சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Kia EV3 2025 ஆம் ஆண்டின் உலக கார் விருதை வென்றது

dipan ஆல் ஏப்ரல் 21, 2025 05:46 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
1 Views

ஹூண்டாய் இன்ஸ்டர் இந்த ஆண்டுக்கான EV காராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வோல்வோ EX90 உலக சொகுசு கார் பட்டத்தை வென்றுள்ளது.

  • WCOTY 2025 -ன் ரன்னர் அப்களாக ஹூண்டாய் இன்ஸ்டர் மற்றும் BMW X3 ஆகியவை இருந்தன.

  • 2003 முதல் உலக கார் விருதுகளில் கார் தயாரிப்பாளரின் ஆறாவது வெற்றியாக கியா EV3 குறிக்கிறது.

  • கியா செல்டோஸை போன்ற பரிமாணங்களைக் கொண்ட கொரிய கார் தயாரிப்பாளரின் உலகளாவிய வரிசையில் இது மிகச்சிறிய EV ஆகும்.

  • குளோபல்-ஸ்பெக் மாடல் 600 கிமீ வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் இரண்டு பேட்டரி பேக் ஆ பெறுகிறது.

  • இதன் இந்திய வெளியீடு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

2024 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த கார் பட்டத்தை வென்ற கியாவின் ஃபிளாக்‌ஷிப் எலக்ட்ரிக் காரான EV9 -க்குப் பிறகு 2025 ஆம் ஆண்டிற்கான விருதை கியா EV3 வென்றுள்ளது. உலக கார் விருதுகளின் 21 ஆண்டு வரலாற்றில் கியாவின் ஆறாவது வெற்றியை இந்த வெற்றி குறிக்கிறது. கியா EV3 -ன் சமீபத்திய சாதனை பற்றிய சில முக்கிய விவரங்கள் இங்கே:

தலைப்புக்காக போட்டி

இந்த ஆண்டின் உலக கார் பட்டத்திற்குத் தகுதிபெற, ஜனவரி 1, 2024 முதல் மார்ச் 30, 2025 வரை இரண்டு கண்டங்களில் குறைந்தபட்சம் இரண்டு முக்கிய சந்தைகளில் வாகனம் விற்கப்பட வேண்டும். மேலும் இது ஆண்டுதோறும் 10,000 யூனிட்டுகளுக்கு மேல் உற்பத்தி செய்யப்பட வேண்டும் மற்றும் அதன் முதன்மைச் சந்தைகளில் சொகுசு கார் அளவுகளுக்குக் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட வேண்டும்.

2025 ஆம் ஆண்டில் கியா EV3 இந்த அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தது. மற்றும் 52 உலகளாவிய போட்டியாளர்களில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. BMW X3 மற்றும் ஹூண்டாய் இன்ஸ்டர் (இது இந்தியாவில் 2026 ஆண்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது) இரண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தன.

மற்ற WCOTY 2025 பிரிவுகளில் வெற்றியாளர்கள்

2025 வேர்ல்டு சொகுசு கார்: வோல்வோ EX90

2025 வேர்ல்டு பெர்ஃபாமன்ஸ் கார்: போர்ஷே 911 கரேரா GTS

2025 வேர்ல்டு எலக்ட்ரிக் வாகனம்: ஹூண்டாய் இன்ஸ்டர்

2025 வேர்ல்டு அர்பன் கார்: BYD சீகல் / டால்பின் மினி

2025 ஆம் ஆண்டின் வேர்ல்டு கார் வடிவமைப்பு: ஃபோக்ஸ்வேகன் ID.பஸ்

மேலும் பார்க்க: 2025 ஸ்கோடா கோடியாக்: ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் லாரின் க்ளெமென்ட் வேரியன்ட்களின் படங்கள் ஒப்பீடு

கியா EV3 பற்றிய கூடுதல் விவரங்கள்

முன்பு குறிப்பிட்டபடி கியா EV3 என்பது கார் தயாரிப்பாளரின் வரிசையில் உள்ள சிறிய EV ஆகும். இது ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் -வின் அளவுகளை போலவே போலவே உள்ளது. ஹெட்லைட்கள், எல்-வடிவ LED DRLகள் மற்றும் கியா EV9 போன்ற டெயில் லைட்டுகளில் பிக்சல் போன்ற வடிவமைப்பு கொண்ட கார் தயாரிப்பாளரின் மற்ற EV -களை போன்ற வடிவமைப்புடன் இது வருகிறது.

கியா சிரோஸ் கேபின் போலவே உள்ளது. இதேபோன்ற சொல்வர் மற்றும் கிரே தீம் மற்றும் ஆரஞ்சு ஆக்ஸென்ட்களுடன் வருகிறது. இது வரவிருக்கும் கியா EV6 போன்ற 3-ஸ்போக் ஸ்டீயரிங் பெற்றாலும், ட்ரிபிள்-ஸ்கிரீன் லேஅவுட் மற்றும் சீட் அப்ஹோல்ஸ்டரி சிறிய சிரோஸை போலவே உள்ளது.

சிரோஸை போலவே கியா EV3 டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், கிளைமேட் கட்டுப்பாட்டுக்கான 5-இன்ச் ஸ்கிரீன், ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, ஆனால் 12-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) ஆகியவற்றைப் பெறுகிறது. அதன் பாதுகாப்பு தொகுப்பில் பல ஏர்பேக்ஸ் மற்றும் லெவல்-2 மேம்பட்ட இயக்கி உதவி அமைப்புகள் (ADAS) தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும்.

குளோபல்-ஸ்பெக் Kia EV3 இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை வழங்குகிறது: 58.3 kWh ஸ்டாண்டர்டர்டு பேக் மற்றும் 81.4 kWh நீண்ட தூர யூனிட், WLTP கிளைம்டு 600 கிமீ வரை. இரண்டு பேட்டரி பேக்குகளும் 204 PS மற்றும் 283 Nm அவுட்புட்டை கொடுக்கும் அதே ஃபிரன்ட்-ஆக்ஸில்-மவுண்டட் (FWD) எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்க்கப்படும் இந்திய வெளியீடு மற்றும் விலை

கியா EV3 -ன் இந்தியா அறிமுகம் கொரிய கார் தயாரிப்பாளரால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் அறிமுகப்படுத்தப்பட்டால், இதன் விலை ரூ.30 முதல் ரூ.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம். எனவே இது பிஒய்டி அட்டோ 3 அது போட்டியாக இருக்கும் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக், டாடா கர்வ்வ் EV, MG ZS EV, மஹிந்திரா பிஇ 6 மேலும் வரவிருக்கும் மாருதி இ விட்டாரா ஆகியவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Kia ev3

மேலும் ஆராயுங்கள் on க்யா ev3

க்யா ev3

Rs.30 லட்சம்* Estimated Price
ஆகஸ்ட் 15, 2036 Expected Launch
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை