ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு கார் விற்பனை… Hyundai Creta -வின் விற்பனை லட்சம் யூனிட்களை தாண்டியது
published on பிப்ரவரி 20, 2024 05:41 pm by shreyash for ஹூண்டாய் கிரெட்டா
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் இந்தியாவின் மதிப்பீட்டின்படி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு கிரெட்டா கார் விற்பனையாகியுள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில்தான் காம்பாக்ட் எஸ்யூவி இடத்திற்கான போட்டி தொடங்கியது என்று கூறலாம். இதற்கு இரண்டு ஃபேஸ்லிஃப்ட்களுடன் ஒரு ஜெனரேஷன் அப்டேட்டும் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் கடைசி அப்டேட் ஜனவரி 2024 -ல் கொடுக்கப்பட்டது. இப்போது, பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்த விற்பனையில்10 லட்சம் யூனிட்கள் என்ற பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் கிரெட்டாவின் பயணத்தை சுருக்கமாக பார்ப்போம்.
இரண்டு ஃபேஸ்லிஃப்ட் & ஒரு ஜெனரேஷன் அப்டேட்
CarDekho India (@cardekhoindia) -ல் ஷேர் செய்யப்பட்ட பதிவு
2015 ஆம் ஆண்டில், ஹூண்டாய் கிரெட்டா ரெனால்ட் டஸ்டர் மற்றும் நிஸான் டெரானோ போன்ற எஸ்யூவி -களுக்கு நேரடி போட்டியாக உருவெடுத்தது. அந்த நேரத்தில், கிரெட்டாவின் வடிவமைப்பு என்பது நிதானமாகவும் சிறியதாகவும் இருந்தது. பின்னர், 2018 ஆம் ஆண்டில், முதல் தலைமுறை கிரெட்டா ஒரு ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்றது. அப்போது இது கேஸ்கேடிங் கிரில் வடிவமைப்பு மற்றும் சன்ரூஃப் உட்பட பல்வேறு புதிய அம்சங்களுடன் அப்டேட்டட் முன்பக்கத்தை பெற்றது.
2020 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கான இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டது, இது எதிர்கால வடிவமைப்பை கொண்டிருந்தது மற்றும் நவீனமான எல்இடி லைட்களும் கொடுக்கப்பட்டிருந்தன. இது ஒரு போலரைஸிங் வடிவமைப்பை கொண்டிருந்தாலும், பனோரமிக் சன்ரூஃப், 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் மற்றும் பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை போன்ற தனித்துவமான அம்சங்களுடன், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் எஸ்யூவி -க்களில் ஒன்றாக இது இருந்தது. ஜனவரி 2024 -ல், ஹூண்டாய் இரண்டாம் ஜெனரேஷன் அப்டேட் உடன் கிரெட்டாவுக்கு புதிய தோற்றம், புதிய கேபின் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு கிரெட்டாவை விற்பனை செய்துள்ளது
ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டாவின் விற்பனை தற்போது 10 லட்சம் யூனிட்களை தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் ஹூண்டாய் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் சராசரியாக ஒரு கிரெட்டாவை இந்தியாவில் விற்பனை செய்தது என்ற ஒரு சுவாரஸ்யமான உண்மையையும் வெளிப்படுத்தியது. 2024 கிரெட்டா ஜனவரி 2024 -ல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஏற்கனவே 60,000 முன்பதிவுகளைத் கடந்துள்ளது.
மேலும் பார்க்க: பாருங்கள்: Tata Punch EV -யின் சார்ஜிங் போர்ட்டை சரியாக மூடுவது எப்படி ?
இது என்ன வசதிகளை வழங்குகிறது?
2024 ஹூண்டாய் கிரெட்டா டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்), டூயல்-ஜோன் ஏசி, 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், 8-வே பவர்-அட்ஜஸ்ட்டபிள் ஓட்டுனர் இருக்கை மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற அம்சங்களுடன் வருகிறது.
6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பயணிகளின் பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க: Tata Nexon குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள் ஒப்பீடு: முந்தையது மற்றும் புதியது
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
ஹூண்டாய் கிரெட்டாவை 3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது, மேலும் அவற்றின் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:
இன்ஜின் |
1.5 லிட்டர் N.A. பெட்ரோல் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
115 PS |
160 PS |
116 PS |
டார்க் |
144 Nm |
253 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT / CVT |
7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT |
டர்போ-பெட்ரோல் ஆப்ஷன் தற்போது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டாலும், கிரெட்டா N லைன் அறிமுகத்துடன் டர்போ-பெட்ரோலுடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை ஹூண்டாய் அறிமுகப்படுத்தலாம்.
விலை வரம்பு & போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டாவின் விலை ரூ.11 லட்சம் முதல் ரூ.20.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது. இது கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஹோண்டா எலிவேட், மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ்.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful