Hyundai Exter அறிமுக விலை முடிவுக்கு வந்தது, ரூ.16,000 வரை உயர்ந்த காரின் விலை
published on அக்டோபர் 10, 2023 05:58 pm by shreyash for ஹூண்டாய் எக்ஸ்டர்
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் எக்ஸ்டரின் CNG கார் வேரியன்ட்களும் விலை உயர்வை பெற்றுள்ளன.
-
ஹூண்டாய் எக்ஸ்டரின் பெட்ரோல் மேனுவல் கார் வேரியன்ட்களின் விலை ரூ.16,000 வரை அதிகரித்துள்ளது.
-
இதன் ஆட்டோமேட்டிக் கார் வேரியன்ட்களின் விலை ரூ.12,000 வரை அதிகரித்துள்ளது.
-
1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் CNG பவர்டிரெயின் ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது.
-
இப்போது அதன் விலை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.10.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கும்.
2023 ஜூலை மாதத்தில் விற்பனைக்கு வந்த பிறகு ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் விலை முதன்முதலாக ரூ.16,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் மூலம், மைக்ரோ எஸ்யூவி -க்கான அறிமுக விலை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. எக்ஸ்டரின் CNG கார் வேரியன்ட்களும் இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளன. மைக்ரோ எஸ்யூவி -க்கான வேரியன்ட்கள் வாரியாக திருத்தப்பட்ட விலைகளை கீழே வழங்கியுள்ளோம்.
பெட்ரோல்-மேனுவல்
|
|
|
|
EX |
|
|
|
EX (O) |
|
|
|
S |
|
|
|
S (O) |
|
|
|
SX |
Rs 8 lakh |
Rs 8.10 lakh |
+ Rs 10,000 |
SX DT |
|
|
|
SX (O) |
|
|
|
|
|
|
|
|
|
|
|
S CNG |
|
|
|
SX CNG |
|
|
|
பெட்ரோல் ஆட்டோமெட்டிக்
|
|
|
|
S AMT |
|
|
|
SX AMT |
|
|
|
SX AMT DT |
|
|
|
SX (O) AMT |
|
|
|
|
|
|
|
|
|
|
|
-
எக்ஸ்டரின் டாப்-ஸ்பெக் SX(O) கனெக்ட் பெட்ரோல்-மேனுவல் கார் வேரியன்ட் அதிகபட்சமாக ரூ.16,000 விலை உயர்வைப் பெற்றுள்ளது.
-
SX டூயல் டோன் மற்றும் SX (O) கனெக்ட் தவிர, மற்ற அனைத்து பெட்ரோல்-மேனுவல் கார் வேரியன்ட்களும் ரூ.10,000 வரை விலை உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் முந்தைய இரண்டு வேரியன்ட்களும் ரூ.11,000 விலை உயர்வை பெற்றுள்ளன.
-
ஹூண்டாய் எக்ஸ்டரின் CNG கார் வேரியன்ட்களுக்கு வாடிக்கையாளர்கள் ரூ.9,000 கூடுதலாக செலுத்த வேண்டும்.
-
ஹூண்டாய் எக்ஸ்டரின் AMT கார் வேரியன்ட்கள் ரூ.12,000 வரை விலை உயர்ந்துள்ளன, டாப்-எண்ட் SX(O) AMT கனெக்ட் டூயல்-டோன் ரூ.5,000 உயர்வைப் பெறுகிறது.
-
பேஸ்-ஸ்பெக் EX மேனுவல் மற்றும் டாப்-ஸ்பெக் SX(O) AMT கனெக்ட் வேரியன்ட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும் விவரம் அறிந்து கொள்ள : 2023 செப்டம்பர் மாதத்தில் காம்பேக்ட் SUV விற்பனையில் ஹூண்டாய் கிரெட்டா முதலிடத்தில் நீடித்துள்ளது
பவர்டிரெயின்கள் விவரம்
ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் 83PS மற்றும் 114Nm ஐ உருவாக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் ஆற்றல் பெறுகிறது மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. CNG கார் வேரியன்ட்களும் அதே இன்ஜினை பயன்படுத்துகின்றன, ஆனால் 69PS மற்றும் 95Nm குறைந்த அவுட்புட்டை கொடுக்கின்றன. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் மட்டுமே கிடைக்கும்.
மேலும் விவரம் அறிந்து கொள்ள : கியா செல்டோஸ் மற்றும் கியா கேரேன்ஸ் கார்களின் விலை ரூ.30,000 வரை உயர்ந்துள்ளது
புதிய விலை வரம்பு & போட்டியாளர்கள்
ஹீண்டாய் எக்ஸ்டர் கார்களின் விலை இப்போது ரூ. 6 லட்சம் முதல் ரூ. 10.15 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம் டெல்லி) இருக்கும். அது டாடா பன்ச், போன்றவற்றுடன் நேரடியாக போட்டியிட்டாலும் மாருதி இக்னிஸ், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், சிட்ரோன் C3, மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் போன்ற கார்களுக்கு மாற்றாக உள்ளது.
மேலும் தெரிந்து கொள்ள: எக்ஸ்டர் AMT