சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

சோதனையின் போது படம் பிடிக்கப்பட்ட Jeep Meridian ஃபேஸ்லிஃப்ட் கார், ADAS இருப்பது உறுதியாகியுள்ளது

published on மே 21, 2024 04:01 pm by bhanu for ஜீப் meridian

முன்பக்க பம்பரில் ரேடார் இருப்பதனால் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் இந்த காரில் கொடுக்கப்படலாம் என தெரிகிறது.

இந்தியாவில் ஜீப் ரேங்லர் ஃபேஸ்லிஃப்ட் -க்கு பிறகு அமெரிக்க கார் தயாரிப்பாளரான ஜீப் இப்போது ஜீப் மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட்டை அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளது. 2024 ஜீப் மெரிடியனின் சமீபத்திய ஸ்பை ஷாட் புதிய விவரங்களை காட்டுகின்றது. மேலும் இது விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதை காட்டுகிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மெரிடியனில் இருந்து எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று இங்கே பார்ப்போம்.

வெளிப்புறம்

வெளிப்புறங்களில் கிரில் மற்றும் புதிய வடிவிலான செய்யப்பட்ட முன்பக்க பம்பரில் சில சில்வர் பூச்சுகளுடன் திருத்தங்களை எதிர்பார்க்கலாம். மாற்றங்களில் இண்டெகிரேட்டட் DRL -கள் கொண்ட புதிய ஹெட்லைட் செட்டப் கொடுக்கப்படலாம். சோதனை காரில் முன் பம்பரில் ஒரு ரேடார் இருப்பது தெரிய வருகிறது. இது சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -கள் வழங்குவதைக் குறிக்கிறது. இது புதிய அலாய் வீல் வடிவமைப்பு, புதிய வடிவிலான செய்யப்பட்ட டெயில் லைட் செட்டப் மற்றும் புதிய வடிவிலான பின்புற பம்பர் ஆகியவற்றையும் பெறலாம்.

மேலும் பார்க்க: 2024 Jeep Wrangler அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ.67.65 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

உட்புறங்கள்

மெரிடியன் எஸ்யூவியின் கேபினுக்குள் புதிய சீட் அப்ஹோல்ஸ்டரிக்காக அதிக மாற்றங்கள் இருக்காது. இருப்பினும் காம்பஸின் நைட் ஈகிள் பதிப்பிலிருந்து பெறப்பட்ட டாஷ்கேம் யூனிட் மற்றும் பின்பக்கப் பயணிகளின் வசதிக்காக பின்புற விண்டோ பிளைண்டுகள் போன்ற சில அடிப்படை உபகரணங்களையும் ஜீப் இதில் கொடுக்கலாம். தற்போதைய மாடல் 10.2-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் கனெக்டட் கார் டெக்னாலஜி, டூயல் ஜோன் கிளைமேட் காலநிலை கன்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் 9-ஸ்பீக்கர் ஆல்பைன்-டியூன் செய்யப்பட்ட ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் பார்க்க: இந்தியாவில் டீசல் மைல்ட்-ஹைப்ரிட் டொயோட்டா ஃபார்ச்சூனரை பார்க்க தயாராகுங்கள்

பவர்டிரெய்ன்

ஜீப் மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட் காரில் இருக்கும் இன்ஜினில் எதுவும் மாறாமல் இருக்கும். 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் யூனிட்டுடன் கனெக்டட் செய்யப்பட்ட அதே 2-லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் தொடர்ந்து இயக்கப்படும். இந்த இன்ஜின் 170 PS பவரையும் 350 Nm டார்க்கையும் வழங்கும். தற்போதைய மாடலை போலவே 4-வீல் டிரைவ் டிரெய்ன் (4WD) டாப்-எண்ட் ஆட்டோமேட்டிக் பதிப்புகளில் மட்டுமே கொடுக்கப்படலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

ஜீப் மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட் தற்போதைய மாடலை விட சற்று கூடுதலான விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.33.60 லட்சத்தில் இருந்து ரூ.39.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கலாம். இது டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகியவற்றுக்கு போட்டியாக தொடரும்.

பட ஆதாரம்

மேலும் படிக்க: ஜீப் மெரிடியன் டீசல்

b
வெளியிட்டவர்

bhanu

  • 21 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஜீப் meridian

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை