2024 Jeep Wrangler அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, விலை ரூ.67.65 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
published on ஏப்ரல் 25, 2024 07:55 pm by rohit for ஜீப் வாங்குலர்
- 53 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஏற்கனவே 100 -க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ள ஃபேஸ்லிஃப்ட் ரேங்லரின் டெலிவரிகள் 2024 மே நடுப்பகுதியில் இருந்து தொடங்கும்.
-
இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது: அன்லிமிடெட் மற்றும் ரூபிகான்.
-
2024 ரேங்லர் விலை ரூ.67.65 லட்சத்தில் இருந்து ரூ.71.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கின்றது.
-
புதிய வடிவ டாஷ்போர்டு மற்றும் பெரிய டச் ஸ்கிரீன் உள்ளிட்ட மிகப்பெரிய மாற்றங்கள் உட்புறத்தில் உள்ளன.
-
4WD அமைப்புடன் கூடிய ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது.
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஜீப் ரேங்க்லர் லேசான வடிவமைப்பு மாற்றங்களுடனும் புதுப்பிக்கப்பட்ட கேபின் மற்றும் சில புதிய வசதிகளுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அன்லிமிடெட் மற்றும் ரூபிகான் ஆகிய இரண்டு வேரியன்ட்களிலும் இது இன்னும் கிடைக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ரேங்லர் 100 க்கும் மேற்பட்ட முன்கூட்டிய ஆர்டர்களை பெற்றுள்ளது என்றும் மே 2024 நடுப்பகுதியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கான டெலிவரி தொடங்கும் என்றும் ஜீப் நிறுவனம் கூறியுள்ளது.
2024 ரேங்க்லர் விலை
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வித்தியாசம் |
அன்லிமிடெட் |
ரூ.62.65 லட்சம் |
ரூ.67.65 லட்சம் |
+ ரூ.5 லட்சம் |
ரூபிகான் |
ரூ.66.65 லட்சம் |
ரூ.71.65 லட்சம் |
+ ரூ.5 லட்சம் |
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலுடன் ஒப்பிடும்போது ஜீப் எஸ்யூவி மிட்லைஃப் அப்டேட் உடன் ரூ.5 லட்சம் விலை உயர்ந்துள்ளது.
வடிவமைப்பில் உள்ள புதுப்பிப்புகள்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ரேங்க்லர் நேர்த்தியான 7 பிளாக் ஸ்லேட்டுகளுடன் புதிய கிரில்லை பெறுகிறது. ஜீப் இந்தியாவில் சாஃப்ட்-டாப் மற்றும் ஹார்ட்-டாப் பதிப்புகளில் வழங்குகிறது. இது 18-இன்ச் அலாய் வீல்கள் கொண்ட புதிய தொகுப்புடன் வருகிறது. அதே சமயம் அதன் பின்புற தோற்றம் ப்ரீ-பேஸ்லிஃப்ட் மாடல் போலவே பெரிதாக மாற்றமில்லாமல் உள்ளது.
உள்ளே நிறைய மாற்றங்கள்
உட்புறத்தில் நீங்கள் புதிய டாஷ்போர்டு அமைப்பை பார்க்கலாம். இது இப்போது மையத்தில் பெரிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் (வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன்) கொண்டுள்ளது. சென்ட்ரல் ஏசி வென்ட்கள் சிறியதாகவும், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டிற்கு இடமளிக்கும் வகையில் இந்த வேரியன்ட்டில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
புதிய டச் ஸ்கிரீனை தவிர 2024 ரேங்லர் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் 7 இன்ச் கலர் டிஸ்பிளே, 12-வே பவர்-அட்ஜஸ்டபிள் முன் இருக்கைகள் மற்றும் டூயல் ஜோன் ஏசி ஆகியவற்றைப் பெறுகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரிவர்சிங் கேமரா மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றை உள்ளடக்கியது.
மேலும் பார்க்க: பார்க்க: கோடை காலத்தில் உங்கள் கார் ஏசியில் சிறப்பான குளிர்ச்சியை பெறுவது எப்படி
பெட்ரோல்-ஒன்லி மட்டுமே
இது ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருந்து அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (270 PS/400 Nm) அப்படியே வைத்து கொண்டுள்ளது. பெட்ரோல் இன்ஜின் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் மல்டி டிரைவ் மோடுகள் மற்றும் லாக்கிங் டிஃபரென்ஷியல்ஸ் உட்பட தீவிர 4x4 ஹார்டுவேர் ஆகியவை இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
போட்டியாளர்கள்
இந்தியாவில் ஃபேஸ்லிஃப்டட் ஜீப் ரேங்லர் கார் ஆனது செய்கிறது மெர்சிடிஸ்-பென்ஸ் G-கிளாஸ் மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் போன்ற ஆடம்பர ஆஃப் ரோடர்களுக்கு குறைவான விலையில் உள்ள மாற்றாக இருக்கும்.
மேலும் படிக்க: ரேங்லர் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful