சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள ஃபேஸ்லிப்டட் Nissan Magnite

நிசான் மக்னிதே க்காக நவ 19, 2024 08:38 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மேக்னைட் இடது பக்க டிரைவிங் சந்தைகள் உட்பட 65 க்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளுக்கு மேலும் ஏற்றுமதி செய்யப்படும்.

  • தென்னாப்பிரிக்க-ஸ்பெக் மேக்னைட்டின் விலை தோராயமாக R 2,46,200 முதல் R 3,23,900 வரை இருக்கலாம். (ரூ. 11.59 லட்சம் முதல் ரூ. 15.21 லட்சம் வரை. தென்னாப்பிரிக்க ராண்டில் இருந்து இந்திய ரூபாய்க்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது).

  • விசியா, அசென்டா மற்றும் அசென்டா பிளஸ் என மூன்று வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கிறது.

  • அலாய் வீல் டிசைன், இன்டீரியர் தீம் மற்றும் சீட் அப்ஹோல்ஸ்டரி உள்ளிட்ட வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பு ஒரே மாதிரியாக உள்ளது.

  • 8-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகிய வசதிகள் உள்ளன.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை அடங்கும்.

  • இன்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.

  • இதுவரை உலகளவில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மேக்னைட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் நிஸான் மேக்னைட் காருக்கு ஒரு ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் உள்ளேயும் வெளியேயும் வடிவமைப்பு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தியாவில் இருந்து இந்த ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலின் ஏற்றுமதி தொடங்கியுள்ளது. இந்த சப்-4எம் எஸ்யூவி -யின் 2,700 -க்கும் மேற்பட்ட யூனிட்கள் தென்னாப்பிரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. புதிய மேக்னைட் இடது பக்க டிரைவிங் பகுதிகள் உட்பட 65 -க்கும் மேற்பட்ட சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் நிஸான் கூறியுள்ளது. தென்னாப்பிரிக்க ஸ்பெக் மேக்னைட்டை பற்றி இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்:

விலை

தென்னாப்பிரிக்கா-ஸ்பெக் நிஸான் மேக்னைட்

(தென் ஆப்பிரிக்க ராண்டில் இருந்து தோராயமாக இந்திய ரூபாய் மதிப்புக்கு மாற்றம் செய்யப்பட்டது)

இந்தியா-ஸ்பெக் நிஸான் மேக்னைட்

R 2,46,200 முதல் R 3,23,900 வரை

(இந்திய மதிப்பில் ரூ. 11.59 லட்சத்திலிருந்து ரூ. 15.21 லட்சம்)

ரூ 5.99 லட்சம் முதல் ரூ 11.50 லட்சம் வரை (அறிமுகம்)

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை

இரண்டு சந்தைகளிலும் வழங்கப்படும் நிஸான் மேக்னைட்டின் ஆரம்ப விலை -களுக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும் தென்னாப்பிரிக்கா-ஸ்பெக் மேக்னைட் விசியா, அசென்டா மற்றும் அசென்டா பிளஸ் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. ஆனால் இந்தியா-ஸ்பெக் மாடல் விசியா, விசியா பிளஸ், அசென்டா, N-கனெக்டா, டெக்னா மற்றும் டெக்னா பிளஸ் என்ற 6 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இருப்பினும் 2 மாடல்களின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களின் விலையில் ரூ. 3.5 லட்சத்திற்கும் அதிகமாக வித்தியாசத்தில் உள்ளது.

தென்னாப்பிரிக்கா-ஸ்பெக் நிஸான் மேக்னைட்: ஒரு கண்ணோட்டம்

தென்னாப்பிரிக்காவில் கிடைக்கும் நிஸான் மேக்னைட் இந்தியா-ஸ்பெக் மாடலுக்கு வெளியேயும் உள்ளேயும் ஒரே மாதிரியாக உள்ளது. இது ஆல்-எல்இடி லைட்டிங் செட்டப், பிளாக் சரவுன்டிங்க்ஸ் உடன் கூடிய பெரிய கிரில் மற்றும் இரண்டு பக்கமும் சி-ஷேப்டு குரோம் பார்கள் மற்றும் முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்ள் உள்ளன. இது 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் சில்வர் ரூஃப் ரெயில்களும் உள்ளன. வெளிப்புற பெயிண்ட் ஆப்ஷன்கள் இரண்டு மாடல்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

உள்ளே இருக்கைகளில் பிளக் மற்றும் பிரெளவுன் நிற லெதரெட் அப்ஹோல்ஸ்டரியுடன் டூயல்-டோன் தீம் உள்ளது. இது 8-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் (ரியர்வியூ மிரர் உள்ளே) மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. இது கூல்டு க்ளோவ் பாக்ஸ், அதன் கீழே ஸ்டோரேஜ் உடன் கூடிய முன்பக்க ஆர்ம்ரெஸ்ட் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றுடன் வருகிறது. இது ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் வசதியையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க: நவம்பர் மாதம் டாப் 20 நகரங்களில் உள்ள சப்-4எம் எஸ்யூவி -களுக்கான காத்திருப்பு கால விவரங்கள்

6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) போன்ற வசதிகளுடன் பாதுகாப்புத் தொகுப்பு ஒரே போல உள்ளது.

2024 மேக்னைட்டில் 1-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்ளது. விரிவான விவங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

72 PS

100 PS

டார்க்

96 Nm

160 Nm (MT), 152 Nm (CVT)

டிரான்ஸ்மிஷன்*

5-ஸ்பீடு MT/5-ஸ்பீடு AMT

5-ஸ்பீடு MT/CVT

* AMT = ஆட்டோமெட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன், CVT = கன்ட்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்

இந்தியா-ஸ்பெக் நிஸான் மேக்னைட்: போட்டியாளர்கள்

2024 நிஸான் மேக்னைட் ஆனது ரெனால்ட் கைகர், ஸ்கோடா கைலாக், ஹூண்டாய் வென்யூ, சோனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO மற்றும் மாருதி பிரெஸ்ஸா போன்ற மற்ற சப்காம்பாக்ட் எஸ்யூவி -களுடன் போட்டியிடுகிறது. இது மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா டெய்சர் போன்ற சப்-4 மீ கிராஸ்ஓவர்களுக்கு போட்டியாகவும் இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: மேக்னைட் ஏஎம்டி

Share via

Write your Comment on Nissan மக்னிதே

H
harichandra mohan ghadi
Nov 22, 2024, 9:58:45 PM

I purchase xe variant in 2023

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
எலக்ட்ரிக்
Rs.48.90 - 54.90 லட்சம்*
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.21.90 - 30.50 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை