• English
  • Login / Register

Kia Syros கிளைம்டு மைலேஜ் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

க்யா சிரோஸ் க்காக ஜனவரி 23, 2025 10:18 pm அன்று dipan ஆல் திருத்தம் செய்யப்பட்டது

  • 107 Views
  • ஒரு கருத்தை எழுதுக

சைரோஸில் உள்ள டீசல்-மேனுவல் ஆப்ஷன் இந்த பிரிவில் மிகவும் மைலேஜை கொடுக்கும் ஒரு ஆப்ஷனாக உள்ளது.

Kia Syros claimed fuel efficiency revealed

  • சைரோஸ் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1 லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆப்ஷன் உடன் கிடைக்கும்.

  • டீசல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  • சைரோஸ் டீசல்-மேனுவல் மூலம் 20.75 கி.மீ/லி மற்றும் டீசல்-ஆட்டோமெட்டிக் கலவையுடன் 17.65 கி.மீ/லி மைலேஜை கொடுக்கிறது.

  • டர்போ-பெட்ரோல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) ஆப்ஷன் உடன் இது இணைக்கப்பட்டுள்ளது.

  • மேனுவல் 18.20 கி.மீ/லி கொடுக்கும் போது DCT டர்போ-பெட்ரோல் ஆப்ஷன் 17.68 கிமீ/லி கொடுக்கும்.

  • சைரோஸின் விலை விவரங்கள் பிப்ரவரி 1, 2025 அன்று வெளியிடப்படும்.

பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக கியா சைரோஸ் இப்போது டீலர்ஷிப்களை  வந்தடைந்துள்ளது. கியா இப்போது சப்-4எம் எஸ்யூவி -யின் பவர்டிரெய்ன் வாரியாக கிளைம்டு மைலேஜ் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. விவரங்களை பார்க்கும் முன்னர் சைரோஸ் வழங்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை இங்கே பார்ப்போம்:

கியா சைரோஸ்: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

Kia Syros 1-litre turbo-petrol engine

கியா சைரோஸ் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் கியா சோனெட்டிலிருந்து பெறப்பட்ட 1-லிட்டர் டர்போ-பெட்ரோலுடன் வருகிறது. அதன் விவரங்கள் இங்கே:

இன்ஜின்

1.5 லிட்டர் டீசல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

116 PS

120 PS

டார்க்

250 Nm

172 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT*

6-ஸ்பீடு MT / 7-ஸ்பீடு DCT^

*AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

^DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

இப்போது கியா சப்-4எம் எஸ்யூவியின் பவர்டிரெய்ன் வாரியான மைலேஜ் புள்ளிவிவரங்களை பார்ப்போம்.

கியா சைரோஸ்: கிளைம்டு மைலேஜ்

Kia Syros side

 

1.5 லிட்டர் டீசல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

மேனுவல் டிரான்ஸ்மிஷன்

20.75 கி.மீ

18.20 கி.மீ

ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

17.65 கிமீ/லி (AT)

17.68 கிமீ/லி (DCT)

  • டீசல்-மேனுவல் கலவையானது சைரோஸ் வரிசையில் 20.75 கிமீ/லி மைலேஜுடன் மிகவும் சிறப்பான ஆப்ஷனாக இருக்கும் என தெரிகிறது. 

  • டர்போ-பெட்ரோல்-மேனுவல் ஆப்ஷன் மைலேஜ் அடுத்த சிறந்ததாகும். இது 18.20 கிமீ/லி கொடுக்கும். 

  • ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களின் மைலேஜ் திறன் ஆப்ஷன்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.

மேலும் பார்க்க: 5 படங்களில் கியா சைரோஸின் மிட்-ஸ்பெக் HTK(O) வேரியன்ட்டின் விவரங்கள் இங்கே

கியா சைரோஸ்: ஒரு கண்ணோட்டம்

Kia Syros

கியா சைரோஸ் என்பது கியா நிறுவனத்தின் அதிக பிரீமியமான சப்-4m கார். மேலும் பாக்ஸி வடிவமைப்புடன் பிக்சல் வடிவ ஹெட்லைட்கள், டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் LED டெயில் லைட்டுடன் வருகிறது. 

Kia Syros interior

உள்ளே இது டூயல்-டோன் கேபினுடன் வருகிறது இதன் தீம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்தது. இது டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் (ஒன்று டச் ஸ்கிரீன் மற்றும் டிரைவரின் டிஸ்பிளேவுக்கு மற்றொன்று), ஏசி கன்ட்ரோல்களுக்கான 5-இன்ச் டச்-பேஸ்டு ஸ்கிரீன், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பவர்டு முன் இருக்கைகள் போன்ற பிரீமியம் வசதிகளை கொண்டுள்ளது. மேலும் பின்புற இருக்கைகள் ரிக்ளைனிங் மற்றும் அட்ஜெஸ்ட்டபிள் ஃபங்ஷனை பெறுகின்றன. இது இந்த பிரிவில் இந்த வசதி ஒரு காரில் முதல் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது.

Kia Syros comes with an electronic parking brake

பாதுகாப்புக்காக கியா சைரோஸ் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), முன், பின் மற்றும் பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமராவுடன் வருகிறது. இது அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் லெவல் 2 மேம்பட்ட டிரைவர் அசிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் (ADAS) தொகுப்பு உள்ளது.

கியா சைரோஸ்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

Kia Syros rear

கியா சைரோஸின் விலை ரூ.9.70 லட்சம் முதல் ரூ.16.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சோனெட், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, மற்றும் கியா செல்டோஸ் ஆகிய சப்-4 மீ எஸ்யூவி -கள் மற்றும் காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Kia சிரோஸ்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience