ஃபோர்ஸ் கூர்கா 5- டோர் (மீண்டும்) சோதனையின் போது தென்பட்டுள்ளது
published on பிப்ரவரி 27, 2024 06:57 pm by ansh for ஃபோர்ஸ் குர் கா 5 டோர்
- 25 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த மேம்படுத்தப்பட்ட ஆஃப்-ரோடரின் வெர்ஷன் சில காலமாகவே உருவாக்கத்தில் உள்ளது. இது இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஃபோர்ஸ் கூர்காவின் 5-டோர் வேரியன்ட் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உருவாக்கத்தில் உள்ளது.
-
இது 3 வரிசை அமைப்பைக் கொண்டிருக்கும், இரண்டாவது வரிசையில் பெஞ்ச் சீட்கள் மற்றும் மூன்றாவது வரிசையில் கேப்டன் சீட்கள் இருக்கும்.
-
3-டோர் வெர்ஷனில் காணப்படும் அதே 2.6-லிட்டர் டீசல் இன்ஜினுடன் அதிகமான ட்யூனிங்குடன் மேம்படுத்த ஃபோர்ஸ் திட்டமிட்டுள்ளது.
-
விலை ரூ. 16 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு ஆஃப்-ரோடர் ஆகும். இது சோதனை செய்யப்படும் போது போது அடிக்கடி பார்க்க முடிகிறது. அதன் சமீபத்திய ஸ்பை ஷாட்டில், அதன் எக்ஸ்ட்டீரியர் முழுமையாக மறைக்கப்பட்டிருந்தாலும் அதன் பக்கவாட்டு மற்றும் பின்பக்கத்தின் விரிவான தோற்றத்தை பார்க்க முடிந்தது. இந்த பெரிய ஆஃப்-ரோடரில் அப்படி என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை பார்ப்போம்.
எதைப் பார்க்க முடிகின்றது
5-டோர் கூர்காவின் பெரிய அளவு அதன் பக்கவாட்டில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. கூடுதலாக தனித்துவமான அலாய் வீல்கள் 3-டோர் வெர்ஷனில் இருந்து சற்று வித்தியாசமானது. எளிதாக கேபின் அணுகலுக்கான பக்கவாட்டு படிகள், பெட்டி போன்ற செவ்வக ஜன்னல்கள் மற்றும் உங்கள் லக்கேஜ்களை வைக்க உதவும் ரூஃப் ரேக் போன்றவை இந்த வாகனத்தின் சிறப்பம்சங்கள்.
5-டோர் கூர்காவின் பின்பக்க பகுதி தெளிவாக காணப்பட்டது, அதில் டெயில்கேட்டில் பொருத்தப்பட்டுள்ள அலாய் வீல், லக்கேஜ்களை அணுகுவதற்கும், வைப்பதற்கான ஒரு ஏணி மற்றும் 3-டோர் வெர்ஷனில் காணப்படும் அதே டெயில்லைட்கள் போன்ற அம்சங்கள் காணப்பட்டது. இதன் அம்சங்கள் அனைத்தும் 3-டோர் வெர்ஷனில் இருப்பதை போலவே உள்ளது.
கேபின் மற்றும் வசதிகள்
சில காலத்திற்கு முன்பு, 5-டோர் கூர்காவின் கேபின், டார் கிரே நிறத்திலும் மற்றும் அதன் இருக்கைகள் ஆல் பிளாக் நிறத்திலும் இருந்தது ஸ்பை ஷாட்கள் மூலம் தெரிய வந்தது. எஸ்யூவி -யின் இந்த மாடல் மூன்று வரிசை அமைப்புடன் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இரண்டாவது வரிசையில் பெஞ்ச் சீட்கள் மற்றும் மூன்றாவது வரிசையில் கேப்டன் சீட்கள் உள்ளன. 3-டோர் வெர்ஷனுடன் ஒப்பிடும்போது மற்றொரு குறிப்பிடத்தக்க வித்தியாசம் 4WD செலெக்டர் ஆகும், இது 5-டோர் வெர்ஷனில் எலக்ட்ரானிக் ஆக இருக்கும்.
மேலும் பார்க்க: சோதனை செய்யப்படும் போது சேற்றில் சிக்கிய 5-டோர் மஹிந்திரா தார்
அம்சங்களைப் பொறுத்தவரை, 5-டோர் கூர்காவில் 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃப்ரன்ட் மற்றும் ரியர் பவர் விண்டோஸ், ரியர் ஏசி வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏர் கண்டிஷனிங், டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், ABS EBD உடன் EBD, ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர்வியூ கேமரா ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பவர்டிரெய்ன் விவரங்கள்
ஃபோர்ஸ் 5-டோர் கூர்க்காவை அதன் தற்போதைய 3-டோர் மாடலின் அதே இன்ஜினுடன் வழங்கும்: 2.6-லிட்டர் டீசல் இன்ஜின் (90 PS/250 Nm), இது பிரத்தியேகமாக 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 5-டோர் வெர்ஷனில் , இதன் இன்ஜின் அதிக ட்யூனிங் செய்யப்பட்டு வரக்கூடும். கூடுதலாக, 5-டோர் கூர்காவில் 4-வீல்-டிரைவ் செட்-அப்பும் பொருத்தப்பட்டிருக்கும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
5-டோர் ஃபோர்ஸ் கூர்காவின் வருகையை நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தோம், ஆனால் இப்போது வரை, எஸ்யூவி -க்கான அதிகாரப்பூர்வ அறிமுக தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதன் அறிமுகம் இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். இதன் தொடக்க விலை ரூ. 16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என எதிர்பார்க்கப்படுகிறது. இது அறிமுகம் செய்யப்பட்டதும், இது 5-டோர் மஹிந்திரா தார்க்கு ஒரு போட்டியாகவும் மற்றும் மாருதி ஜிம்னிக்கு ஒரு பெரிய மாற்றாகவும் செயல்படும்.
மேலும் படிக்க: கூர்க்கா டீசல்
0 out of 0 found this helpful