• English
  • Login / Register

Kia Sonet Facelift: இந்தியாவில் முதல் முறையாக கேமராவின் பார்வையில் சிக்கியது

published on ஆகஸ்ட் 07, 2023 06:04 pm by rohit for க்யா சோனெட்

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் புதிய செல்டோஸிலிருந்து வடிமைப்புக்கான இன்ஸ்பிரேஷனை பெறும் என தெரிகிறது , மேலும் இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kia Sonet facelift spied

  • இது கியாவின் சப்-4m  எஸ்யூவி க்கான முதல் பெரிய புதுப்பிப்பு ஆகும்.

  • ஸ்பை ஷாட்கள் புதிய அலாய் வீல்கள், புதுப்பிக்கப்பட்ட முன்புற மற்றும் பின்புற தோற்றங்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை காட்டுகின்றன.

  • கேபின் மாற்றியமைக்கப்பபட்ட சீட்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சென்டர் கன்சோலைப் பெறலாம்.

  • கூடுதல் அம்சங்களில் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.

  • பவர்டிரெயின்களில் மாற்றங்கள் எதுவும் கொடுக்க்கப்படுவதற்கு வாய்ப்பில்லை; தற்போதுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் யூனிட்களே தொடரும்.

கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் சொந்த நாடான கொரியாவில் முதன்முதலில் கேமராவின் பார்வைக்கு  சிக்கியது. 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு  முன்னதாக, புதுப்பிக்கப்பட்ட சப்-4m  எஸ்யூவி  இப்போது இந்திய சாலையில் சோதனையின் போது தென்பட்டுள்ளது. இது கியா சொனெட் -க்கு கிடைக்கும் முதல் பெரிய மாற்றம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

புதிதாக என்ன காணப்பட்டது?

ஸ்பை ஷாட்களில், கருப்பு நிற உருவ மறைப்புக்குள் சில்வர் சோனெட் இருப்பதைக் காணலாம். கவர் இருந்தபோதிலும், புதிய LED ஹெட்லைட்டுகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் வடிவமைப்பு தொடங்கி சில புதிய விவரங்கள் தெளிவாகத் தெரிந்தன. இந்த சோதனையில் சிவப்பு நிற பிரேக் காலிப்பர்களும் இடம் பெற்றிருந்தன, இது GT  லைன் வேரியன்ட்டாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

Kia Sonet facelift spied

புதிய அலாய் வீல்களைத் தவிர, ஃபேஸ்லிஃப்டட்  சோனெட் ஆனது ORVM-பொருத்தப்பட்ட அமைப்பால் சுட்டிக்காட்டப்பட்டபடி 360 டிகிரி கேமராவுடன் வர வாய்ப்புள்ளது. அதன் தோற்றத்தில் வேறு எந்த மாற்றங்களும் எதிர்பார்க்கப்படவில்லை. பின்புறத்தில், இந்த எஸ்யூவி பெரும்பாலும் புதிய செல்டோஸ் போன்ற இணைக்கப்பட்ட LED டெயில்லைட்டுகளைக் கொண்டிருக்கும். முன்பக்கம் மற்றும் பின்புற பம்பர்களில் பெரிய கிரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும்: சப் காம்பேக்ட் எஸ்யூவியில் அகலமான சன்ரூஃப் கிடைக்குமா?

உட்புறத்திலும் மாற்றங்கள் இருக்கலாம்

Kia Sonet cabin

தற்போதைய சோனெட்டின் கேபின் படம் குறிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது

சமீபத்திய ஸ்பை ஷாட்கள் புதிய சோனெட்டின் புதுப்பிக்கப்பட்ட உட்புறத்தைக் காட்டவில்லை என்றாலும், கியா அதற்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். உட்புறத்தில் மேம்படுத்தப்பட்ட இருக்கை மேம்பாடு மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சென்டர் கன்சோல் ஆகியவை அடங்கும். ஏற்கனவே அதற்கு 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் டிஜிட்டைஸ்டு டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

அம்சங்களின் பட்டியல் கூடுதலாக இருக்கலாம்

Kia Sonet facelift spied

புதிய ஸ்பை ஷாட்களில் காணப்படும் 360 டிகிரி கேமராவைத் தவிர, புதுப்பிக்கப்பட்ட சோனெட் முழுமையான டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவையும் வரலாம். தற்போது இது வென்டிலேட்டட் முன்புற சீட்கள், பேடில் ஷிஃப்டர்கள், வயர்லெஸ் போன் சார்ஜிங், சிங்கிள் பேன் சன்ரூஃப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களுடன் நிரம்பியுள்ளது. இதன் பாதுகாப்பு கிட்டில் ஆறு ஏர்பேக்குகள், ISOFIX  சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவை அடங்கும்.

போனெட்டின் கீழ் ஏதேனும் புதுப்பிப்புகள் உள்ளதா?

சப்-4m எஸ்யூவியின் பவர்டிரெயின் விருப்பங்களில் கியா எந்த மாற்றங்களையும் செய்யும் என்று நாங்கள் நம்பவில்லை. இப்போதைக்கு, சோனெட் பின்வரும் எஞ்சின்-கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வருகிறது:

 
விவரக்குறிப்புகள்

 
1.2-லிட்டர் N.A பெட்ரோல்

 
1-லிட்டர்
டர்போ-பெட்ரோல்

 
1.5-லிட்டர் டீசல்

 
பவர்

83PS

120PS

116PS

 
டார்க்

115Nm

172Nm

250Nm

 
டிரான்ஸ்மிஷன்

 
5-ஸ்பீடு MT

 
6-ஸ்பீடு iMT / 7-ஸ்பீடு DCT

 
6-ஸ்பீடு iMT / 6-ஸ்பீடு AT

அறிமுகம் மற்றும் விலை

Kia Sonet facelift spied

ஃபேஸ்லிஃப்டட் சோனெட்-ஐ அடுத்த வருடத்தின் தொடக்கத்தில்  ரூ.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)  ஆரம்ப விலையில் கார் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர், டாடா நெக்ஸான் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய கார்களின் போட்டியை இந்த எஸ்யூவி தொடர்ந்து எதிர்கொள்ளும்.

படங்களின் ஆதாரம்

மேலும் படிக்கவும்: கியா சோனெட் ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Kia சோனெட்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience