுமே கிடைக்கிறது. மேலும் சைரோஸ் சோனெட்டை விட அதிக பிரீமியம் காராக இருக்கும் என அறிவிக்கப்பட்டதால் சன்ரூஃப் வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
முந்தைய டீஸர்கள் ஏற்கனவே அதன் வெர்டிகலாக அடுக்கப்பட்ட 3-பாட் எல்இடி ஹெட்லைட்களை நீண்ட எல்இடி டிஆர்எல்களை கொண்டிருக்கும் என்பதை காட்டியிருந்தன. வெளிப்புறத்தில் பெரிய ஜன்னல் பேனல்கள், ஒரு ஃபிளாட் ரூஃப் மற்றும் சி-பில்லர் கொண்ட ஜன்னல் பெல்ட்லைனில் ஒரு கிங்க் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. டீஸர் ஸ்கெட்ச்கள் பெரிய வீல் ஆர்ச்கள், ஸ்ட்ராங்கான ஷோல்டர் லைன் மற்றும் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் ஆகியவற்றைக் காட்டின. நீளமான ரூஃப் ரெயில்ஸ், எல்-வடிவ டெயில் லைட்ஸ் மற்றும் சுற்றி நிமிர்ந்த டெயில்கேட் ஆகியவற்றையும் பார்க்க முடிந்தது.
கேபின் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசதிகள்
கியா இன்னும் சைரோஸின் கேபினை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை என்றாலும் கூட இது சோனெட் மற்றும் செல்டோஸ் எஸ்யூவி -களை போலவே இருக்கும் என தெரிகிறது. சைரோஸ் டூயல்-டோன் உட்புற தீம் உடன் வரலாம். அதே நேரத்தில் ஆன்லைனில் காணப்பட்ட சில ஸ்பை ஷாட்கள் 2-ஸ்போக் ஸ்டீயரிங் இருப்பதையும் காட்டுகின்றன.
இது சோனெட் மற்றும் செல்டோஸ் போன்ற கார்களில் இருந்து நிறைய வசதிகளை பெறலாம். ஆட்டோ ஏசி, பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்றவற்றில் காணப்படுவது போன்ற டூயல் டிஸ்பிளே செட்டப் ஆகியவை இருக்கும். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், ரிவர்சிங் கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை கிடைக்கும்.
சோனெட்டின் அதே பவர்டிரெய்ன் தேர்வுகள்
சைரோஸ் ஆனது சோனெட் போன்ற பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.2-லிட்டர் N/A பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
83 PS |
120 PS |
116 PS |
டார்க் |
115 Nm |
172 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு iMT*, 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு iMT*, 6-ஸ்பீடு AT |
*iMT - இன்டெலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (கிளட்ச்லெஸ் மேனுவல்)
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா சைரோஸ் காரின் விலை ரூ.9 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்களாக எந்த காரும் இருக்காது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful