Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட் காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களின் முழுமையான விவரங்கள் இங்கே
ஹூண்டாய் கிரெட்டா க்காக ஜனவரி 08, 2024 12:22 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 676 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபேஸ்லிஃப்டட் கிரெட்டா ஸ்டாண்டர்டாக 36 பாதுகாப்பு அம்சங்களுடனும், 19 ADAS வசதிகள் என மொத்தமாக 70 -க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வரும்.
-
ஹூண்டாய் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவை ஜனவரி 16 -ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது.
-
செல்டோஸ் ADAS தொகுப்பை விட அதிக அம்சங்களுடன் கிரெட்டா முதல் முறையாக ADAS தொழில்நுட்பத்தைப் பெறும்.
-
போர்டில் உள்ள மற்ற பாதுகாப்பு அம்சங்களில் ESC, 6 ஏர்பேக்குகள் மற்றும் ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை அடங்கும்.
-
தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்ட்டை பொறுத்து மூன்று இன்ஜின்கள் மற்றும் நான்கு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறுகிறது.
-
விலை ரூ. 11 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா விரைவில் இந்திய சந்தையில் நுழைய உள்ளது. தற்போது அதன் விலை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, புதுப்பிக்கப்பட்ட காம்பாக்ட் எஸ்யூவியில் உள்ள முக்கிய பாதுகாப்பு வசதிகளின் விவரங்களை ஹூண்டாய் இப்போது பகிர்ந்துள்ளது. புதிய கிரெட்டாவின் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள முக்கியமான வசதிகளில் ஒன்று ஒன்று அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகும்.
ஸ்டாண்டர்டான பாதுகாப்பு கிட்
இப்போதுள்ள பதிப்பைப் போலவே, கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட்டிலும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை ஸ்டாண்டர்டாக இருக்கும். அனைத்து பயணிகளுக்கும் நினைவூட்டலுடன் கூடிய 3-பாயின்ட் சீட்பெல்ட்கள், EBD உடன் ABS மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவையும் ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படலாம். ஹூண்டாய் எஸ்யூவி -யில் ஸ்டாண்டர்டாக 36 பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்படும் என்று கூறுகிறது.
19 ADAS அம்சங்கள்
மிட்லைஃப் அப்டேட் உடன், ஹூண்டாய் தனது சிறிய எஸ்யூவி -யை லெவல் 2 ADAS உடன் சென்சார்கள் மற்றும் புதிய வெர்னா போன்ற முன் கேமராவை யன்படுத்தி வழங்கும். அதன் ADAS அம்சங்களின் பட்டியல் விவரங்கள் முழுமையாக காட்டப்படவில்லை என்றாலும், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
போர்டில் உள்ள மற்ற அம்சங்கள்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா டூயல்-சோன் ஏசி, 8-வே பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், 360 டிகிரி கேமரா மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகியவற்றைப் பெறும் என்பதும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்யூவி -யானது பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றுடன் தொடர்ந்து வழங்கப்படும்.
தொடர்புடையது: 2024 ஹூண்டாய் கிரெட்டா: நீங்கள் காத்திருக்க வேண்டுமா அல்லது அதன் போட்டியாளர்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டுமா?
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள்:
விவரங்கள் |
1.5 லிட்டர் N.A. பெட்ரோல் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
115 PS |
160 PS |
116 PS |
டார்க் |
144 Nm |
253 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, CVT |
7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
புதிய கிரெட்டாவில் வெர்னா -வில் உள்ள 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட்டை கொடுக்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இந்த இன்ஜினில் 6-ஸ்பீடு MT ஆப்ஷன் கிடைக்காது. மீதமுள்ள இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே கொடுக்கப்படவுள்ளன.
புதிய கிரெட்டா வெளியீடு மற்றும் விலை
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா ஜனவரி 16 அன்று விற்பனைக்கு வரும்போது அதன் விலை ரூ.11 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்கலாம் என என எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகிய கார்களுடன் இது போட்டியிடும்.
மேலும் படிக்க: கிரெட்டா ஆட்டோமெட்டிக்