• English
  • Login / Register

எலிவேட் எஸ்யூவி க்கான அறிமுக தேதியை அறிவித்த ஹோண்டா, ஆனால் பனோரோமிக் சன்ரூஃப் உடன் எலிவேட் கிடைக்காது

ஹோண்டா எலிவேட் க்காக மே 16, 2023 05:10 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 26 Views
  • ஒரு கருத்தை எழுதுக

எஸ்யூவி யின் தோற்றத்தை மேலே இருந்து காட்டும் புதிய டீஸருடன் செய்திகள் வெளிவருகின்றன.

Honda Elevate teaser image

  • ஹோண்டா எலிவேட் ஜூன் மாதம் 6 ஆம் தேதி அதன் உலகளாவிய அறிமுகத்துக்கு தயாராகிறது.

  • சில ஹோண்டா டீலர்ஷிப்களில் எஸ்யூவிக்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

  • எலிவேட் எஸ்யூவி ஆனது பனோரமிக்  சன்ரூப்பை பெறவில்லை, ஆனால் சிங்கிள்-பேன் யூனிட்டைப் பெறும்.

  • டீசரில் காணப்படும் மற்ற விவரங்களில் ரூஃப் ரயில் மற்றும் வெள்ளை நிற பாடி ஷேடு  ஆகியவை அடங்கும்.

  • ஹோண்டா  அதை ADAS மற்றும் சிட்டி காரை விட பெரிய டச் ஸ்கிரீன் உடன் இதை  வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • சிட்டியின் 1.5லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் சிட்டி ஹைபிரிடின் 1.5லிட்டர் வலுவான ஹைப்ரிட் பவர்டிரெயினையும் பெற்றுள்ளது.

  • ஆகஸ்ட் மாதத்தில்  விரைவில் ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பபடுகிறது .

சமீபத்தில் தனது காம்பாக்ட் எஸ்யூவிக்கு “எலிவேட்” என்று பெயர் சூட்டிய பிறகு, ஹோண்டா இப்போது அதன் புதிய எஸ்யூவி யின் மூடியிருக்கும் கவரை  ஜூன் 6 ஆம் தேதி வெளியே எடுக்கும்  என்பதை வெளிப்படுத்தும் டீஸரைப் பகிர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல ஹோண்டா டீலர்ஷிப்களில் இதற்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

டீசரில் புதிய விவரங்கள் வெளியாகியுள்ளன

எலிவேட் எஸ்யூவியின் ஹோண்டாவின் சமீபத்திய டீசர் படம் வெள்ளை நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள மேல் புறத்திலிருந்து கீழ்புறம் நோக்கிய  காட்சியை நமக்கு வழங்குகிறது. இருப்பினும், எல்லாவற்றிலும் மிக முக்கியமான விவரம் என்னவென்றால், இது  பனோரமிக்  சன்ரூஃப்-ஐ பெற்றிருக்கவில்லை, ஆனால் சிங்கிள்-பேன் யூனிட்டை பெறுகிறது. டீஸர் LED DRLகள் மற்றும் LED டெயில்லைட்கள் மற்றும் ரூஃப் ரெயில் பற்றிய சுருக்கமான தோற்றத்தையும் வழங்குகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி கிரான்ட் விட்டாரா போன்ற போட்டியாளர்கள் பனோரமிக் சன்ரூஃப் வழங்கும் நேரத்தில் , அதைக் கொண்டிருக்காததால் எலிவேட் சற்று  பின் தங்கி இருக்கலாம்.  அடுத்து வெளிவர இருக்கும் ஃபேஸ்லிப்டட் கியா செல்டோஸ் கூட இதை வழங்குகிறது .

எதிர்பார்க்கப்படும் பிற அம்சங்கள்

சன்ரூஃப் தவிர, சிட்டியின் 8 இன்ச் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் ஃபிரன்ட் சீட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் ஆகியவற்றை விட எலிவேட் பெரிய டச்ஸ்கிரீன் யூனிட்டுடன் வரும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஹோண்டா அதிகபட்சம் ஆறு ஏர்பேக்குகள், டிராக்ஷன் கட்டுப்பாடு, 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங்  ஆகியவற்றை உள்ளடக்கிய அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களுடன் (ADAS) எலிவேட் வரும்.

மேலும் படிக்கவும்: IPL நட்சத்திரம் ருதுராஜ் கெய்க்வாட், டாடா டியாகோ EV இன் முதல் அபிப்ராயத்தைப் பகிர்ந்துள்ளார்

ஹூட்டின் கீழ் என்ன இருக்கிறது

Honda City Hybrid's strong-hybrid powertrain

ஹோண்டா எலிவேட்  எஸ்யூவியில் சிட்டியின் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (121 PS மற்றும் 145 Nm) மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆப்ஷன்களை  வழங்க வாய்ப்புள்ளது. ஹோண்டா, சிட்டி ஹைப்ரிட்டின் 126PS ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் அதனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில புதிய காம்பாக்ட் எஸ்யூவிகளைப் போலவே, எலிவேட்டும் டீசல் இன்ஜினை பெறவில்லை.

இதன் போட்டியாளர் யார் என பார்க்கலாம்

Honda Elevate moniker

டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர், எம்ஜி ஆஸ்டர், ஹூண்டாய் கிரெட்டா மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் வரவிருக்கும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் போன்ற பல கார்களுடன் ஹோண்டாவின் எஸ்யூவி போட்டியிடும். அது 2023 ஆகஸ்ட் மாதத்தில் விற்பனைக்கு வரும்  மற்றும் ரூ. 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)  ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

was this article helpful ?

Write your Comment on Honda எலிவேட்

1 கருத்தை
1
M
mahantesh shigli
May 26, 2023, 1:40:34 PM

Highly anxious

Read More...
    பதில்
    Write a Reply

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience