• English
  • Login / Register

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Maruti Suzuki Ertiga குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்களில் 1-ஸ்டார் என்ற மோசமான பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது

published on ஜூலை 31, 2024 07:38 pm by dipan for மாருதி எர்டிகா

  • 39 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மாருதி சுஸூகி எர்டிகாவின் பாடிஷெல் 'நிலையற்றது' என மதிப்பிடப்பட்டது.

African-spec Maruti Suzuki Ertiga Global NCAP test 2024

  • குளோபல் NCAP -யின் கடுமையான விதிமுறைகளின் படி மாருதி சுஸூகி எர்டிகா மீண்டும் சோதனை செய்யப்பட்டது.

  • பெரியவர்களுக்கான பாதுகாப்பு முந்தைய மூன்றில் நட்சத்திரம் என்பதில் இருந்து ஒரு நட்சத்திரமாக குறைந்துள்ளது.

  • குழந்தைகளுக்கான பாதுகாப்பு மதிப்பீடு மூன்று முதல் இரண்டு நட்சத்திரங்கள் வரை குறைந்துள்ளது.

  • ஆப்பிரிக்க-ஸ்பெக் மாருதி சுஸுகி எர்டிகா இரட்டை முன் ஏர்பேக்குகள் மற்றும் ISOFIX ஆங்கரேஜ்களை கொண்டுள்ளது. ஆனால் பக்கவாட்டு மற்றும் கர்ட்டெயின் ஏர்பேக்குகள் இல்லை.

மாருதி சுஸூகி எர்டிகா குளோபல் NCAP கிராஷ் சோதனைகளின் சமீபத்திய சுற்றுகளில் மோசமான 1 நட்சத்திரத்தை மட்டுமே பெற்றுள்ளது. சோதனை செய்யப்பட்ட மாடல் தென்னாப்பிரிக்காவில் விற்கப்படும் இந்த கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது ஆகும். 2019 ஆண்டில் நடந்த குளோபல் NCAP சோதனையில் மாருதி சுஸூகி எர்டிகா மூன்று நட்சத்திரங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஜூலை 2022 -ல் அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான நெறிமுறைகளுடன் 2024 மாடல் அப்டேட் செய்யப்பட்ட மதிப்பீடுகளில் மோசமாகச் செயல்பட்டது. 2024 மதிப்பீடுகள் பற்றிய விரிவான பார்வை இதோ:

பெரியவர்களுக்கான பாதுகாப்பு - 23.63/34 புள்ளிகள் (69.5 சதவீதம்)

Maruti Suzuki Ertiga Global NCAP test 2024

குளோபல் NCAP தரநிலைகளின்படி மாருதி சுஸூகி எர்டிகா முன்பக்க இம்பாக்ட், பக்க இம்பாக்ட் மற்றும் சைடு போல் இம்பாக்ட் உள்ளிட்ட பல விதிமுறைகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது. முன்பக்க தாக்க சோதனையில், ஓட்டுநரின் மற்றும் பயணிகளின் தலை மற்றும் கழுத்துக்கான பாதுகாப்பு 'நல்லது' என மதிப்பிடப்பட்டது. ஓட்டுநரின் மார்புக்கான மதிப்பீடு 'நல்லது' என மதிப்பிடப்பட்டது டேஷ்போர்டின் பின்னால் உள்ள அபாயகரமான கட்டமைப்புகளுடன் சாத்தியமான தொடர்பு காரணமாக, 'விளிம்பு நிலை' என்ற மதிப்பீடு கிடைத்தது. ஓட்டுநர் மற்றும் பயணிகளின் கால் முன்னெலும்புகளுக்கு பாதுகாப்பு 'போதுமானதாக' கருதப்பட்டது. புட் வெல் பகுதி 'நிலையற்றது' என மதிப்பிடப்பட்டது. மேலும் பாடிஷெல் 'நிலையற்றது' என மதிப்பிடப்பட்டது. இது கூடுதல் சுமைகளைத் தாங்கும் திறன் இல்லை என்பதைக் குறிக்கிறது.

பக்க தாக்க சோதனையில், தலை, வயிறு மற்றும் இடுப்புக்கான பாதுகாப்புக்கு 'நல்லது' என மதிப்பீடு கிடைத்தது. அதே நேரத்தில் மார்பு 'போதுமான' பாதுகாப்பைப் பெற்றது. கர்ட்டெயின் ஏர்பேக்குகள் ஒரு ஆப்ஷனலாக கூட கிடைக்காததால் சைடு போல் இம்பாக்ட் சோதனையை நடத்த முடியவில்லை.

மேலும் படிக்க: அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டே ஆண்டுகளில் Maruti Grand Vitara விற்பனையில் 2 லட்சம் எண்ணிக்கை என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு - 19.40/49Pts (39.77 சதவீதம்)

Maruti Suzuki Ertiga Global NCAP test 2024

3 வயது மற்றும் 18 மாத வயதுடைய டம்மிகளுக்கான இரண்டு சைல்டு சீட்ISOFIX மவுண்ட்கள் மற்றும் மேல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி முன்னோக்கி எதிர்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டன. 3 வயதான டம்மிக்கான இருக்கை முன்பக்க தாக்க சோதனையின் போது தலை வெளிப்படுவதை வெற்றிகரமாக தடுத்தது, ஆனால் அதன் மார்பு மற்றும் கழுத்துக்கான பாதுகாப்பு குறைவாகவே இருந்தது. இதற்கு நேர்மாறாக 18 மாத வயதுடைய டம்மி அதிவேக வீழ்ச்சியை அனுபவித்தது, இதன் விளைவாக மார்பு மற்றும் கழுத்துக்கு மோசமான பாதுகாப்பு கிடைத்தது. இருப்பினும் பக்க தாக்க சோதனையில் இரு டம்மிகளும் முழு பாதுகாப்பைப் பெற்றன.

ஆப்ரிக்கா-ஸ்பெக் எர்டிகாவில் உள்ள பாதுகாப்பு வசதிகள்

எர்டிகாவின் அடிப்படை மாடல் குளோபல் NCAP -யால் சோதிக்கப்பட்டது. பாதுகாப்பு அம்சங்களில், இரட்டை முன் ஏர்பேக்குகள் உள்ளன, ஆனால் பக்கவாட்டு மற்றும் கர்ட்டெயின் ஏர்பேக்குகள் இல்லை. இது முன் டென்ஷனர்கள் மற்றும் ஃபோர்ஸ் லிமிட்டர்களுடன் 3-பாயின்ட் கொண்ட முன் இருக்கை பெல்ட்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. பின்புற சீட்பெல்ட் ஆப்ஷன்களில் இரண்டாவது வரிசையில் இரண்டு 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள் சென்டர் 2-பாயிண்ட் பெல்ட் மற்றும் மூன்றாவது வரிசையில் இரண்டு 3-புள்ளி சீட் பெல்ட்கள் அடங்கும். இந்த காரில் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்களும் உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் பக்கவாட்டில் உள்ள மேலும் இரண்டு ஏர்பேக்குகள் ஹையர் வேரியன்ட் வேரியன்ட்களில் உற்பத்தியாளரால் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், மாருதி சுஸுகி எர்டிகாவில் ரேஞ்ச்-டாப்பிங் வேரியன்ட்களில் கூட பாதசாரிகளின் பாதுகாப்பிற்கான செயலில் பாதுகாப்பு தொழில்நுட்பம் இல்லை.

குளோபல் NCAP விபத்து சோதனையின்படி எர்டிகாவின் பயணிகள் சீட்பெல்ட் ப்ரீடென்ஷனர் சரியாக வேலை செய்யவில்லை. பின்புறம் எதிர்கொள்ளும் குழந்தைகள் இருக்கைக்கான பயணிகள் ஏர்பேக்கை துண்டிக்கவும் இது அனுமதிக்கவில்லை. எனவே விபத்துத் சோதனையில் ஒட்டுமொத்தமாக குறைவான மதிப்பெண்ணை பெற்றது.

இந்தியா-ஸ்பெக் எர்டிகா விலை மற்றும் போட்டியாளர்கள்

மாருதி எர்டிகாவின் விலைகள் ரூ.8.69 லட்சம் முதல் ரூ.13.03 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான் இந்தியா) உள்ளது. இது இந்தியாவில் ரெனால்ட் ட்ரைபர் மற்றும் கியா கேரன்ஸ்  உடன் போட்டியிடுகிறது. மேலும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் அத்துடன் தி மாருதி இன்விக்டோ ஆகிய கார்களுக்கு மாற்றாக இருக்கும்.

லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: எர்டிகா ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti எர்டிகா

1 கருத்தை
1
J
jatinder nayyar
Jul 31, 2024, 9:50:50 PM

This is to ensure that the highest selling car be bad mouthed and desold. I don't think people will stop buying because of poor rating. This car has already proved its worth to lakhs of people in so m

Read More...
    பதில்
    Write a Reply
    Read Full News

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trending எம்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    • க்யா கார்னிவல்
      க்யா கார்னிவல்
      Rs.40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
    • எம்ஜி euniq 7
      எம்ஜி euniq 7
      Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: ஏப், 2025
    • க்யா கேர்ஸ் ev
      க்யா கேர்ஸ் ev
      Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
      அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2025
    ×
    We need your சிட்டி to customize your experience