அறிமுகமானது Hyundai Alcazar ஃபேஸ்லிஃப்ட் கார்
published on செப் 09, 2024 05:21 pm by dipan for ஹூண்டாய் அழகேசர்
- 50 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டால் அல்கஸார் முன்பை விட சிறப்பான தோற்றத்தையும் 2024 கிரெட்டாவை போன்ற இன்ட்டீரியரையும் பெற்றுள்ளது.
-
டர்போ-பெட்ரோல் வேரியன்ட்களின் விலை ரூ.14.99 லட்சத்தில் தொடங்குகிறது. டீசல் வேரியன்ட்களின் விலை ரூ.15.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).
-
ஃபேஸ்லிஃப்ட் அல்கஸார் புதிய கிரில் மற்றும் ஹெட்லைட் செட்டப் ஆகியவை உள்ளன. இவற்றின் வடிவமைப்பு கிரெட்டாவை போலவே உள்ளது.
-
கேபினில் கிரெட்டா போன்ற டேஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது. டார்க் புளூ மற்றும் பிரெளவுன் கலர் தீம் மற்றும் டூயல் ஸ்கிரீன் செட்டப் உள்ளது.
-
6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் ஆப்ஷன்களில் இது கிடைக்கும்.
-
எக்ஸிகியூட்டிவ், பிரெஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் என நான்கு முக்கிய வேரியன்ட்களில் கிடைக்கிறது:
-
டூயல்-சோன் ஏசி, பனோரமிக் சன்ரூஃப், 6 ஏர்பேக்குகள் மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை உள்ளன.
-
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன.
இந்தியாவில் சமீபத்தில் ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தற்போது ரூ.14.99 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டீசல் வேரியன்ட்களின் விலை ரூ. 15.99 லட்சத்தில் தொடங்குகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). 3-வரிசை ஹூண்டாய் எஸ்யூவி இப்போது அப்டேட்ட செய்யப்பட்ட பின்னர் ஹூண்டாய் கிரெட்டா -வுக்கு நெருக்கமாக வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதே போன்ற கிரில் மற்றும் ஹெட்லைட் செட்டப் உட்பட ஆகியவை ஒரே போல உள்ளன. இந்த புதிய தோற்றத்திற்கு ஏற்றவாறு டெயில்லைட்கள் மற்றும் அலாய் வீல்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக டேஷ்போர்டு வடிவமைப்பு கிரெட்டாவிலிருந்து உத்வேகத்தை பெறுகிறது. 2024 ஹூண்டாய் அல்கஸார் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
வெளிப்புறம்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹூண்டாய் அல்கஸார் ஒரு பெரிய வடிவமைப்பு மாற்றத்தைப் பெற்றுள்ளது. புதிய தோற்றம் அப்டேட்டட் ஹூண்டாய் கிரெட்டாவுடன் நெருக்கமாக உள்ளது. மேலும் எக்ஸ்டர் காரிலும் இருந்தும் சில விஷயங்கள் பெறப்பட்டுள்ளன.
கனெக்டட் LED DRL செட்டப் முன்புறத்தில் உள்ளது (ஹூண்டாய் கிரெட்டா போன்றது) H-வடிவ லைட்டிங் எலமென்ட்களுடன் (ஹூண்டாய் எக்ஸ்டர் போன்றவை) . கிரெட்டாவை போலவே 3 ஸ்லேட் கிரில் டிஸைன் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய டூயல்-பேரல் LED ஹெட்லைட்கள் கிரில்லுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளன. இது முந்தைய அல்காஸரை போலல்லாமல் ஸ்கொயர்-ஆஃப் டிஸைன் கொடுக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் -களுக்கான ரேடார் சென்சார் (ADAS) பம்பரில் கொடுக்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டு தோற்றம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக உள்ளது. புதிய அல்காஸர் இப்போது டூயல்-டோன் 18-இன்ச் அலாய் வீல்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. பக்கவாட்டுப் படியும் இப்போது நீக்கம் செய்யப்பட்டு அதற்குப் பதிலாக ஸ்கிட் பிளேட் போடப்பட்டுள்ளது. அதே சமயம் ரூஃப் ரெயில்கல் இப்போது சில்வர் ஃபினிஷிங்கில் உள்ளன.
பின்புறத்தில் அல்கஸார் ஆனது கனெக்டட் LED டெயில் லேம்ப் செட்டப் வெர்டிகலாக அடுக்கப்பட்ட யூனிட்களுடன் 'H' வடிவத்தை கொண்டுள்ளது. பம்பர் ஒரு செவ்வக வடிவத்தில் உள்ளது. மற்றும் சில்வர் சரவுண்ட் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டெயில் லைட்களில் பிளாஸ்டிக் டிரிமின் அடியில் ‘அல்கஸார்’ பேட்ஜ் வைக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யூவி -யிலும் டூயல் டிப் எக்சாஸ்ட் அப்படியே உள்ளது.
மேலும் பார்க்க: 2024 ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா: படங்களில் வடிவமைப்பு ஒப்பீடு
இன்ட்டீரியர்
அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட்டின் டேஷ்போர்டு புதுப்பிக்கப்பட்ட கிரெட்டாவுடன் பொருந்துகிறது. இதில் நேர்த்தியான ஏசி வென்ட்கள் மற்றும் ஒரு புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனல் கொடுக்கப்பட்டுள்ளது. இது டூயல் ஸ்கிரீன்களுடன் உள்ளன. ஆனால் அவை இப்போது ஒரு ஒருங்கிணைந்த யூனிட்டுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. அதன் கேபின் இப்போது கிளாஸி பிளாக் கிளைமேட் கன்ட்ரோல் பேனலை கொண்டுள்ளது, ஆனால் புளூ கலர் மற்றும் பிரெளவுன் இன்ட்ரீரியர் கலர் ஸ்கீமில் வருகிறது.
அல்கஸார் 6 இருக்கைகள் அல்லது 7 இருக்கைகள் கொண்டதாக கிடைக்கிறது. 6 இருக்கைகள் கொண்ட பதிப்பில், இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் உள்ளன, அதே நேரத்தில் 7 இருக்கைகள் கொண்ட பெஞ்ச் இருக்கைகள் உள்ளன. அனைத்து இருக்கைகளும் நேவி ப்ளூ மற்றும் பிரவுன் லெதரெட்டால் கவர் செய்யப்பட்டுள்ளன. முன் இருக்கைகள் இரண்டும் (மற்றும் 6 இருக்கைகளில் உள்ள கேப்டன் இருக்கைகள்) வென்டிலேஷன் ஃபங்ஷனையும் கொண்டுள்ளன. கூடுதலாக இரண்டாவது வரிசையில் முன் பயணிகள் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்து கொள்வதற்காக எலக்ட்ரிக் பாஸ் மோடு உள்ளது (6-சீட் பதிப்பில் மட்டுமே கிடைக்கும்).
மேலும் படிக்க: ஹூண்டாய் அல்கஸார் பழையது மற்றும் புதியது : இன்ட்டீரியர் வடிவமைப்பு ஒப்பீடு
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
அல்கஸாரில் டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள் உள்ளன (ஒவ்வொன்றும் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே). புதிய சேர்த்தல்களில் டூயல் ஜோன் ஏசி, முன் இருக்கைகள் இரண்டிற்கும் 8-வே பவர்-அட்ஜஸ்ட்டபிள் சீட்கள், ஓட்டுநர் இருக்கைக்கு 2-லெவல் மெமரி செட்டப் மற்றும் இரண்டாவது வரிசையில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இது முன்பக்க பயணிகளுக்கு ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜரையும் வைத்திருக்கிறது. இரண்டாவது வரிசையில் ஃபோல்டபிள் லேப்டாப் டிரே உள்ளது.
பாதுகாப்பிற்காக அல்கஸார் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமராவுடன் வருகிறது. அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் உள்ளிட்ட லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களையும் (ADAS) கொண்டுள்ளது.
பவர்டிரெய்ன்
2024 ஹூண்டாய் அல்கஸார் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
160 PS |
116 PS |
டார்க் |
253 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன்* |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
-
DCT = டூயல் கிளட்ச் ஆட்டொமெட்டிக் டிரான்ஸ்மிஷன்; AT = டார்க் கன்வெர்டர் ஆட்டொமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
ஃபேஸ்லிஃப்ட்டுடன் 2024 ஹூண்டாய் அல்கஸார் இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் முன் மாடலில் இருந்து அவற்றின் செயல்திறன் வெளியீடுகள் இரண்டையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிப்ட் வேரியன்ட் வாரியான பவர்டிரெயின் ஆப்ஷன்கள் விளக்கப்பட்டுள்ளன
போட்டியாளர்கள்
அல்கஸார் ஆனது எம்ஜி ஹெக்டர் பிளஸ், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா XUV700 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: அல்கஸார் ஆட்டொமெட்டிக்