சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

சிஎஸ்டி அவுட்லெட்களில் விற்பனைக்கு வரும் Honda Elevate, பாதுகாப்பு படை வீரர்களுக்கு விலை குறைவாக கிடைக்கும்

published on மார்ச் 01, 2024 06:25 pm by rohit for ஹோண்டா எலிவேட்

சிட்டி மற்றும் அமேஸ் போன்ற செடான்களுடன் சிஎஸ்டி அவுட்லெட்டுகள் வழியாக விற்கப்படும் ஹோண்டாவின் மூன்றாவது காராக எலிவேட் இருக்கும்.

  • ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக ஹோண்டா எலிவேட் கார் இருக்கிறது.

  • சிட்டி செடானின் 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் MT மற்றும் CVT ஆகிய இரண்டு ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

  • 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், 6 ஏர்பேக்குகள் மற்றும் ADAS ஆகிய வசதிகள் உள்ளன.

  • ஸ்டாண்டர்ட் எலிவேட் காரின் விலை ரூ.11.58 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கின்றது.

ஹோண்டா எலிவேட்காரை இப்போது இந்திய பாதுகாப்பு வீரர்கள் கேண்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மெண்ட் (CSD) வழியாக வாங்க முடியும். சிஎஸ்டி -யில் விற்பனைக்கு செய்யப்படும் எலிவேட்டின் சரியான விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு இந்த கார் சிறப்பு விலையில் கிடைக்கும். ஹோண்டா ஏற்கனவே சிட்டி செடான் மற்றும் அமேஸ் சப்-4எம் செடான்களை சிஎஸ்டி அவுட்லெட்டுகள் வழியாக வழங்குகிறது.

எலிவேட் -டில் உள்ள வசதிகளை பற்றி விரைவாகப் பார்ப்போம்:

எலிவேட் காரின் இன்ஜின் விவரங்கள்

ஹோண்டா எலிவேட், ஹோண்டா சிட்டியின் 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் (121 PS/ 145 Nm) கிடைக்கிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT ஆகிய இரண்டு ஆப்ஷன்களையும் பெறுகிறது. காரில் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் இல்லை. ஆனால் எலிவேட் 2026 ஆம் ஆண்டுக்குள் EV வெர்ஷனை பெறவுள்ளது.

தொடர்புடையது: Honda Elevate SUV வேரியன்ட்கள் விளக்கப்பட்டுள்ளன: நீங்கள் எதை வாங்க வேண்டும்?

காரில் உள்ள வசதிகள்

சன்ரூஃப், 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜிங், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் 7 இன்ச் செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவற்றை ஹோண்டா எலிவேட்டில் கொடுத்துள்ளது. பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் இருக்கைகள் போன்ற இந்த பிரிவில் உள்ள மற்ற போட்டி கார்களில் வழங்கப்படும் சில முக்கியமான வசதிகளை இது பெறவில்லை. ஆனால் எலிவேட்டின் தேவையான அடிப்படை வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

காம்பாக்ட் எஸ்யூவியின் பாதுகாப்பு -க்காக 6 ஏர்பேக்குகள், லேன் வாட்ச் கேமரா (இடதுபுற ORVM -ன் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை அடங்கும்.

வேரியன்ட்கள், விலை மற்றும் போட்டியாளர்கள்

ஹோண்டா எலிவேட் நான்கு வேரியன்ட்களில் கிடைக்கிறது: SV, V, VX மற்றும் ZX. இதன் வழக்கமான விலை ரூ 11.58 லட்சம் முதல் ரூ 16.20 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை உள்ளது. இது மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ்.

மேலும் படிக்க: எலிவேட் ஆன் ரோடு விலை

r
வெளியிட்டவர்

rohit

  • 68 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஹோண்டா எலிவேட்

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை