Kia Syros EV இந்தியா -வில் 2026 ஆண்டு அறிமுகமாகலாம்
published on டிசம்பர் 20, 2024 10:03 pm by shreyash for க்யா syros
- 101 Views
- ஒரு கருத்தை எழுதுக
சைரோஸ் EV ஆனது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV போன்றவற்றுடன் போட்டியிடும். மேலும் சுமார் 400 கி.மீ தூரம் வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
சைரோஸ் EV ஆனது வலுவூட்டப்பட்ட K1 பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். இது வழக்கமான சைரோஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
-
EV-சார்ந்த கார் என்பதை காட்டும் வகையில் புதிய பம்பர் மற்றும் குறிப்பிட்ட பேட்ஜ்கள் போன்ற சில வடிவமைப்பைப் பெறலாம்.
-
உள்ளே டாஷ்போர்டு பெரும்பாலும் மாறாமல் இருக்கும். ஆனால் EV என்பதை காட்டும் வகையில் சில விஷயங்களை பெறலாம்.
-
டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல் 2 ADAS போன்ற அதே வசதிகளுடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விலை ரூ.15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா சைரோஸ் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) வெர்ஷன் சமீபத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. சைரோஸ் வலுவூட்டப்பட்ட K1 கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது. மற்றும் கியா சோனெட் மற்றும் கியா செல்டோஸ் எஸ்யூவி -களுக்கு இடையில் இது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கியா சைரோஸ் அனைத்து எலக்ட்ரிக் பதிப்பையும் பெற வாய்ப்புள்ளது மேலும் இது இந்தியாவில் 2026 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம்.
சைரோஸ் EV -யின் வடிவமைப்பு
சைரோஸ் EV ஆனது, அதன் ICE பதிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே வலுவூட்டப்பட்ட K1 கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது. வடிவமைப்பைப் பொறுத்தவரையில் இது ICE காரை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் EV-என்பதை காட்டும் வகையில் திருத்தப்பட்ட பம்ப்பர்கள் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கலாம். வெர்டிகலான 3-பாட் எல்இடி ஹெட்லைட்கள், LED DRL -கள் மற்றும் நேர்த்தியான L வடிவ LED டெயில்லைட்கள் போன்ற விஷயங்கள் அப்படியே இருக்கலாம்.
உள்புறத்தில் சைரோஸ் EV ஆனது ஒரே கேபின் மற்றும் டேஷ்போர்டு செட்டப்பை கொண்டிருக்கலாம். இருப்பினும் ICE பதிப்பில் இருந்து அதைத் தனித்தனியாக காட்டுவதற்காக கான்ட்ராஸ்ட்டான கலர் அப்ஹோல்ஸ்டரியை பெறலாம்.
மேலும் பார்க்க: புதிய கியா சைரோஸ் காரின் வேரியன்ட் வாரியான வசதிகள் விளக்கப்பட்டுள்ளன
சைரோஸ் EV வசதிகள் மற்றும் பாதுகாப்பு
சைரோஸ் காரின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பு அதன் ICE பதிப்பின் அதே வசதிகளைக் கொண்டிருக்கும். பட்டியலில் டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று டிரைவரின் டிஸ்பிளேவுக்காக), கிளைமேட் கன்ட்ரோலுக்கான டூயல் டிஸ்பிளேவுக்கு இடையே இன்டெகிரேட்டட் 5 இன்ச் ஸ்கிரீன் மற்றும் 4-வே பவர்டு டிரைவர் சீட் ஆகியவை அடங்கும்.
இது 64 கலர் ஆம்பியன்ட் லைட்ஸ், வென்டிலேட்டட் முன் மற்றும் பின் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 8-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வரும். EV கார் என்பதால் சைரோஸ் V2L (வெஹிகிள் டூ லோடிங்) ஃபங்ஷனையும் பெறலாம். காரின் பேட்டரி பேக்கை பயன்படுத்தி உங்கள் இரண்டாம் நிலை வெளிப்புற சாதனங்களை இயக்க இது உதவும்.
6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பயணிகளின் பாதுகாப்புக்காக கொடுக்கப்படும்.
சைரோஸ் EV பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்
சைரோஸ் EV -க்கான பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரங்களை கியா இன்னும் வெளியிடவில்லை என்றாலும். இது சுமார் 400 கி.மீ டிரைவிங் ரேஞ்ச் வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். சர்வதேச சந்தைகளில் விற்கப்படும் ஹூண்டாய் இன்ஸ்டர் EV மற்றும் அதே தளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஹூண்டாய் EV ஆனது 42 kWh மற்றும் 49 kWh பேட்டரி பேக்குகளை 355 கி.மீ வரை WLTP-கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது.
சைரோஸ் EV எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
கியா சைரோஸ் EV -யின் விலை ரூ. 15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 EV ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.