இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது: சுசுகி நிறுவனத்தின் ஹைபிரிட் தொழில்நுட்பம் IIMS 2015 நிகழ்வில் வெளியிடப்பட்டது

மாருதி சியஸ் க்கு published on aug 24, 2015 09:13 am by manish

  • 1 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

மாருதி நிறுவனம் தனது கலப்பின வகை சியாஸ் மாடலை இம்மாத இறுதிக்குள்  துரிதமாக செயல்படுகிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே ஆனால் அதற்க்குரிய தேதியை இன்னும் உறுதிசெய்யவில்லை. 2015 இந்தோனேஷியா சர்வதேச மோட்டார் ஷோ நடந்துகொண்டிருக்கும் போது கைக்கிண்டோ இந்தோனேஷியா சர்வதேச ஆட்டோ ஷோவில், சுசூக்கி இந்த கலப்பின வகையை வெளியிட்டது. வெளியான சில செய்திகளின் படி இந்தியா சுதந்திர தினம் முடிந்த ஒரு வாரத்திற்குள் இந்திய சுதந்திர நாள் முடிந்து, அதற்கு அடுத்த வாரத்தில் இந்த காரை அறிமுகம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என தெரிகிறது. இப்போழுது, சந்தையில் உள்ள டீசல் வகை காரை புதிதாக வரும் கலப்பின சியாஸ் கார் மாற்றீடு செய்யும், ஆனால் பெட்ரோல் வகை மாடலுக்கு எவ்வித மாற்றமும் இருப்பதாக உறுதியான செய்திகள் இல்லை என அறியபடுகிறது. SHVS (ஸ்மார்ட் ஹைபிரிட் சுசூக்கி வாகனம்) தொழில்நுட்பத்துடன் இணைந்த 1.3 லிட்டர் மல்டிஜெட் இஞ்ஜின் இந்த கலப்பின வகையில் பயன்படுத்தபட்டுள்ளது. சியாஸ் கலப்பினத்தில் லித்தியம் ஐயன் பேட்டரிகள் பயன்படுத்தபட்டுள்ளன.

மேலும், மீளாக்க நிறுத்த முறை (ரீஜெனரேடிவ் பிரேக்கிங்) மூலம் பேட்டரிகள் ரீசார்ஜ் ஆக உதவி செய்வதுடன் மட்டுமல்லாமல், சக்தி விரயம் ஆவதையும் தடுக்கிறது. மேலும், இந்த முறை இயந்திரத்திலிருந்து கூடுதல் முறுக்கு விசையை பிரித்தெடுக்க உதவுகிறது மற்றும் இயக்க முடுக்கத்திற்கும் நிறுத்தத்திற்கும் சுலபமாக இருப்பதற்கும் உதவுகிறது. முக்கியமாக, சியாஜ் காரின் இந்த அமைப்பு, முந்தைய 26 kmpl எரிபொருள் திறனுடன் ஒப்பிடுகையில், 28-30 kmpl என்ற உயர்ந்த எரிபொருள் திறன் வழங்க உறுதியாக உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கலப்பின கார் 88.5 hp @ 4000 rpm திறனையும், 200Nm முறுக்கு விசையையும் தரவல்லது. இத்துடன் இணைந்த மின்சார ஸ்டார்டர் ஜெனரேட்டர் மோட்டார் 2.27 hp திறனையும், 60Nm முறுக்கு விசையையும் தரவல்லது.

இந்த கலப்பின காரில், மேலும் சில கலைநயமிக்க மேம்பாடுகளை மாருதி நிறுவனம் முன்னிறுத்தியுள்ளது அதுவே பெட்ரோல் வகை சிறிது சிறிதாக குறைவதற்க்கும் காரணமாக இருக்கும் என நம்பபடுகிறது. மாருதி சுசூக்கி வெளியிட்ட அனைத்து உயர்தர கார்கள் மற்றும் சமீபத்தில் வந்த சியாஸ் போலவே, இந்த புதிய கலப்பின காரும் புதிய பிரத்தியேக நெக்க்ஷா ஷோரூம் மூலமாகவே விற்பனை செய்கிறது.

தற்போது, நெக்ஸா ஷோரூம்களில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Sக்ராஸ் கார்களைத் தவிர சியாஸ் கார்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மாருதி விற்பனைதாரர்கள் ரூபாய் 25 ஆயிரம் தள்ளுபடி அளிக்கின்றனர். ஏற்க்கனவே உள்ள இருப்புகளை வேகமாக விற்று முடிக்கும் நோக்கத்துடன், இந்த தள்ளுபடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது.

2015 ஆண்டின் ஜெனீவா மோட்டார் ஷோவில், மாருதி நிறுவனம் தனது SHVS (ஸ்மார்ட் ஹைபிரிட் வேகிக்கில் பை சுசூக்கி) தொழில்நுட்பத்தை விவரிக்கும் போது, மீளவுயிர்ப்பிக்கும் பிரேக்கிங்க் (ரிஜெனரெட்டிவ் பிரேகிங்) லித்தியம்-ஐயான் பேட்டரியை எப்படி மறுஊட்டம் (ரீசார்ஜ்) செய்கிறது என்றும், எவ்வாறு அதிக முறுக்கு சக்தியை தருகிறது என்பது விளக்கப்பட்டது. தற்போது வந்த தகவலின்படி, புதிய கலப்பின சியாஸ் காரின் விலை தோராயமாக ரூபாய் 75,000 – 1.2 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள கார் ரகங்களை விட அதிகமாக இருக்கும். மேலும், இதன் வேரியண்ட்களுக்கு தகுந்தவாறு விலை வேறுபடும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி சியஸ்

Read Full News
அதிக சேமிப்பு!
% ! find best deals on used மாருதி cars வரை சேமிக்க
பயன்படுத்தப்பட்ட <cityname> இல் <modelname>ஐ காண்க

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

trendingசேடன்-

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience