Honda Elevate CVT மற்றும் Maruti Grand Vitara AT: ரியல்-வேர்ல்டு மைலேஜ் ஒப்பீடு
published on மார்ச் 19, 2024 01:09 pm by shreyash for மாருதி கிராண்டு விட்டாரா
- 26 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டும் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட்ட் பெட்ரோல் இன்ஜினுடன் வருகின்றன. ஆனால் கிராண்ட் விட்டாரா மைல்டு-ஹைபிரிட் டெக்னாலஜியையும் கொண்டுள்ளது.
2023 -ல் புதிய தயாரிப்பாக ஹோண்டா அறிமுகப்படுத்திய காம்பாக்ட் எஸ்யூவி -யான ஹோண்டா எலிவேட் ஆனது நேரடியாக மாருதி கிராண்ட் விட்டாரா உடன் போட்டியிடுகிறது. இரண்டு கார்களிலுமே 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. மேலும் இந்த காம்பாக்ட் எஸ்யூவி -களின் ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களை உண்மையில் சாலையில் ஓட்டும் போது எவ்வளவு மைலேஜ் கிடைக்கின்றது என்பதை நாங்கள் சோதித்து பார்த்துள்ளோம்.
மைலேஜ் சோதனை முடிவுகளின் விவரங்களை பெறுவதற்கு முன் நாங்கள் சோதித்த காம்பாக்ட் எஸ்யூவி வேரியன்ட்களின் பவர்டிரெய்ன் விவரங்களை பார்ப்போம்.
விவரங்கள் |
ஹோண்டா எலிவேட் |
மாருதி கிராண்ட் விட்டாரா |
இன்ஜின் |
1.5-லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
1.5-லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் (மைல்டு ஹைபிரிட்) |
பவர் |
121 PS |
103 PS |
டார்க் |
145 Nm |
137 Nm |
டிரான்ஸ்மிஷன் |
CVT |
6-ஸ்பீடு AT |
கிளைம்டு மைலேஜ் |
16.92 கிமீ/லி |
20.58 கிமீ/லி |
சோதிக்கப்பட்ட போது கிடைத்த மைலேஜ் (நகரம்) |
12.60 கிமீ/லி |
13.72 கி.மீ |
சோதிக்கப்பட்ட போது கிடைத்த மைலேஜ் (நெடுஞ்சாலை) |
16.40 கி.மீ |
19.05 கி.மீ |
மாருதி கிராண்ட் விட்டாராவை விட ஹோண்டா எலிவேட்டின் இன்ஜினின் அவுட்புட் 18 Ps மற்றும் 8 Nm அதிகமாகும். எப்படியிருந்தாலும் கிராண்ட் விட்டாரா அதன் மைல்டு ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் வருவதால் இதன் மைலேஜ் அதிகமாக கிடைப்பது எங்களது சோதனைகளில் தெரிய வந்துள்ளது. நகர்ப்புற சாலைகளில் இந்த இரண்டு கார்களுக்கு இடையேயான மைலேஜில் உள்ள வித்தியாசம் 1 கிமீ/லி மட்டும்தான். ஆனால் நெடுஞ்சாலையில் சோதனை செய்த போது ஹோண்டா எலிவேட்டை விட கிராண்ட் விட்டாரா கிட்டத்தட்ட 3 கிமீ/லி அதிக மைலேஜை கொடுத்தது.
ஆனால் எலிவேட் மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய இரண்டும் நெடுஞ்சாலை ஓட்டுநர் நிலைகளில் கூட அவற்றின் கிளைம்டு மைலேஜ் விவரங்களை விட குறைவாகவே உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் பார்க்க: Honda Elevate CVT vs Honda City CVT: ரியல்-வேர்ல்டு செயல்திறன் ஒப்பீடு
மைலேஜ் |
நகரம்:நெடுஞ்சாலை (50:50) |
நகரம்:நெடுஞ்சாலை (25:75) |
நகரம்:நெடுஞ்சாலை (75:25) |
ஹோண்டா எலிவேட் CVT |
14.25 கி.மீ |
15.25 கி.மீ |
13.37 கி.மீ |
மாருதி கிராண்ட் விட்டாரா AT |
15.95 கி.மீ |
17.36 கி.மீ |
14.75 கி.மீ |
மாருதி கிராண்ட் விட்டாரா மூன்று டிரைவிங் நிலைகளிலும் ஹோண்டா எலிவேட்டை விட தெளிவான வெற்றியாளர் என்பது தெரிய வருகின்றது. நீங்கள் வாகனம் ஓட்டுவது பெரும்பாலும் நகரப் பயணத்தை உள்ளடக்கியதாக இருந்தால் இரண்டு கார்களின் மைலேஜ் திறனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 1 கிமீ/லி ஆக உள்ளது. இருப்பினும் நெடுஞ்சாலையில் ஓட்டும் போது இந்த வித்தியாசம் 2 கிமீ/லிக்கு வரை உள்ளது. கலவையான டிரைவிங் நிலைமைகளில் கூட மாருதி ஹோண்டாவை விட 2 கிமீ லிட்டருக்கும் குறைவாகவே கிடைக்கின்றது.
பொறுப்புத் துறப்பு: டிரைவிங், நடைமுறையில் உள்ள சாலை நிலை மற்றும் காரின் ஒட்டுமொத்த நிலை ஆகியவற்றைப் பொறுத்து காரின் மைலேஜ் திறன் மாறுபடலாம்.
முக்கிய விவரங்கள்
கிராண்ட் விட்டாரா எலிவேட்டை விட சிக்கனமானது என்பதைக் கண்டுபிடிப்பதில் ஆச்சரியமில்லை என்றாலும் அவற்றின் செயல்திறனில் உண்மையான இடைவெளி பெரிதாக இல்லை. உங்கள் முன்னுரிமை மைலேஜ் என்றால் கிராண்ட் விட்டாரா ஏற்றதாக இருக்கும். இருப்பினும் மைலேஜை விட ஃபிரீ-ரெவ் இன்ஜினில் இருந்து அதிக சக்தியை நீங்கள் விரும்பினால் நீங்கள் எலிவேட்டை தேர்வுசெய்யலாம். கூடுதலாக நீங்கள் இன்னும் அதிக மைலேஜ் சிக்கனத்தை விரும்பினால் மாருதி காம்பாக்ட் எஸ்யூவி -யின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியன்ட்டை கூட நீங்கள் பரிசீலிக்கலாம்.
விலை
ஹோண்டா எலிவேட் |
மாருதி கிராண்ட் விட்டாரா |
|
அனைத்து வேரியன்ட்களும் |
ரூ.11.58 முதல் ரூ.16.20 லட்சம் |
ரூ.10.80 லட்சம் முதல் ரூ.20.09 லட்சம் |
பெட்ரோல்-ஆட்டோ வேரியன்ட்கள் |
ரூ.13.48 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் |
ரூ.13.60 லட்சம் முதல் ரூ.16.91 லட்சம் |
எலிவேட் CVT ஆனது கிராண்ட் விட்டாரா AT (ஆட்டோமெட்டிக்) விட சற்று விலை குறைவானது. இந்த இரண்டு காம்பாக்ட் எஸ்யூவி -களும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றன.
மேலும் படிக்க: மாருதி கிராண்ட் விட்டாரா ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful