ஒரே மாதத்தில் 51,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்ற Hyundai Creta ஃபேஸ்லிஃப்ட்
published on பிப்ரவரி 06, 2024 07:59 pm by shreyash for ஹூண்டாய் கிரெட்டா
- 25 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் முற்றிலும் புதிய கேபின், கூடுதல் சக்திவாய்ந்த டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் முன்பை விட கூடுதல் வசதிகளுடன் வருகிறது.
-
ஜனவரி முதல் வாரத்தில் 2024 கிரெட்டா -விற்கான ஆர்டர் புத்தகங்களை ஹூண்டாய் திறந்தது, அதே நேரத்தில் அதன் இந்த காருக்கான விலை ஜனவரி 16 அன்று அறிவிக்கப்பட்டது.
-
2024 கிரெட்டா -வின் உள்ளேயும் வெளியேயும் விரிவான வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
இது இப்போது இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவரின் டிஸ்பிளேவுக்காக 10.25-இன்ச் இன்டெகிரேட்டட் டூயல் டிஸ்பிளே செட்டப்பை கொண்டுள்ளது.
-
கிரெட்டா இப்போது 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (160 PS / 253 Nm) ஆப்ஷனுடன் வருகிறது, இது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் (DCT) இணைக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா -வுக்கு ஜனவரி 2024 ஆண்டில் மிட்லைஃப் அப்டேட் கொடுக்கப்பட்டது, புதிய வடிவமைப்பு மற்றும் புதிய வசதிகளை பெறுகிறது. ஹூண்டாய் ஜனவரி முதல் வாரத்தில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டாவிற்கான ஆர்டர்களை ஏற்கத் தொடங்கியது, மேலும் ஒரு மாதத்தில், காம்பாக்ட் எஸ்யூவி 51,000 க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்றுள்ளது.
இதில் என்ன வசதிகள் உள்ளன?
2024 ஹூண்டாய் கிரெட்டா அம்சங்களின் அடிப்படையில் விரிவான அப்டேட்டை பெற்றுள்ளது. இது டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று டிரைவரின் டிஸ்ப்ளே), டூயல் ஜோன் ஏசி, 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 8-வே பவர்-அட்ஜஸ்ட்டபிள். டிரைவர் சீட், மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவை உள்ளன.
6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் டிபார்ச்சர் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க: பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ ஆண்டுதோறும் நடத்தப்படும் - ஆட்டோ எக்ஸ்போவில் மாற்றம் இருக்குமா ??
மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
ஹூண்டாய் 2024 கிரெட்டாவை மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் நான்கு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது. அவற்றின் விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ளன:
இன்ஜின் |
1.5 லிட்டர் NA பெட்ரோல் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
115 PS |
160 PS |
116 PS |
டார்க் |
144 Nm |
253 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-MT / CVT |
7-DCT |
6-MT / 6-AT |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் தற்போது டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுக்கு (DCT) மட்டுமே கொடுக்கப்படுகின்றது. இருப்பினும், ஹூண்டாய் கிரெட்டா N லைன் அறிமுகத்துடன், ஹூண்டாய் இதனுடன் டர்போ-பெட்ரோல் இன்ஜினுக்கு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை வழங்க வாய்ப்புள்ளது. N லைன் பதிப்பு பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
மேலும் பார்க்க: Hyundai Creta S(O) வேரியன்ட்டை விரிவாக 8 படங்களில் இங்கே பாருங்கள்
விலை & போட்டியாளர்கள்
2024 ஹூண்டாய் கிரெட்டாவின் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.20.15 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) உள்ளது. இது கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலிவேட் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
மேலும் படிக்க: கிரெட்டா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful